Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா கனாக்கள்
#8
<img src='http://www.kumudam.com/eelam/010404/pg1t.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:brown'><b>இலங்கை இனப் பிரச்னையில் பாரபட்சமற்ற பார்வையைக் கொண்டிருக்கும் வெகுசில சிங்கள முற்போக்கு இயக்குநர்களில் சோமரத்னே திசயனாயக்கேயும் ஒருவர். பெரோஸ் போன்ற சென்ற தலைமுறை இயக்குநர்கள், உள்ளூரில் எதுவுமே நடக்காததுபோல் தம்போக்கில் படமெடுத்துக்கொண்டிருக்க அசோகா ஹண்டகாமா, பிரசன்னா விதானாகே, திசயனாயக்கே போன்ற சிலர்தான் பிரச்னையை தமக்கே உரிய தனித்துவமான பார்வையுடனும் சமூக அக்கறையுடனும் கையாண்டுள்ளனர். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு தன், 'லிட்டில் ஏஞ்சல்' படத்தோடு வந்திருந்தார் திசயனாயக்கே. 'லிட்டில் ஏஞ்ச'லுக்காகவும் சர்வதேச அளவில் ஒன்பது விருதுகளைப் பெற்றுள்ள அவரது முந்தைய படமான, 'சரோஜா'வுக்காகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு உரையாடலைத் தொடங்கினோம்.</b>

வசந்தகுமார்: பெரோஸ் போன்றவர்களைப் போல் இல்லாமல் இலங்கை தேசிய இனப் பிரச்னையைச் சார்ந்த சினிமாவைத் தேர்வு செய்தது ஏன்? அல்லது இதில் நாட்டம் ஏற்பட என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

திசயனாயக்கே: <b>தன்னைச் சுற்றி நிகழ்பவைகள்பால் ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருப்பதும், அதைத் தன் படைப்புகளில் பிரதிபலிப்பதும் ஒரு கலைஞனின் கடமை என்று நினைக்கிறேன்.</b> அந்த வகையில் ஒரு கலைஞனாக இலங்கை தேசிய இனப் பிரச்னையை என்னால் எளிதில் புறக்கணிக்க முடியாது. சிங்களர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்; மனிதர்கள்தான். நம்மால் இலங்கையில் சமாதானத்தோடும் அமைதியோடும் வாழ முடியும் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல நான் விரும்பினேன். அப்படித்தான் என்னுடைய முதல் படமான 'சரோஜா' உருவானது.

வசந்தகுமார்: உங்களது இரண்டு படங்களுமே குழந்தைகளின் உலகைப் பற்றியவை. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?

திசயனாயக்கே: குழந்தைகள்தான் பெரியவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள். அவர்களால் ஒன்றாகச் சேர்ந்து நட்புடன் வாழ முடியும்போது, ஏன் பெரியவர்களால் முடியாது? எனவே, என் இரண்டு படங்களிலும் தமிழ், சிங்கள குழந்தைகளின் நட்பைப் பயன்படுத்தினேன்.

வசந்தகுமார்: 'லிட்டில் ஏஞ்சலில்' பெரைரா என்கிற சிங்கள எஸ்டேட் அதிபர் கதாபாத்திரம் தொடக்கத்தில் தமிழின விரோதத் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால், இறுதியில் அவரிடம் வேலை பார்க்கும் தமிழரான வேலு, கலவரத்தில் சிக்கிக்கொள்கிற போது, பெரைரா அவரைக் காப்பாற்ற முயல்கிறார். இது நம்பும்படியாக இல்லையே?

திசயனாயக்கே: பெரைரா கதாபாத்திரம் இனவாதத் தன்மை கொண்டதே. ஆனால், வேலுவின் மகள் மூலம்தான் அவரது மகன் பேசத் தொடங்கினான், சாதாரண நிலைக்குத் திரும்பினான் என்பது தெரியவரும்போது, அவர் தன் நிலையை மாற்றிக் கொள்கிறார். அவர் அந்த தமிழ்ச் சிறுமியை நேசிக்கத் தொடங்கியதும் நாட்டின் நிலைமையே மாறிவிடுகிறது. சுயநலம் பொருட்டுதான் அவர் மனம் மாறுகிறார் என்றாலும், அவரும் ஒரு சாதாரண மனிதன்தான்.

வசந்தகுமார்: 'லிட்டில் ஏஞ்சலை' நான் இப்படி உள்வாங்கிக் கொள்கிறேன். பெரைரா, ஆட்சியாளர்களையும், தமிழ்ச் சிறுமி தமிழர்களையும், பெரைராவின் மகனான பிரச்னைக்குரிய சிறுவன் இலங்கை தேசத்தையும் பிரதிபலிக்கிறார்கள். சிறுமியின் முயற்சியால்தான் சிறுவன் சுமுகமான நிலைக்கு வருகிறான். இனபேதம் மறைந்து அமைதி திரும்புகிறது. ஆனால், சிறுமி அங்கிருந்து சென்றதும் சிறுவன் பழையபடி கலவர மனநிலைக்குத் திரும்பி விடுகிறான். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இலங்கையில் சுமுகமான சூழல் நிலவ தமிழர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என்பதுதானே உங்கள் நிலைப்பாடு?

திசயனாயக்கே: மிகவும் சரி. அரசியல்வாதிகள் சுயநலமிகள். அவர்களது நலனுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள். மக்களின் இரக்கத்தை ஈன்று பெற்று அரசியல் நலனைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள் அவர்கள். இலங்கையில் என்ன நடக்கிறதோ அதைத்தான் நான் படத்தில் பிரதி பலித்தேன்.

ஆனால் பெரைரா, அவரது மகன், சிறுமி இவர்கள் மூவரையும் முழுமையாக சிங்கள, தமிழ் சமூகத்தைப்பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது. சிறுவனும் சிறுமியும் வெவ்வேறு இனத்தினராக இருந்தாலும், அவர்களுக்கு இடையேயான நட்புக்கு அது ஒரு தடையாக இல்லை. சிறுவனின் வீட்டில் ஆடம்பர, விலையுயர்ந்த விளையாட்டுச் சாதனங்கள் நிறைய உள்ளன. ஆனால் அவனுக்கு அது போதுமானதாக இல்லை. அதையெல்லாம் கடந்த அன்பும் நேசிப்பும் அவனுக்குத் தேவை. அது அந்தச் சிறுமியிடம் ஏராளமாக இருக்கிறது. அன்புக்கும் நட்புக்கும் இனப்பாகுபாடு கிடையாது என்பதுதான் நான் சொல்ல விரும்பியது.

வசந்தகுமார்: இந்தப் படத்தின் பிரதான பின்னணி 1983_இனப்படுகொலை; பதின்மூன்று சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து தமிழர்கள் பழிவாங்கப்பட்டதும்தான். இலங்கை வரலாற்றின் அழிக்க முடியாத கறை இது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறந்து போன அதனை மறுபடியும் நினைவுபடுத்துவது இலங்கையில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகாதா?

திசயனாயக்கே: இலங்கையில்கூட சிலர் இதனையே கேட்டனர். ஆனால் நான், இப்படம் பேச்சுவார்த்தைக்கு உறுதுணையாக இருக்கும் என்றுதான் கருதுகிறேன். இனப் பிரச்னை எவ்வளவு அசிங்கமானது, தேவையற்றது என்பதை இப்படம் மக்களுக்கு உணர வைக்கும். பதின்மூன்று பேரின் கொலைக்குப் பழிவாங்க பல்லாயிரக்கணக்கான தமிழர்களைச் சிங்களர்கள் கொன்று குவித்தனர். இதை இப்போது சுட்டிக்காட்டுவதன் மூலம், மக்களிடம் இது மறுபடியும் நிகழக்கூடாது என்கிற எண்ணமும் அதன்பால் வெறுப்புணர்வும் ஏற்பட வழி செய்யமுடியும். நாம் இப்போது சில நேரங்களில் ஹிட்லரைப் பற்றிப் பேசுகிறோம். அவர் செய்தது சரி என்று சொல்லவா? அல்ல; அதை ஞாபகப்படுத்துவதன் மூலம் அதன் தீயப் பக்கத்தைக் காட்டவே.

பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதே! அதுவே நல்ல விஷயம்தான். ஜனாதிபதி தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும், பிரதம மந்திரி தனக்குத்தான் அதிக அதிகாரம் என்று சொன்னாலும் தமிழ், சிங்கள பொதுமக்களைப் பொறுத்தவரைக்கும் சமாதானம் தேவைப்படுகிறது என்பது நிதர்சனம். எனவே ஒரு சில மாதங்களில் பேச்சுவார்த்தை நல்ல ஒரு முடிவை அடையும் என்றே எதிர்பார்க்கிறேன். அவர்களால் பின்னோக்கிப் போருக்குச் செல்லமுடியாது. மீறி அவர்கள் போர்க்களத்துக்குச் சென்றால் அனைவரும் அவர்களை வெறுப்பர்.

வசந்தகுமார்: 'சரோஜா,' 'லிட்டில் ஏஞ்சல்' இரண்டுக்கும் மக்கள் மத்தியில் எந்த விதமான எதிர்வினை இருந்தது?

திசயனாயக்கே: இரண்டுமே பொது மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன. ஆனால் இரண்டு தரப்பிலும் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் வந்தன.

வசந்தகுமார்: 'சரோஜா'வில் இறுதிக்காட்சியில் தமிழ்ப் போராளிகள் மனம் திருந்தி சிங்களவர்களுடன் இணைந்துகொள்ளும்போது, சிங்களர்கள் அவர்களை சுவீகரித்துக் கொள்வதாகவும், ஆனால் தமிழ்ப் போராளிகளால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாகவும் காண்பித்திருக்கிறீர்களே?

திசயனாயக்கே: அப்படி நிகழ்ந்தது. அதைத்தான் காண்பித்தேன். எதிர்த் தரப்பினரோடு சென்று கலந்துவிடுவதை தமிழ்ப் போராளிகள் விரும்பமாட்டார்கள். நான் சிங்களவனாக இருந்தாலும் சிங்களர்கள் செய்யும் எல்லாவற்றையும் சரி என்று ஒப்புக்கொள்ள மாட்டேன். அதைப்போல் தமிழ்ப் போராளிகள் செய்பவற்றையும் நூறு சதவீதம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர்கள் போராட்டத்துக்கு நியாயமான சில பிரச்னைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவை தீர்க்கப்பட வேண்டும். அந்த விஷயத்தில் இலங்கை அரசு அதை அணுகியவிதம் தவறானது.

வசந்தகுமார்: இந்த இரண்டு படங்களுக்கும் இலங்கை அரசின் சென்சார் சான்றிதழ் பெறுவதில் தடங்கல் இருந்ததா?

திசயனாயக்கே: 'சரோஜா'வில் சில பகுதிகளை நீக்கச் சொல்லி என்னைக் கேட்டனர். அதற்கு தகுந்த பதில்களைக் கூறி, அவர்களுடன் விவாதித்து, அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டேன். 'லிட்டில் ஏஞ்சலி'ல் 1983 கலவரத்தை லேசாக செதுக்கச் சொன்னார்கள். நான் அவர்கள் சொன்னபடியே செய்தேன். ஆனால் இனி வருங்காலத்தில் அவர்கள் என்ன தலையீடு செய்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

வசந்தகுமார்: இரண்டு படங்களுக்குண்டான முதலீட்டுக்கு என்ன செய்தீர்கள்?

திசயனாயக்கே: ஆஸ்திரேலியாவில் குடியிருக்க எனக்கு ஒரு வீடு இருந்தது. அதை விற்று, அதோடு என்னிடமிருந்த கொஞ்சம் பணத்தையும் சேர்த்து, எண்பது லட்ச ரூபாய் முதலீட்டில் 'சரோஜா'வைத் தயாரித்தேன். அது வணிகரீதியாக வெற்றி பெற்றது. அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, விற்ற வீட்டை வாங்குவதற்குப் பதிலாக, 'லிட்டில் ஏஞ்ச'லுக்கு முதலீடு செய்தேன். இதிலிருந்து கிடைத்த பணத்தை, எனது சமீபத்து படமான 'ஃபைவ் ஃபைட்டரி'ல் முதலீடு செய்துவிட்டேன். இது இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வசந்தகுமார்: இந்தியத் திரைப்படங்கள் குறித்த தங்கள் கருத்து என்ன?

திசயனாயக்கே: இந்தியத் திரைப்படங்களுக்கு என்று ஒரு தெளிவான பாதை இருக்கிறது. அது 'கமர்ஷியல்' பாதை. திரைப்படத் தொழில் உயிர்ப்புடன் இருக்க இதுபோன்ற படங்கள் தேவைப்படுகின்றன. ஆனாலும் கமர்ஷியல் படங்களோடு என்னால் ஒத்துப் போகமுடியாது. இந்தியாவில் அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜிகரூன் போன்ற வெகு சிலரைத் தவிர பெரும்பாலோர் மும்பை ரகப் படங்களைத்தான் செய்கிறார்கள். இதில் கலைத்துவ, 'கமர்ஷியல்' விஷயங்களைக் கலந்த மணிரத்னம் போன்றவர்களின் படங்களை நான் வரவேற்கிறேன். </span>

நன்றி: யாழ்மணம்

[quote][size=13]குறிப்பு: நமது படைப்பாளிகளுக்கு இக் கட்டுரை வழி எதையாவது பெறலாம் என்ற நோக்கில் இப்பகுதியில் இடம்பெறச் செய்கிறேன்.

அனைத்து படைப்பாளிகளும் வேதனை தரும் அனுபவங்களைப் பெற்ற பின்தான் நிலைக்கிறார்கள். வெற்றி பெற்ற எந்த ஒரு மனிதனும் இதிலிருந்து நிச்சயம் விலக்குப் பெற முடியாது.

உருப்படியான படைப்புகளைத் தரும் ஒருவர் உருவானால் முன்னயவர் பின் தள்ளப்படுவதையும் எவராலும் தடுக்க முடியாது.

ajeevan
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 04-08-2004, 02:29 AM
[No subject] - by Eelavan - 04-08-2004, 03:45 AM
[No subject] - by AJeevan - 04-08-2004, 11:56 AM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 12:25 PM
[No subject] - by AJeevan - 04-24-2004, 07:59 PM
[No subject] - by AJeevan - 04-26-2004, 02:44 PM
[No subject] - by vasisutha - 04-27-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 01:55 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 02:17 PM
[No subject] - by AJeevan - 05-03-2004, 12:43 PM
[No subject] - by Mathan - 05-04-2004, 02:17 PM
[No subject] - by sOliyAn - 05-04-2004, 04:49 PM
[No subject] - by AJeevan - 05-04-2004, 11:01 PM
[No subject] - by sOliyAn - 05-05-2004, 12:53 AM
[No subject] - by Eelavan - 05-05-2004, 02:37 AM
[No subject] - by Eelavan - 05-05-2004, 02:38 AM
[No subject] - by AJeevan - 05-05-2004, 09:53 AM
[No subject] - by Mathan - 05-05-2004, 10:59 AM
[No subject] - by AJeevan - 05-05-2004, 11:36 AM
[No subject] - by AJeevan - 06-02-2004, 01:27 PM
[No subject] - by Mathivathanan - 06-02-2004, 01:44 PM
[No subject] - by Mathan - 06-02-2004, 02:38 PM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:55 PM
[No subject] - by shanmuhi - 06-02-2004, 05:09 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 05:38 PM
[No subject] - by vasisutha - 06-03-2004, 12:10 AM
[No subject] - by Mathan - 06-03-2004, 04:08 AM
[No subject] - by Chandravathanaa - 06-03-2004, 07:17 AM
[No subject] - by sOliyAn - 06-03-2004, 08:03 AM
[No subject] - by AJeevan - 06-15-2004, 01:56 AM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:16 PM
[No subject] - by AJeevan - 07-06-2004, 03:39 AM
[No subject] - by sOliyAn - 07-06-2004, 02:36 PM
[No subject] - by AJeevan - 07-06-2004, 07:37 PM
[No subject] - by sOliyAn - 07-06-2004, 09:30 PM
[No subject] - by AJeevan - 07-07-2004, 01:15 AM
[No subject] - by AJeevan - 07-10-2004, 02:03 PM
[No subject] - by sOliyAn - 07-12-2004, 08:48 AM
[No subject] - by AJeevan - 07-12-2004, 11:24 AM
[No subject] - by பரஞ்சோதி - 08-21-2004, 05:23 PM
[No subject] - by AJeevan - 08-22-2004, 12:32 AM
[No subject] - by sOliyAn - 08-22-2004, 02:51 AM
[No subject] - by Mathivathanan - 08-22-2004, 03:12 AM
[No subject] - by sOliyAn - 08-22-2004, 06:14 AM
[No subject] - by AJeevan - 08-22-2004, 04:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)