07-05-2003, 07:09 PM
sOliyAn Wrote:நான் இங்கே ஒரு காட்சியை விபரிக்கப் போகிறேன்.. தயவுசெய்த கமரா கையாளும் அனுபவம் உள்ளவர்கள்மாத்திரம் அறிவுரையோ.. வழிகாட்டலோ.. ஆலோசனையோ தாருங்கள்..
கதாநாயகி கணவனால் அடக்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்தால் ஐரோப்பிய நாடொன்றில் வெளியுலகம் தெரியாதவளாக இருக்கிறாள்.. அதாவது கடைக்குச் செல்வதற்குக்மகூட தனியாக செல்ல முடியாத நிலையில் இருக்கிறாள்.. விபத்தில் கணவன் இறந்த செய்தி தொலைபேசிமூலம் வருகிறது.. இப்போழுது அவள் முதன்தமுதலான தானாகச் செயற்பட வேண்டிய கட்டாயம்.. இங்கே வசனம் எதுவுமே இல்லை.. தயக்கம்.. பயம்.. விரக்தி.. ஒரு உறுதி.. இந்த உணர்வுகள் முகத்தில் பிரதிபலிக்கிறது.. அடியெடுத்து நடந்து கதவைத் திறக்கிறாள்.. பளீரென வெளி வெளிச்சம் உள்ளே பரவுகிறது.. அவள் அந்த ஒளியுள் கலக்கிறாள்..
இதுதான் காட்சி.. இங்கே கமராவுக்கம் இசைக்கும்தான் வேலை.. அவைதான் இந்த காட்சியின் பொருளைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும்.. எப்படி எப்படி காட்சிகளை அமைத்து.. எவ்வாறு பொருத்த வேண்டும்.. (என்ன இளங்கோ அவர்களே?!!) விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் உதவியாக இருக்கும்.. இந்தக் காட்சியை வேறு எவரும் பாவிக்கமாட்டார்கள்தானே?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் தெரிவித்த காட்சியை உருவாக்க : கமராவுக்கும் இசையுக்கும்தான் வேலை என்று எழுதியிருக்கிறீர்கள்.
ஆனால் என்னைப் பொறுத்த வரை இக்காட்சிக்கு இயக்கம்- ஒளிப்பதிவு-ஒளியமைப்பு- இசை- தொகுப்பு -கலை இயக்கம் மற்றும் பிரதானமாக அக் கதாபாத்திரத்தின் நடிப்பிலும்தான் அக் காட்சி உயிர்பெறும்என நினைக்கிறேன்.
----------------------------------------------------------------------
தொலைபேசி வருவதிலிருந்து காட்சியை எப்படி நகர்த்துவதென்று யோசித்தால்:-
- தொலைபேசி ஒலிக்க்கிறது.
- கதாநாயகி மகிழ்ச்சியுடன் வந்து தொலைபேசியில் பேச முயல்கிறாள்.
-ஆனால் அவள் காதில் விழும் செய்தி அவளது கணவன் விபத்தில் இறந்துவிட்டான் என்பது.
(இங்கே இச் செய்தியைத் தெரிவிப்பவர் கதாநாயகிக்குத் தெரிந்தவராக இருந்தால் அவளது மாற்றங்கள் மெதுவாகவும் ஆச்சரிமாகவும் தொடங்கி சோகத்தை எட்டலாம்.
அப்படியின்றி செய்தியைத் தெரிவிப்பவர் பொதுவான ஒருவராக இருப்பின் அது நேரடியான தாக்கத்தைக் கொடுக்கலாம்.
இவற்றை நிர்ணயிக்கும் பொறுப்பு கதாசிரியர்-இயக்குனர்- மற்றும் கதையின் ஓட்டத்தைப் பொறுத்தது)
கணவனது மரணச் செய்தியினால் கதாபாத்திரத்தின் மனதில் ஏற்படும் அதிர்ச்சி-அதனால் ஏற்படும் சோர்வு-சோர்வினூடாக அவள் மனதில் ஏற்படும் அனாதரவான நிலை - இதுவரை உலகம் புரியாத பாவியாக இருந்து தனிமரமாகிவிட்ட வேதனை- அந்த வேதனையை பகிர்ந்து கொள்ள எவருமில்லாத பாவியெனக் கலங்குவதால் அவள் மேல் அவளுக்குள் ஏற்படும் கோபம்-அந்தக் கோபத்துக்குள்ளாக வெளிப்படும் தளர்ச்சி.
தளர்வுற்ற நடையுடன் அவள் வந்துகதவைத் திறக்கிறாள்.
அவளது அறைக்குள் வெளிச்சம் பரவுகிறது.
இங்கே அக் கதாபாத்திரம் தனது பகுதியை உணர்ந்து நடிக்க வேண்டும்.
இதை விபரித்து செயல்படுத்தும் பொறுப்பு இயக்குனருடயது.
இங்கே அவள் வெளிச்சத்துள் கலக்கிறாள் என்பதில் நீங்கள் சொல்ல முனைவது என்ன?
1.முடக்கப்பட்டிருந்த ஒரு ஆத்மா வெளியுலகை தரிசிக்கிறது என்றா?
அல்லது
2.வெளியுலகினரால் பழிச் சொற்களுக்கு ஆளாகி எரிக்கப்படுகிறாள் என்று அர்த்தப்படுத்த விரும்புகிறீர்களா?
தெளிவு படுத்தினால் விளக்கம் தர இலகுவாக இருக்கும்.
---------------------------------------------------------------------
இதே போன்றதொரு காட்சி எச்சில் போர்வை (1997) குறும்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
அதாவது ஈழத்திலிருந்து அரசியல் தஞ்சம் கோரி சுவிசுக்கு வந்த ஒரு இளைஞன் தனது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் மன உழைவுகளால் பாதிக்கப்பட்டு அந்நாட்டை விட்டு காடுகளினூடாக நடந்து செல்லும் போது எதிரே மறையும் ஆதவனின் ஒளியினுள் சங்கமிப்பது போன்ற காட்சி இறுதிக் காட்சியாக வருகிறது.இக் குறும்படக் காட்சி வாயிலாக கதை நகர்த்தப் பட்டிருக்கும் விதத்திலிருந்து :-
1.அவன் வேறோர் நாட்டுக்குள் பிரவேசிப்பது போலவும்
2.அவன் தன்னை மாய்த்துக் கொள்வது போலவும்
இரு விதமான பிரமைகளை ஏற்படுத்துகிறது.
அதற்கான மற்றுமொரு காரணம் தாலாட்டொன்றுக்குள் அழுகுரல்கள் கேட்பது போன்ற பின்னணி இசை பாவிக்கப் பட்டிருப்பதால் இப்படியான இரு உணர்வுகளையும் உரவாக்குகிறது.
எனவே உங்கள் படைப்பில் உங்கள் முடிவு என்னவாக இருக்க விரும்புகிறீர்கள் என்று எழுதினால் விளக்க இலகுவாக இருக்கும்.
இருப்பினும்
உங்கள் முயற்சியும்
உங்கள் படைப்பும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

