04-22-2004, 10:25 AM
[align=center:77d4360876]<img src='http://www.kumudam.com/reporter/250404/pg8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:77d4360876]
<span style='font-size:22pt;line-height:100%'><b>பா.ராகவன்</b></span>
ஒசாமா பின்லேடனைக் கொல்வதற்கு, சி.ஐ.ஏ.வுக்கு முழு அதிகாரம் அளித்தார் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம். பிடித்துக்கொடுப்பவருக்குப் பரிசு அளிக்கலாம். தாமே பிடித்தாலும் வெகுமதிகள் உண்டு. முழு லைசென்ஸ்! ஆனால் இது எப்படி இருந்தது என்றால், மொபெட் ஓட்டத் தெரியாதவனுக்கு லாரி ஓட்டுவதற்கு லைசென்ஸ் வழங்கிய மாதிரி இருந்தது!
சி.ஐ.ஏ. மிகப்பெரிய அமைப்புதான். புத்திசாலிகளை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பணியாற்ற வைத்திருந்தார்கள் தான். கோடிக்கணக்கான டாலர்கள் அதற்காகவே வருஷம்தோறும் ஒதுக்கிக்கொண்டிருந்தது அமெரிக்க அரசு. அந்த அமைப்பினர் கேட்டவுடனே அல்ல; நினைத்தவுடனேயே எது வேண்டுமானாலும் கிடைத்துவிடும். அப்படியரு சலுகை உண்டு அதற்கு. மேலும் போலீஸ், ராணுவம் என்கிற இரு அமைப்புகளும் சி.ஐ.ஏ.வுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்றொரு எழுதப்படாத உத்தரவும் அப்போது அமெரிக்காவில் இருந்தது. சி.ஐ.ஏ.வைவிடப் பலமடங்கு சிறப்புகள் வாய்ந்த இன்னொரு உளவு அமைப்பான எஃப்.பி.ஐ.க்குக் கூட இத்தனை சலுகை இல்லை அப்போது.
எத்தனையோ விஷயங்களில் சி.ஐ.ஏ. குறிப்பிடத் தகுந்த சாதனைகள் புரிந்திருந்ததற்கான பரிசுகள் அவை.
<img src='http://www.kumudam.com/reporter/250404/pg8.jpg' border='0' alt='user posted image'> ஆனால் ஒசாமா பின்லேடன் விஷயத்தில் மட்டும் தமது புலனாய்வில் ஓரடிகூட அவர்களால் அப்போது முன்னேற முடியவில்லை என்பதுதான் உண்மை. முதன்முதலில் சவுதி அரேபியாவிலிருந்து புறப்பட்டு பாகிஸ்தானுக்கு ஒசாமா ரகசியப் பயணம் மேற்கொண்ட தினத்திலிருந்துதான் அவர்களும் அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், பத்து வருடங்களில் உருப்படியாக ஒரு தகவலைக்கூட அவர்களால் ஒசாமா குறித்துச் சேகரிக்க முடியவில்லை. அவரது அடுத்த 'மூவ்' இன்னதுதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடிந்ததேயில்லை. ஒசாமாவின் படைபலம், ஒவ்வொரு நாட்டிலும் அவருக்கு இருந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை, நிதியுதவி வருகிற பாதைகள், ஆயுதங்கள் போகிற பாதைகள், ஹைடெக் எலக்ட்ரானிக் உபகரணங்கள் கிடைக்கிற வழிகள், சாட்டிலைட் தொலைத்தொடர்பு வசதிகள், புதிய திட்டங்கள் என்று எதுவுமே சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாமலேயே இருந்தது அதுவரை.
ஐந்து வருடங்களுக்கு முந்தைய சி.ஐ.ஏ.வின் _ ஒசாமாவின் மீதான கணிப்புகளும் அதே காலகட்டத்தில் ஒசாமா சம்பந்தப்பட்ட உண்மை நிலவரங்களும் அதிர்ஷ்டவசமாக இன்று அப்படி அப்படியே இணையத்தில் கிடைக்கின்றன. இரண்டையும் ஒப்பிட்டு நோக்கினால் சிரிப்புதான் பொத்துக்கொண்டு வரும்! இதற்கான காரணமும் வெட்டவெளிச்சமானது. கொஞ்சம் பரிதாபகரமானதும்கூட.
தொண்ணூறுகளின் இறுதியிலேயே தகவல் தொழில்நுட்ப விஷயங்களில் தன்னிறைவுக்கு மேலான தரத்தை எட்டிப்பிடித்திருந்தது அமெரிக்கா. ஒசாமா என்றில்லை, கடவுளேகூட எங்கே இருக்கிறார் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து கண்டுபிடித்துவிட முடியும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. காரணம், செயற்கைக்கோள்கள் விஷயத்தில் அமெரிக்கா அடைந்திருந்த பிரமிக்கத்தகுந்த வளர்ச்சி.
செயற்கைக்கோள்கள் மட்டுமல்ல... எதிரிகளின் தொழில்நுட்ப நெட்_ஒர்க்கை உடைத்து உள்ளே போய்ப் பார்க்கிற டெக்னாலஜியில் அமெரிக்கர்கள் அப்போது சூரர்களாக இருந்தார்கள். ரேடியோ, தொலைபேசி, மின்னஞ்சல், இணையதளங்கள் என எந்த அலைவரிசையில் யார் இயங்கிக்கொண்டிருந்தாலும் எவ்வித சிரமமும் இல்லாமல் வழியில் குறுக்கே புகுந்து செய்தியை அவர்களால் சுலபமாக ஊடுருவ முடிந்தது.
பொதுவாக தீவிரவாத இயக்கங்கள் தமக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள இணையத்தில் ரகசிய இடம் ஏற்படுத்தி, கடும் பாதுகாப்பு வளையங்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு பேசுவார்கள். ஒரு சாதாரண ஈமெயில் அனுப்பவே யூசர் நேம், பாஸ்வேர்டு வேண்டும். இணையம் எத்தனைக்கெத்தனை சுதந்திரமான தளமோ, அத்தனைக்கத்தனை அணுக முடியாத தளமாகவும்கூட அதனைப் பயன்படுத்த முடியும். அப்படிப்பட்ட பாதுகாப்பு வளையங்களைக்கூட உடைத்து உள்ளே போய்த் தகவல் பெறத்தக்க வகையில் வளர்ச்சியுற்றிருந்தது அமெரிக்க தொழில்நுட்பத்துறை. என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல்களை உடைத்துப் பெறும் தொழில்நுட்பத்தில் ராட்சஸ வளர்ச்சி கண்டிருந்தார்கள்.
இந்த பலம்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய பலவீனமும்கூட. குறிப்பாக, ஒசாமா விஷயத்தில்!
ஒசாமா பின்லேடனைப் பற்றிய விஷயங்களை அறியவும் அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மேற்சொன்ன தொழில்நுட்பங்களை, அதன் முழு அளவில் அன்றைக்குப் பயன்படுத்திக்கொண்டிருந்தது சி.ஐ.ஏ. அதன்மூலம் கிடைக்கிற தகவல்களைத்தான் வேதமாகவும் நினைத்து, அதனடிப்படையிலேயே ரிப்போர்ட்டுகளும் அனுப்பிக்கொண்டிருந்தது, அரசுக்கு.
அவர்கள் செய்யத்தவறியது ஒன்றே ஒன்று! ஒசாமா சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தர, உரிய ஒற்றர்களை ஏற்பாடு செய்யாமல் விட்டது! தொழில்நுட்பத்தைவிட இது விஷயத்தில் சில மனிதர்கள்தான் நம்பகமான தகவல்களைத் தரமுடியும் என்று அவர்களுக்குத் தோன்றவேயில்லை. அதுதான் ஒசாமாவுக்கு மிகப்பெரிய பலமாகிவிட்டது!
ஒசாமா பின்லேடன் ஒரு பெரிய டெக்னீஷியன் இல்லை. ஆனால், மிகத் தேர்ந்த பல தொழில்நுட்ப வல்லுநர்களை அவர் தமக்கு ஆலோசகர்களாக வைத்திருந்தார். அமெரிக்க அரசு, டெக்னாலஜியைப் பயன்படுத்தித்தான் தமது திட்டங்களை அறிந்துகொள்ள முயற்சி செய்கிறது என்பது தெரிந்தவுடனேயே, தமது தகவல்தொடர்பு விஷயங்களை ஆப்கன் மலைப்பகுதிகளில் ஆடு, மாடு, கழுதை மேய்க்கும் பையன்களைக் கொண்டே அவர் செய்ய ஆரம்பித்தார். தமது சாட்டிலைட் தொலைபேசியையும் இணைய உரையாடல்களையும் சும்மா நலன் விசாரிக்கும் காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தார். இந்த விஷயம் வெகுநாட்களுக்கு அமெரிக்காவுக்குத் தெரியாமலேயே இருந்தது. சமீபத்தில் ஆப்கன்மீது போர் தொடுக்கிற வரையிலும்கூட ஒசாமாவின் சாட்டிலைட் தொலைபேசி உரையாடல்கள் பற்றி கச்சாமுச்சாவென்று என்னென்னவோ தகவல்கள் வந்துகொண்டே இருந்தன.
உண்மையில் ஒசாமா, தமது சாட்டிலைட் தொலைபேசியையெல்லாம் உறைபோட்டு மூடிவைத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. என்கிரிப்டட் ஈமெயில்கள் அனுப்புவதை அவர் நிறுத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அல்கொய்தாவைச் சேர்ந்தவர்கள், ஈமெயில் மூலம் தகவல் அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்கிறது, அந்த நெட்_ஒர்க்கின் இயல்பறிந்த வட்டாரம்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கென்யாவிலும் தான்ஸானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் குண்டுவைத்த பிறகு, ஒசாமாவுக்கு உடல்நலன் கொஞ்சம் சீர்கெடத் தொடங்கியிருந்தது. அதாவது, அவரைக் கொல்வதற்கு சி.ஐ.ஏ.வுக்கு முழு அதிகாரம் கிடைத்த தினத்துக்கு மிகச் சில நாட்களில் கண்டறியப்பட்ட உண்மை இது.
திடீர் திடீரென்று அடிவயிற்றில் சுரீரென்று ஏற்பட்ட வலியால் அவர் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுநீரகத்திலும் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஒசாமாவின் வலதுகரமான அல் ஜவஹரி, எகிப்திலிருந்து சில தேர்ந்த டாக்டர்களை ஆப்கன் வரவழைத்து, ஒரு கம்ப்ளீட் செக்_அப்புக்கு ஏற்பாடு செய்தார்.
பரிசோதனையின் முடிவில் ஒசாமாவுக்கு மிகத்தீவிரமான சில உபாதைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை...
1. சிறுநீரகக் கோளாறு. ஒரு சிறுநீரகம் முக்கால்வாசி பழுதடைந்திருந்தது.
2. வயிற்றில் கற்கள் மற்றும் கட்டி.
3. குறைந்த ரத்த அழுத்த நோய்.
4. தண்டுவடத்தில் டிஸ்க் கொலாப்ஸ் ஆகியிருந்த காரணத்தால் ஏற்பட்ட தீவிரமான முதுகுவலி.
<img src='http://www.kumudam.com/reporter/250404/pg8-1.jpg' border='0' alt='user posted image'> இதில் வயிற்றிலிருந்த கட்டி மட்டுமே சுலபத்தில் குணப்படுத்தக்கூடிய விஷயம் என்று எகிப்து டாக்டர்கள் சொன்னார்கள். தண்டுவடப் பிரச்னைக்கு ஒரு ஆபரேஷன் அவசியம். சிறுநீரகக் கோளாறுக்கு டயாலிசிஸ் முக்கியம். லோ ப்ளட் பிரஷர் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வருவது. அதனைச் சில மாத்திரைகளின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால், பரிபூரண ஓய்வு மிகவும் அவசியம்.
ஓய்வா? ஒசாமா சிரித்தார். "நான் ஓரிரு வருடங்களுக்குள் அமெரிக்காவை முற்றிலுமாக அழித்துவிட உத்தேசித்திருக்கிறேன். அதற்குள் நான் தேறி எழுந்தாக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்" என்று சொன்னார்.
முதலில் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஒசாமா என்ன ஆஸ்பத்திரிக்குப் போய் அட்மிட் ஆகியா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ள முடியும்? மேலும் அன்றைக்கு ஆப்கனிஸ்தானில் இருந்த எந்த மருத்துவமனையிலும் ரத்த சுத்திகரிப்புக் கருவி கிடையாது. போவதென்றாலும் ஏதாவது வெளிநாட்டுக்குத்தான் போக வேண்டும். இதெல்லாம் நடக்கிற கதையில்லை அல்லவா?
ஆகவே, ஒசாமா ஓர் உத்தரவிட்டார். அமெரிக்காவிலிருந்து இரண்டு டயாலிசிஸ் கருவிகள் வாங்குவது! ஒன்று அவரது சொந்த உபயோகத்துக்கு. இன்னொன்று ஆப்கனிலுள்ள முக்கியமானதொரு மருத்துவமனைக்கு _ நன்கொடையாக!
இதுதொடர்பாக அவர் அமெரிக்காவிலுள்ள தமது இயக்கத்தைச் சேர்ந்த யாருடனும் தொலைபேசியில் பேசவில்லை. ஏர்மெயிலில் கடுதாசி அனுப்பவில்லை. ஈமெயில் ஏதும் அனுப்பவில்லை. மெசஞ்சரில் பேசவில்லை. இணையத்தைச் சுத்தமாகவே பயன்படுத்தவில்லை. ஆப்கனிலிருந்து யாரையாவது அமெரிக்காவுக்கு அனுப்பினாரா, அக்கம்பக்கத்து தேசத்திலிருந்து யாரையாவது அனுப்பினாரா என்றால் அதுவுமில்லை.
ஆனாலும் சரியாக முப்பத்துநான்கு தினங்களில் ஒசாமா இருந்த மலைக் குகைக்கு இரண்டு டயாலிசிஸ் கருவிகள் வந்து சேர்ந்தன! அமெரிக்காவிலிருந்துதான் அவை வந்தன. எப்படி இது சாத்தியம்?
அவரை இரவு_பகலாகக் கண்காணிப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த சி.ஐ.ஏ.வின் கண்ணைக் கட்டிவிட்டு எப்படி அவரால் இது முடிந்தது? அதுதான் ஒசாமாவின் பலம். அதுதான் அவரது பிரத்தியேகத் தொழில்நுட்பம்! "டெக்னாலஜியை முழுவதுமாகப் பயன்படுத்தக் கூடியவர்தான் ஒசாமா. ஆனால், டெக்னாலஜியைவிட மனிதர்களை அவர் அதிகம் நம்புகிறவர். மனிதர்களைக் காட்டிலும் கடவுளை நம்புகிறவர். இது சி.ஐ.ஏ.வுக்குப் புரியாது" என்று வெகுநாட்கள் கழித்து இதுபற்றிச் சொன்னார் அல் ஜவஹரி.
'ரிலே' ஓட்டம் மாதிரி ஒருவர் மாற்றி ஒருவராகவே கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக, நாடு நாடாகத் தகவலை நகர்த்தி, உரிய இடத்தில் தேவை குறித்த செய்தியைக் கொண்டு சேர்த்து, ரகசியப் பாதையில், வேண்டியதை விரும்பிய இடத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கும் ஒரு தனி கூரியர் சர்வீஸை ஒசாமா நடத்திக்கொண்டிருந்த விஷயம் அப்போதுதான் வெளியே தெரிந்தது!
தலையில் அடித்துக்கொண்டு உட்கார்ந்து மூக்கு சிந்தியது சி.ஐ.ஏ. இதில் மிகப்பெரியதொரு 'க்ளைமேக்ஸ் காமெடி' ஒன்றும் இருக்கிறது. ஆப்கனில், தாலிபன்களுக்கு எதிரான வடக்குக் கூட்டணிப் படை அரசு ஒன்று இருந்ததல்லவா அப்போது? அந்த நிர்வாகத்திடம் ஒரு நல்ல புலனாய்வுத்துறை உண்டு. மேற்கத்திய பாதிப்பு ஏதுமில்லாமல் மண்ணின் மணத்துடனேயே புலனாய்வு பயின்று தேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களை வளைத்து, ஒசாமாவைப் பற்றிய தகவல்களைக் கறக்கப் பார்த்தது சி.ஐ.ஏ.
ஒசாமா உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதையும் டயாலிசிஸ் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதையும் கரெக்டாக மோப்பம் பிடித்துச்சொன்ன அந்தப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இன்னொன்றையும் சொன்னார்கள்.
"நீங்கள் அதிகம் சிரமப்படவே வேண்டாம். வெறும் டயாலிசிஸ் கருவி வந்துவிட்டதாலேயே ஒசாமா பிழைத்துவிட முடியாது. இப்போது அவர் இருக்கிற நிலைமையில், இன்னும் நாலைந்து மாதங்கள்கூட உயிர் தரிக்க வாய்ப்பில்லை. இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகச் செயல்படாமல் போய்விட்டன. கொஞ்சநாள் பொறுத்திருங்கள். ஒசாமா இறந்துவிட்டார் என்று தானாகவே வரப்போகிற செய்தியுடன் ஊர் போய்ச் சேருங்கள்" என்று சொன்னார்கள்.
மிகவும் நம்பத்தகுந்த செய்திதான் இது என்று இன்னும் பல தரப்பில் விசாரித்து ஊர்ஜிதப்படுத்திக்கொண்டது சி.ஐ.ஏ. ஆகவே, மேற்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச முயற்சிகளையும் தூக்கிக் கிடப்பில் போட்டுவிட்டு ஜாலியாக இருந்தார்கள்.
அவர்களுக்கு ஒசாமா யார் என்று தெரியாதது மட்டுமல்ல... அவரது வலதுகரமான அல் ஜவஹரி யார் என்பதும் அப்போது தெரியவில்லை. இரண்டுமாத காலத்தில் அந்த நபர் ஒரு குட்டிச்சாத்தான் வேலையே செய்தார்!
மரணத்தின் வாசல்படியைத் தொட்டுவிட்டிருந்த பின்லேடனை இழுத்துப் பிடித்து மீட்டுக்கொண்டுவந்த ஜவஹரியின் வேலையை ஒரு சில வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது.
உண்மையில் அந்த மறுபிறவிக்குப் பிறகுதான், செப்டம்பர் பதினொன்று தாக்குதலுக்கான திட்டங்களை முழு வேகத்தில் தீட்டி, எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்து முடித்து, ஒரு "டிரையலும்" பார்த்தார் ஒசாமா.
அந்தப் "பரிசோதனை" முயற்சியில் ஒரு தலை விழுந்தது. அமெரிக்காவுக்கு மிகவும் வேண்டப்பட்ட தலை அது. அப்போதேகூட சி.ஐ.ஏ. விழித்துக்கொண்டு என்னவாவது செய்திருக்கலாம். அழகாகக் கோட்டை விட்டார்கள்.
(தொடரும்)
Kumudam.com