04-22-2004, 09:08 AM
புலம் பெயர் உறவுகளிடமும் ஊடகங்களிடமும் ஒரு வேண்டுகோள்
29.03.2004
கருணா அம்மான் மீதும் அவர்சார்ந்த கூட்டத்தினர் மீதும் நீங்கள் வெளிப்படுத்தும் கோபத்தை மட்டு அம்பாறை பிரதேசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியாக மாறிவிடவோ மாற்றிவிடவோ இம்மியளவும் இடமளிக்கவேண்டாம்.
காதாற்கேட்பதும் பொய், கண்ணாற் காண்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யாகும் என்பதற்கிணங்க மேலோட்டமான முடிவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இடமளிக்காது ஊடகங்களுக்கேயுரிய பத்திரிகைத் தர்மத்தை மறவாது செயற்படுமாறு தமிழ் அலை நிழற்பதிப்பின் ஆசிரியர் குழு அனைவரையும் வேண்டிநிற்கிறது.
இவ்வாறான வேளைகளில் தான் எரியும் தீயில் எண்ணெய் வார்த்து, போலி விசுவாசத்தை வெளியிடுபவர்கள் பற்றி அவதானமாக இருக்கவேண்டும். இவர்களின் எழுத்துக்களை உன்னிப்பாக ஆராய்ந்து வெளியிடுங்கள் வாசியுங்கள்.
எல்லா மனிதர்களும் அழுத்தங்களுக்கு ஒரே விதத்தில் முகம் கொடுப்பதில்லை.
எனவே, அழுத்தங்களுக்குள் ஊமைகளாய் இருப்பவர்களை எல்லாம் துரோகிகள் என்பதான தொனியில் முடிவுகட்டிவிடவேண்டாம்.
மட்டு அம்பாறை மக்கள் தெளிவாகவே உள்ளார்கள். தற்காலிக அழுத்தங்களினால் உண்மையின் குரல்கள் ஓங்கி ஒலிக்காவிடினும் இன்று எமது தெருக்களில் தேசியத்தைப் பறைசாற்றும் சுவரொட்டிகளும் விளக்கமளிக்கும் துண்டுப்பிரசுரங்களும் வெளியாகியுள்ளன. இதைக் கண்டு எமது மக்கள் ஆறுதலடைகிறார்கள்.
நன்றி தமிழ்அலை!
இதற்கு மதிப்பு கொடுத்தவர்களில் நானும் ஒருவன்!!!