04-21-2004, 12:20 PM
vanathi Wrote:அண்ணனுக்குத் தெரியும் தன்னோடு சேர்ந்து தாய் நிலத்தை மீட்க வந்தவர்கள் தவறான ஒருவரால் திசை மாற்றப்பட்டது.
சகோதர யுத்தமொன்றால் அநியாயமாக உயிர் நீத்தவர்களும் மாவீரர்களாக தலைவரால் அங்கீகரிக்கப்படுவார்கள்.
<span style='font-size:22pt;line-height:100%'>தாயக மீட்பொன்றுக்காக போராட வரும் எவரும் யாரிடம் இணையப் போகிறோமென்றோ அல்லது தமக்கு கிடைத்த தலைமை சரியா தவறா என்று பகுத்தாராய்ந்தோ செல்ல நேரம் கிடைப்பதில்லை.
சந்தர்ப்பம் சூழ்நிலை ஒருவனை அப்படியான ஒரு நிலைக்கு தள்ளி விடுகிறது. அதற்காக அப்பாவியான ஒருவனை அவனது தலைமையின் காரணமாக வெறுப்பது தவறு. அதற்கு அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் தலைமைகளே காரணம்................. விடுதலைப் புலிகள் தடம் புரண்ட போராளிகளை அரவணைத்துக் கொண்டதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி.
<i>நாட்டை விட்டு வெளி நாடு செல்லும் நாம் , எந்த நாட்டுக்கு போகப் போகிறோமென்றோ, ஒரு நிலையான வாழ்வு கிடைக்குமென்றோ நம்பி நம்மில் எவரும் பயணித்ததில்லை.
அதேபோல் , ஒரு பெண் ஒருவரை மணமுடிக்க அடுத்தவர் பேச்சைக் கேட்டு , ஒருவித குருட்டு நம்பிக்கையில் முகம் கூட தெரியாத ஒருவனை நம்பி நாட்டை விட்டு வெளியேறி, வருந்தும் நிலையில் வாழ்வது நம் கண்முன் தெரியும் நிஜங்கள்.........</i>
சிந்திக்கவும் செயலாற்றவும் கூடிய இவர்களே தடம்புரளும் போது, சிந்திக்க முடியாது, சில தவறான தலைமைகளை நம்பி மோசம் போனவர்களை மன்னித்து , அணைத்துக் கொண்டதில், வேதனைப்பட்ட பல கோடி உள்ளங்களை , விடுதலைப்புலிகள் நிம்மதி கொள்ளச் செய்திருக்கிறார்கள்.</span>

