04-21-2004, 10:54 AM
Quote:கருணா தரப்பில் உயிரிழந்தோரையும் மாவீரர்களாக அறிவிக்ககோரிக்கை தலைவரிடம் நேரில் தெரிவிப்பு, பரிசிலீக்கலாம் என அவர் பதில்
கருணா குழுவினரின் பிடியிலி ருந்து மட்டக்களப்பு, அம்பாறைப் பிர தேசங்களை மீட்ட சமயம் கருணா குழுவின் தரப்பில் உயிரிழந்த வீரர் களையும் மாவீரர்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு தலைவர் பிரபாகரனிடம் நேற்றைய சந்திப்பின் போது கோரிக்கை விடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ்க்கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள அரியநேந்திரன் இவ்வாறு கோரினார். எமது பிரதேசம் 41 நாள்கள் கருணாவின் கொடூரப்பிடியிலிருந்த சமயத்தில் நேர்ந்த அனர்த்தங்களுக் காக மட்டக்களப்பு மக்களின் சார்பாக உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். மட்டக்களப்பைப் புலிகள் மீண்டும் தம் வசப்படுத்திய சமயம் கருணா தரப்பில் உயிரிழந்தவர்களை யும் மாவீரர்களாக அறிவிக்க வேண் டும். விடுதலையை அடைவதற்காகவே அவர்களை அவர்களது பெற்றோர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அனுப்பி வைத்திருந்தனர். எனவே, அவர்களை மாவீரர்களாக அறிவிக்கும் படி தங்களை வேண்டுகிறேன் - என்று தலைவர் பிரபாகரனிடம் அரியநேந்தி ரன் தெரிவித்தார். ஆனால், அச்சமயம் குறுக்கிட்ட வடபகுதியின் இளம் எம்.பி. ஒருவர், தேசியத் தலைவரிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைப்பது இழுக்கு என்ற சாரப்படக் கருத்துத் தெரிவித் தார். ஆனால், அச்சமயத்தில் குறுக்கிட்ட தலைவர் பிரபாகரன், மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் இத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படுவது தவறல்ல. அது சாதகமாகப் பரிசீலிக்கப் படும்| - என்று பதிலளித்தார்.
உதயன்
அண்ணனுக்குத் தெரியும் தன்னோடு சேர்ந்து தாய் நிலத்தை மீட்க வந்தவர்கள் தவறான ஒருவரால் திசை மாற்றப்பட்டது.
சகோதர யுத்தமொன்றால் அநியாயமாக உயிர் நீத்தவர்களும் மாவீரர்களாக தலைவரால் அங்கீகரிக்கப்படுவார்கள்.

