Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வருக 2004
#1
[size=18]வருக 2004

<b>வருக</b>

வருகவென
வரவேற்று
வாழவைத்த ஆண்டுகளே
வரலாற்றில் நீர் எங்கு போனீர்?

விருந்துண்டு
விடைபெற்று
விரைந்தோடிய ஆண்டுகளே
வரலாற்றில் நீர் என்ன செய்தீர்?

இரண்டாயிரத்து மூன்றின்
எதிர்காலமே...
இரண்டாயிரத்து ஐந்தின்
இறந்தகாலமே...
வருமாண்டில் நீ என் செய்வாய்?


<b>நிகழ்க</b>

கண்ணீரைக் கழுவு
குருதிநீர் துடை
சமாதானத்தைக் குந்தவை

இரவுகள் கழி
பகலினில் விழி
ஈரங்காய வெயிலாய் எரி

பகைமைகள் மறை
பகிருதல் பறை
அவரவர் உரிமை அவர்க்கேயளி

கல்லறைகள் காணும்
பதுங்குகுழிகள் மூடு
ஆயுதங்களை உறங்க வை

அழிவுகள் நிறுத்து
அட்டகாசம் நிறுத்து
அமைதி வாழ்வு திருப்பு

அரசியல் மாற்று
ஆதிக்கம் விரட்டு
அகதி நிலை தகர்த்தெறி

நிகழ்த்து நிகழ்த்து
அதிசயம் நிகழ்த்து


<b>தருக</b>

வெள்ளை நிழல்
வேண்டாம்
வெளிச்ச இரவு
வேண்டாம்

சூரிய நிலவு
வேண்டாம்
சுடாத வெயில்
வேண்டாம்

பூவாய் மழைபெய்ய
வேண்டாம்
நிலவில் நிலமொன்றும்
வேண்டாம்

புன்னகைத் தேசம்
வேண்டும்
புதுமைத் தேசியம்
எமக்கங்கு வேண்டும்

வேண்டும்
வேண்டும்
வேண்டும்
வேண்டும் விடுதலை
வேள்வித் தீயில்
மூழ்கும் தீவின்
தேச விடுதலை

தீண்டும்
தீண்டும்
தீண்டும்
தீண்டும் தென்றலை
தீராத் தாகம்
தீரத் தழுவத்
தாராய் வரங்களை

மீண்டும்
மீண்டும்
மீண்டும்
மீண்டும் விடியலை
மீளக் காணும்
விழிகள் வேணும்
தாராய் வரங்களை

தூண்டும்
தூண்டும்
தூண்டும்
தூண்டும் தமிழினை
தூய்மை காக்கத்
துணிவு வேணும்
தாராய் வரங்களை

_________________________________________________
பி.கு.: இந்தக் கவிதை பாரிசில் நடந்த தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் "வருக 2004" என்கின்ற நிகழ்ச்சியில் வரவேற்புக்கவிதையாக என்னால் வாசிக்கப்பட்டது.


Reply


Messages In This Thread
வருக 2004 - by இளைஞன் - 04-20-2004, 06:04 PM
[No subject] - by shanmuhi - 04-20-2004, 07:04 PM
[No subject] - by sOliyAn - 04-20-2004, 11:14 PM
[No subject] - by Mathan - 04-21-2004, 01:56 AM
[No subject] - by ishwari - 04-24-2004, 01:20 PM
[No subject] - by இளைஞன் - 04-24-2004, 11:34 PM
[No subject] - by Paranee - 04-25-2004, 12:41 PM
[No subject] - by இளைஞன் - 04-25-2004, 02:39 PM
[No subject] - by sOliyAn - 04-26-2004, 12:01 AM
[No subject] - by இளைஞன் - 04-26-2004, 08:33 AM
[No subject] - by Paranee - 04-26-2004, 03:35 PM
[No subject] - by Eelavan - 04-26-2004, 05:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)