04-19-2004, 11:04 PM
மறுப்பு அறிக்கை
<b>மறுப்பு அறிக்கை ஆண்டாண்டுகாலங்களாக அடங்கிக்கிடந்த நம் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் இதுவரை இழந்து போனவைகளுக்கும் சமர்ப்பணம்</b>
<span style='color:#0900ff'>'இவையளுக்குச் சும்மா வைச்சுக்கொண்டிருக்கேலாமல் வெளிக்கிட்டிட்டினம். பெண்விடுதலையெண்டு பூச்சாண்டியா காட்டினம்? \"
'பெண்டுகளுக்கு என்னவேண்டிக்கிடக்கு விடுதலை? இவயளுக்குச் சுதந்திரம் குடுத்தா பிறகு எங்கடபாடு என்னவாகிறது?\"
'உதெல்லாம் வெள்ளக்காரியளுக்குத்தான் சரி. எங்கட பொம்பிளயளெண்டால் பொட்டுவச்சு, சாறியுடுத்து அம்சமா இருக்கவேணும்.\"
'பெண்விடுதலை பெண்விடுதலை எண்டுபோட்டு இவயள் ஏன் வெளிக்கிட்டுத்திரியினம் தெரியுமே? கண்டபடி ஆம்பிளயளோட படுக்கத்தான்.\"
எங்கள் மீதான அடக்குமுறை, பாகுபாடு நாங்கள் சிறுமிகளாகவிருக்கும்போதே ஆரம்பமாகிறது. உணவில், உடையில், விளையாட்டில், எங்கள்மீது செலுத்தப்படும் அன்பில், கல்வி கற்பதில், பின் கலியாணத்தில், கணவனுடனான வாழ்வில், காதலில், காமத்தில், கழுத்தில், களத்தில், மேலும் கடையில், தெருக்களில், வேலையில், தொடர்ந்து விடுதலைப்போராட்டங்களில், அரசியல் அமைப்புகளில், மதத்தில், மடத்தில், மலைகளில், படத்தில், இலக்கியத்தில், அடுப்படியில், விண்வெளியில், வீரத்தில், வாதத்தில்..
மேலும் மேலும் சொல்லமுடியாத சோகங்களைப்போல், எண்ணமுடியாத அணுக்களைப்போல், கொல்லமுடியாத வைரசுக்களைப்போல்..........
எம்மீதான அடக்குமுறை சொல்லமுடியாத சோகங்களைப்போல்;. ஆம் வார்த்தைகளால் சொல்லமுடியாத சோகங்களை;போல்!
பெண்விடுதலை என்பது சிலருக்கு பந்துபோல்
ஊதி வெடிக்கவைக்க முயல்கின்றனர்
எறிந்துவிளையாடுகிறார்கள்
தட்டிப் பார்த்து தமாசுசெய்கின்றனர்
பின்னால் குத்தி பிய்த்தெடுக்கப் பார்க்கின்றனர்
கருத்தியலாக, கருங்கல்லைப்போல் மட்டுமல்லாமல் இலைகளாகத் தளிர்த்து, செடிகளாக செழித்து, படர்ந்து, தென்னைமரம்போல் நிமிர்ந்து, சில இடங்களில் செம்பட்டை தரித்து நிற்கிறது ஆதிக்கம்!
பள்ளங்களாக மலைகளாக கடல்களாக.........மட்டுமல்ல
கவிதையாக, இலட்சியமாக, பின் நவீனத்துவமாக,
மாட்டுவண்டியிலும், விமானத்திலும், மின் அஞ்சலிலும்
கருத்தியலாக மட்டுமன்றி கடமையுணர்வு கொண்டதாகவும் பாசம்மிக்கதாகவும், நியாயப்படுத்துவதாகவும், உறுதியாகவும் தன் நிலையை ஆண்கருத்தியலைச்சார்ந்தும் எங்கள் சிலரினது சம்மதத்துடனும் சங்கமித்திருக்கிறது. ஆண்களினதும், ஏன் எங்களினது தலைகளுக்குள்ளும் கைவிரல்களுக்குள்ளும், மயிர்களுக்குள்ளும், இரத்தத்திலும், இடுப்புகளிலும். எங்கும் எங்கும்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான அசமத்துவம் எண்ணமுடியாத அணுக்களைப்போல். ஆம்
எண்ணமுடியாத அணுக்களைப்போலவே!
எந்தக் கவலையுமின்றி, கரைச்சலுமின்றி காற்சட்டை அணிகிறது, தத்துவங்களை உருவாக்குகிறது, அவற்றைத் தனதாக்கியும்கொள்கிறது, தலைமைதாங்குகிறது, கோட்டைகளைக்கட்டுகிறது, கோடீஸ்வரர்களும் ஆகிவிடுகிறது., கதவுகளைச் செய்கிறது, சுவர்களையும் கட்டுகிறது, காடுகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது போதாதென்று காசுவாங்கியும் கலியாணம் செய்கிறது.
பணத்தையும் வளங்கி, பத்தினியாய்ப்போனாள் சகி
வாழ்நாள் முழுவதுமே வேலைக்காரியானாள்
படித்துமுடிக்கமுடியாமல் எம்தோழி
பாதியில் நிறுதப்படுகிறாள்
பலர் முன்னிலையில் எம்சகோதரி
பலாத்காரப்படுத்தப்படுகிறாள்
விடுதலைக்கு வீரமுடன் சென்ற எம் தோழி
விறகுபொறுக்க அனுப்பப்பட்டாள்
விலைமாதாய் எம் சகோதரி
தன்னையே விற்க நிர்ப்பந்திக்கப்படுகிறாள்
அம்மாக்கள் அழுதார்கள்
அடிவாங்கி அடிவாங்கி
அங்கேயே இருந்தார்கள் அவர்களுடன்
நாங்களும்தான்!
எங்கள் மீதான அடக்குமுறைகள் கொல்லமுடியாத வைரசுக்களைப்போல்!
ஆம்! கொல்லமுடியாத வைரசுக்களைப்போல்!
ஏன்..ஏன்...ஏன்...???????
மார்படைக்க அழுது, மண்டைகளை போட்டுடைத்து, மன்னிக்கமுடியாதது என்றுணர்ந்து, மறுக்கப்படவேண்டியதென்று விளங்கி
எழுந்தோம்
எழுகிறோம்
இன்னும் இன்னும்
எழுவோம்.
இல்லை.
இல்லை.
ஆம் இவைகளை இல்லை என்றாக்குவது எப்படி?
நீட்டிநிமிர்ந்து கொட்டாவிவிடுகிறது. செமிபடமுடியாமல் துள்ளிக் குதிக்கிறது. நித்திரைசெய்கிறது. நரியாய் இருந்து பந்தைத்தட்டிவிடுகிறது. யானையாய் மிதிக்கப்பார்க்கிறது. புலியாய்ச் சீறிப்பாய்கிறது. இங்கும் எங்கும் எதிலும்.
ஆம்! எமது போராட்டம் மிகவும் சிரமமானது.
பெரும் வெள்ளப்பெருக்கையும், சூறாவளியையும், குண்டுத்தாக்குதல்களையும் முகங்கொண்டு உயிர்வாழ்கிறோம். இன்னமும் இன்னமும் உரிமைகளுக்காக!
செருப்பாய் வந்து காலைக்கடிக்கிறது, மழையாய், பனிக்கட்டி மழையாய் பெய்து உடலை நோகவைக்கிறது. காற்றாய் வந்து அள்ளிச் செல்லப்பார்க்கிறது. பனியாய் விறைத்துவிடமுயல்கிறது.
தாயகத்திலும் மலையகத்திலும்; புகலிடத்திலும் அகதிமுகாம்களிலும் வெள்ளைத்தலைகளுக்குள்ளும் பரீஸ் தெருக்களிலும் இங்கும் எங்கும் எதிலும்
இல்லை
இல்லை
இல்லை என்றாக்க எழுந்தோம். எழுகிறோம். எழுவோம்.
எமது போராட்டம் மிகவும் உறுதியானது! அதனாற்தானோ பல இடையூறுகளைக் கொண்டது?
எப்படி? எப்படி? இரண்டினையும் சமப்படுத்துவது?
சம்மதத்திலோ சங்கமத்திலோ சங்கம் அமைப்பதிலோ சரிபாதி
இனிவரும் சரித்திரத்தில் சரிபாதி!
ஒற்றைப் பாதையில் ஓடி, கடலில் அலைகளோடுமோதி பஞ்சுப் பனியாய்ப்பெய்து பாறைகளை உருக்கமுயன்று, அகப்பைகளால் அடித்துப்பார்த்து, எழுத்துக்களால் எடுத்துக்காட்டி......
எமது போராட்டம் கடுமையானது அதனால்த்தானோ நீண்டது?
எமது போராட்டம் நிஜமானது. நிம்மதிக்கானது. நிஞாயமானது.
வைரசுக்களைப்போல் கொல்லமுடியாத வைரசுக்களைப்போல், அணுக்களைப்போல் எண்ணமுடியாத அணுக்களைப்போல், சோகங்களைப்போல் வார்த்தைகளால் சொல்லமுடியாத சோகங்களைப்போல்......
'தோழர் நான் அவா நல்லாச் சோசலாப் பழகிறவ எண்டதுக்காண்டித்தான் அப்பிடிக் கேட்டனான். படுக்கிறதென்றால் இந்தப் பொம்பிளயளும் மற்றச் சாதாரணபொம்பிளையள்மாதிரிப் பயப்பிடீனம்? என்னதான் பெண்விடுதலை கிடுதலை எண்டு கதைச்சாலும் கற்பு கிற்பெண்டு ஒரு வட்டத்துக்குள்ளதான் இருக்கினம்.\"
'நாங்கள் உங்களுக்கு எப்பவும் விடுதலை தரத்தான் தயாரா இருக்கிறம். நீங்களும் அதுக்கேற்றமாதிரி உங்கள் மாத்தவேணும். என்ர மனிசீற்ர எப்பவும் நான் ஒரு பெமினிஸ்ராத்தான் நடந்துகொள்ளிறன்\"
'நீர் ஒரு பெமினிஸ்ற் என்று நினைச்சன். இவ்வளவு பிற்போக்குவாதியா இருப்பீரென்று நினைக்கவேயில்ல. சும்மா தொட்டுத் தொட்டுக் கதைக்கவே பிடிக்காதமாதிரி விலகிப்போறீர். பிறகென்னெண்டு விடுதலையடையப்போறீர்?\"
<b>ஆயிரம் பெண்களின் அணிவகுப்பு</b>
ஆண்டாண்டு காலமாக அடைபட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்த நாங்கள் எமது உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் மிகவும் கடினமான ஒரு போராட்டத்தினை இதுவரைகாலமாகவும் நடாத்திவருகிறோம். எமது போராட்டத்தின் தேவை எம்மால் உணரப்பட்டு பல ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் எமது விடுதலையை நாம் அடைந்து விடவில்லை. இதற்கு எம் தரப்பிலும் காரணங்கள் இருந்தபோதிலும் ஆணாதிக்கம் என்பது தனது அடக்கமுறையிலிருந்து து}க்கியெறியப்படாமல் இருப்பதற்கு (தன் சுயநலத்தை, சுரண்டலை) தனக்கு முடிந்தவரையில் தக்கவைப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடித்துவருவதுவும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு எமது சுரண்டல் சமூக அமைப்புமுறையும் பலத்த ஆதரவளித்தவருகிறது.
<b>பெண்ணிலைவாதம் என்பது மேற்கத்தேய கோட்பாடு?</b>
பெண்விடுதலை என்ற பெயரில் எமது கலாச்சாரத்தை, பண்பாட்டை குலைக்கின்றனர், இது மேற்கத்N;தயக் கோட்பாடு எமக்குச் சரிவராதது என்று எமது விடுதலைக்கு எதிராக எமது சமுதாய அடைக்குமுறை ஆனாதிக்கவாதிகளினால் பல ஆண்டுகாலமாகவே எம்மீது பழி சுமத்தப்பட்டுவருகிறது. குடும்பத்தைக் குலைப்பவர்கள், ஆட்டக்காரிகள், அடங்காப்பிடாரிகள், வாய்காரிகள், என்று நாம் எமது உரிமைகளுக்காகவும் ஆண்பெண் சமத்துவத்திற்காகவும் போராடத்தொடங்கிய காலங்களிலிருந்தே இப்படிப்பட்ட தப்பவிப்பிராயங்களையும் அவது}றுகளையும் தாங்கிப் போராடிவருகிறோம். இந்தவேளையில் எமது போராட்டத்தைத் திசைதிருப்ப இன்னுமொரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது என்பதனையும் மிகவும் வேதனையுடன் விளங்கிக்கொண்டுள்ளோம். இங்குதான் நாம் மிகவும் எச்சரிக்கையாகவிருக்கவேண்டும்.
<b>பின்நவீனத்துவம் என்பது இன்றைய வழிபாடு!</b>
பெண்விடுதலை என்றால் அது பாலியல் விடுதலைமட்டும்தான் என்று தமக்குச் சுயநலமான கருத்தியலொன்றை உருவாக்கி வைத்துக்கொண்டு புகலிடத்து முற்போக்கு, புரட்சிகர எழுத்தாளர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் சில இலக்கியக்காரர்களின் போக்கு ஏற்கனவே பலசிக்கல்கள், எதிர்ப்புக்கள் நிறைந்த எமது போராட்டத்தினை திசைதிருப்பிட முயல்கிற போக்காகும்.(அப்போதுதான் இவர்கள் மேலும் பல நு}ற்றாண்டுகள் என்மைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்து அனுபவிக்கமுடியும்) விரதம் அனுஸ்டிப்பதாக வெளியில் கூறிக்கொண்டு வயிறுமுட்ட உண்பதுபோல் எமது விடுதலையைத் தாம் வென்றெடுத்துத் தந்துவிடப்போவதாக (பாலியலில்கூட எமது முடிவுகளை எதிர்பார்க்காதவர்கள், நாம் யாருடன் எப்போது எவ்வாறு ஒன்றிணையவேண்டும் என்பதைனையும் தாங்களே தீர்மானிக்கவிரும்புபவர்கள்) கதைகளெழுதி, கவிதைகள் படைத்து எமது போராட்டத்தினைக் கொச்சைப்படுத்துகிறார்கள். இதற்குப் பின்நவீனத்துவம் என்றும் பெயரிட்டுள்ளனர். இப்படிப்பட்ட போக்குகளை நாம் சமூகப் பொறுப்பற்ற செயலாகவும், ஆணாதிக்கத்தின் இன்னுமொரு வெளிப்பாடாகவே கருதுகிறோம்.
எமது விடுதலைக்கு எதிரான எந்தவொரு தத்துவத்தினையும் எதிர்ப்போம்!
எமது போராட்டத்திற்குத் தடையாகவிருக்கும் அனைத்தையும் து}க்கியெறிவோம்!
எமது சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்தும் எழுத்துக்களை நிராகரிப்போம்!
எமது போராட்டத்தினை பிழையாகக் காட்டமுனையும் பித்தலாட்டத்தனங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவோம்!
இன்று நாங்கள் ஆயிரம் பெண்களாக இந்த வலை அணிவகுப்பை ஆரம்பித்துவைக்கிறோம். எமது விடுதலையில் உண்மையான அக்கறைகொண்ட எவரும் இதில் கலந்துகொள்ளலாம்.
உங்களது கருத்துக்களை, எதிர்ப்புக்களை, நிராகரிப்புகளை சிறு துண்டுப்பிரசுரங்களாகவோ அல்லது வேறு வடிவங்களாகவோ தயாரித்து வழங்குங்கள்.
நன்றி - நிரூபா மற்றும் சக்தி இதழ்</span>

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>