04-19-2004, 08:54 AM
<span style='font-size:22pt;line-height:100%'>சண்முகியின் நல்லதொரு ஆதங்கத்துக்கு வழி காட்டியுள்ள பீபீசி மற்றும் சேது இருவருக்கும் நன்றிகள்.ஐரோப்பிய நாடுகளில் கல்வி பயில்வோர் திறமையின் அடிப்படையிலும், மாணவர்களது விருப்புகளின் அடிப்படையிலும் ,அவர்களது ஆசிரியர்களால் கண்காணிக்கப்பட்டு தேர்வாகின்றனர்.
அல்லது பெரியவர்களான பின் பணம் செலுத்தி ஒரு சில தொழில் முறை அல்லது விரும்பிய ஒரு கல்வியை முழு நேரமாகவோ-பகுதி நேரமாகவோ செய்யலாம்.ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களுக்கு மொழி சார்ந்து சில பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
ஆனால் லண்டன்-கனடா-அமெரிக்கா போன்ற நாடுகள், ஆரம்பம் தொட்டே கல்வியறிவைக் கொடுப்பதற்காகவும் ஆங்கில மொழியை பரப்புவதற்காகவும் ஒரு முறைமையை கடைப்பிடித்து வந்ததால், விரும்பிய எவரும் விரும்பிய எதையும் கற்று தேறலாம். தவிர தகுதியைக் கூட உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட அதிகம் என்றே கருதுகிறேன். ஆங்கிலேயர்களின் கீழ் காலனித்துவ நாடுகளாக பல நாடுகள் இருந்ததால் அவர்களால் புலம் பெயர்ந்தோரை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் ஐரோப்பியருக்கு புலம் பெயர்ந்தவர்கள் புதியவர்களாக (அறிமுகமற்ற முகங்களாக) தெரிவதால் இங்கு ஒரு திறந்த வெளித் தடையொன்று இருக்கவே செய்கிறது. அது பலருக்கு நேரடியாக புலப்படுவதில்லை.
உழைப்பால் வரும் பணத்துக்கும், கல்வியறிவால் வரும் பணத்துக்கும், பெரியதொரு இடைவெளியுண்டு. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்தோர் தமது கடின உழைப்பாலேயே உயர்ந்து நிற்கின்றனர்.ஒரு சிலர் மட்டுமே விதி விலக்காகி நிற்கின்றனர்.
ஆனால் ஆங்கில கல்வியறிவைத் தரும் நாடுகளில் கல்வித் தகமையால் உயர்ந்து நிற்கும் புலம் பெயர்ந்தோர் அதிகமாகவே காணப்படுகின்றனர்.
இந்நாடுகளிலும் உழைப்பால் உயர்ந்தோர் இருக்கின்றனர். அவர்கள் விகிதாசாரப்படி சொற்பமானவர்களே. இவர்களில் பலர் பின்னர் எதையாவது கற்றுக் கொண்டுள்ளனர்.
இதில் வேதனைப்பட வேண்டிய விடயம் ஒன்றுண்டு. தாயகத்தில் நன்கு கற்றவர்கள் இங்கு எதையாவது கற்க வேண்டுமென்ற ஆர்வமில்லாமல் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டவர்களாகி, <i>தவறவிட்ட பஸ்ஸை நினைத்து வருந்துபவர்களாக காணப்படுவதேயாகும்.</i>
எனது தாழ்மையான கண்ணோட்டக் கருத்து இதுவாக இருக்கிறது. இதுவே முடிவல்ல. உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
<b>முடிவு,
எடுப்பவர் கையிலேயே தங்கியிருக்கிறது.</b></span>
![[Image: dsn.jpg]](http://images.google.ch/images?q=tbn:ZdtfkDIDmMcJ:saturn.jpl.nasa.gov/education/images/dsn.jpg)
<span style='font-size:21pt;line-height:100%'>பாதைகள் பல......... செல்வது நீங்கள்.......... எனவே தேர்வு உங்கள் கைகளிலே................</span>
[size=14]ajeevan

