Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவிஸில் இலங்கைத் தமிழர் பலி
#3
<span style='color:red'><b>கணவனைக் கொன்ற இரு மனைவிகள்</b>

பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கணவரை அவரது இரு மனைவிகளும், மகனும் சேர்ந்து கொலை செய்தனர். இவருக்கு மொத்தம் 4 மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பாலன் (55), நகர சுத்தித் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு செல்வகுமாரி (45), வள்ளியம்மாள் (35), புஷ்பலதா (48 ) என மூன்று மனைவிகள்.

இதில் புஷ்பலதாவின் தங்கை பப்பியின் (40) கணவர் சமீபத்தில் காணாமல் போனதையடுத்து, பப்பியையும் மிரட்டி தனது தாராமாக்கிக் கொண்டார் பாலன். மேலும் பப்பியை பாலியல் ரீதியில் பயங்கர தொல்லைக்கும் ஆட்படுத்தி வந்துள்ளார் பாலன்.

ஒரு கட்டத்தில் டார்ச்சர் அதிகமாகவே, பாலனைக் கொலை செய்துவிட முடிவு செய்துள்ளார் பப்பி. தனது மகன் துரையிடம் (21) பாலனைத் தீர்த்துக் கட்ட சொல்லியிருக்கிறார். இதையடுத்து அவர் தனது நண்பன் விஜய்குமார் (30) என்பவருடன் சேர்ந்து பாலனைக் கொல்ல திட்டம் தீட்டினார்.

இந்தக் கொலைத் திட்டத்துக்கு புஷ்பலதாவும் உதவி செய்ய முன் வந்தார். தனது வீட்டில் கணவர் தங்கும் இரவு நேரத்தில் வந்து கொலையைச் செய்யுமாறு யோசனை கூறியுள்ளார் புஷ்பலதா.

இதையடுத்து இரவில் தூங்கிக் கொண்டிருந்த பாலனை துரையும் விஜய்குமாரும் சேர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொல்ல, புஷ்பலதாவும் பப்பியும் கொலைக்கு துணையாக உடன் இருந்துள்ளனர்.

பின்னர் பாலனின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி பக்கத்து கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் வீசினர்.

கணவரைக் காணாமல் மற்ற இரு மனைவிகளும், அவர்களது குழந்தைகளும் தேட ஆரம்பிக்கவே அவர்களின் சந்தேகம் புஷ்பலதா, பப்பி மற்றும் துரை மீது விழுந்தது.

இதையடுத்து கிராம அதிகாரியிடம் அவர்கள் புகார் தர, குற்றத்தை ஒப்புக் கொண்டு அவர்கள் சரணடைந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும், விஜய்குமாரும் கைது செய்யப்பட்டனர்.</span>

thatstamil.com....!

------------------------
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 04-16-2004, 12:39 PM
[No subject] - by kuruvikal - 04-16-2004, 12:45 PM
[No subject] - by Mathan - 04-16-2004, 05:16 PM
[No subject] - by kuruvikal - 04-16-2004, 05:31 PM
[No subject] - by yarl - 04-16-2004, 09:06 PM
[No subject] - by Paranee - 04-17-2004, 03:07 PM
[No subject] - by tamilini - 04-19-2004, 02:01 PM
[No subject] - by இளைஞன் - 04-25-2004, 08:46 PM
[No subject] - by vasisutha - 04-27-2004, 10:08 PM
[No subject] - by sOliyAn - 04-27-2004, 11:06 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:59 PM
[No subject] - by sOliyAn - 04-28-2004, 12:01 AM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:23 AM
[No subject] - by sOliyAn - 04-28-2004, 12:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)