04-11-2004, 04:29 PM
Paranee Wrote:கருணா செய்த தவறிற்காய் பிரதேசவாதம் பேசி தன்னை காப்பாற்ற நினைத்தார். ஒரு பெரும் அரசியல் பொறுப்பாளாரான மகளிர் அணி பொறுப்பாளர் எல்லா விடயங்களும் அறிந்திருந்தும் தலைமையையும் வன்னியையும் ஏன் அவதூறாகவும் கண்டன அறிக்கைகளையும் வீசிக்கொள்கின்றார்
சற்று சிந்திக்கவேண்டியதுதான்.
ஏனைய போராளிகள் (கருணாவின் உறவுகள் நண்பர்கள் சிறு வயது போராளிகள் தவிர்நத) சூழ்நிலைக்கைதிகளாக இருக்கின்றார்கள்.
மற்றைய அனுபவம் வாய்ந்த போராளிகள் எதற்காக கருணாவின் பக்கம் இத்தனை தவறுகள் இருந்தும் இறுதிவரை ஓன்றாகவே இருக்கின்றார்கள்.
இதுவும் செய்நன்றிக்கடனா ?
அவர்களை வளர்த்தெடுத்தது கருணாவாக இருந்திருந்தால் அது செய்நன்றிக்கடன்
இல்லையே
அவர்களை வளர்த்தது தமிழ் மக்களூம் தேசியத் தலைமையும் அல்லவா
இன்றளவும் அவர்கள் உண்ணும் ஒருபிடிச்சோறும் தமிழ் மண்ணைக் காப்பதற்காக வழங்கப்பட்டதல்லவா
அப்படியிருக்க பிரேமினி அவர்கள் கருணாவிற்குப் பிற்பாட்டுப் பாடுகிறார் எனின் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதுதான் போலத் தெரிகிறது
\" \"

