04-11-2004, 03:49 PM
கருநாகம் கருணாவின் மறுபக்கம்.
<i>'கருணாவின் மர்மங்கள்.....
போராளி துரோகியான கதை...
போராளி மாவீரரான கதை....மர்ம முடிச்சுக்களின் அவிழ்தலுடன் அதிர்ச்சி தரும் கருணாவின் துரோகங்கள்....." (பட்டிருப்பான் எழுதும் உண்மைகளின் தொகுப்பு) </i>
<b>அங்கம் 1.</b>
'மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரத்திலுள்ள ஒரு காட்டில் செளித்து வளர்ந்து நிற்கும் மருத மரமொன்றின் கீழிருந்து முத்தமிழ் விழாவிற்கான இந்தச் செய்தியை எழுதுகிறேன்.
இந்தப்போர்ச்சு10ழலில் இத்தகையதொரு தமிழ்விழா நடைபெறுவது சாதாரண விடயமல்ல. இது எமது மக்களின் மன உறுதியையும் , தாய்மொழிமீது அவர்கள் கொண்ட பற்றையும் தேசப்பற்றையும் வெளிக்காட்டும் ஒற்றுமை உணர்வினையும் பறைசாற்றுவதாக உள்ளது.
இத்தகையதொரு தமிழ்விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது என்ற செய்தியை அறிந்த எனது சகபோராளிகள் ஒரு புதிய உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
உழைப்பாளி மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தும் கிராமியக் கலைகளில் எங்களுடைய பிராந்தியம் செளிப்புற்றிருப்பதை நினைத்து நான் பெருமிதமடைகின்றேன்.
முத்தமிழை வளர்க்கவும் மெருகூட்டவும் இப்பகுதிக் கலைஞர்கள் ஆற்றிய பங்குகள் அளப்பரியது. அதற்காகவே எதிரியால் அழிக்கப்பட்டுமுள்ளனர்.
இந்தப் போர்ச்சூழல் காரணமாக மட்டக்களப்புக் கலைஞர்கள் இந்த முத்தமிழ் விழாவில் பங்கேற்க முடியாதுள்ளது. ஆனாலும் படுவான்கரைக் காடுகளில் மறைந்து வாழும் மக்களினதும் , பரபரப்புடன் வாவியில் துடுப்பு வலிப்பவர்கள்களினதும் உணர்வுகள் முத்தமிழைப்பாடும்"
இது 1991ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகம் , யாழ்ப்பாணத்தில் நடத்திய முத்தமிழ் விழா மலருக்கு கருணா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியின் ஒருபகுதி.
ஆனால் 13வருடங்களுக்கு முன்னால் இதனை அவர் எழுதும் போதே பிரதேசவாதம் என்னும் நச்சுக்கருத்து அவர் மனதில் முளைவிட்டிருக்க வேண்டும் போல உள்ளது.
தன்தவறுகளை மறைப்பதற்காக அவர் கொள்கையில்லாத முழுநேர அரசியல்வாதிகள் செய்யும் அத்தனை திருகுதாளங்களையும் செய்யத் தொடங்கிவிட்டார்.
நம்பிக்கையும் , விசுவாசமும் , மக்கள் பற்றும் கடமை தவறாத பாங்கும் கொண்ட ஒரு விடுதலை அமைப்பின் பிராந்தியத் தலைவராக இருந்த அவரின் செயற்பாடுகள் எந்தளவு து}ரம் அவரால் மிக நுட்பமாக திட்டமிடப்பட்டு வந்துள்ளன என்பதனை அவரது தற்போதைய செயற்பாடுகள் மூலமே அறியக்கூடியதாகவுள்ளது.
இன்று அவரால் குற்றஞ்சாட்டப்படும் புலனாய்வுத்துறையை அவர் எப்படிக் கையாண்டார் என்பது கவனிக்கத்தக்கது. காரணம் புலனாய்வுத்துறையும் அதன் போராளிகளும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் கீழ் இருந்தாலும் மாவட்டத்தளபதியின் கீழே அவர்கள் செயற்படுவது வழக்கம். கிட்டத்தட்ட 75சதவிகிதமான செயற்பாடுகள் எல்லா மாவட்டங்களையும் போல கருணாவாலே மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்கள் காலத்துக்குக்காலம் நியமிக்கப்பட்ட 'உருத்திரா மாஸ்டர் , நிக்ஸன் , காந்தி , றெஜினோல்ட் , கீர்த்தி" போன்ற பொறுப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தையே சார்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிர்வாகக்கட்டமைப்பு ஏற்பாடு இருந்தும் கருணா மாவட்டப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்களின் செயற்பாடுகளை ஒழுங்காகச் செயற்படவிடாமல் புலனாய்வுத்துறைக்கும் அவர்களுக்குமான தொடர்பினை விரும்பாத ஒரு நபராய் செயற்பட்டு வந்தமைக்கு இப்போது நடந்து முடிந்த சம்பவங்களே சாட்சியாக அமைகின்றன.
ஒவ்வொரு தடவையும் மட்டக்களப்பு மாவட்டப்பொறுப்பாளராக நியமிக்கப்படுபவர்கள் அவர்கள் மட்டக்களப்பு போராளிகளாக இருந்த போதும் கருணாவினால் பல்வேறு காரணங்களைக்காட்டி புறந்தள்ளப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டே வந்துள்ளார்கள்.
1992இல் மட்டக்களப்பு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக பொட்டு அம்மானால் நியமிக்கப்பட்டார் உருத்திரா. அவரின் கீழ்பணியாற்றிய பட்டாபி என்ற மட்டக்களப்பு போராளியை தலைமை மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தது.
பட்டாபிக்கு மட்டக்களப்பில் பணியாற்ற முடியாமல் இருந்தது. கருணாவின் செயற்பாடுகள் ஒரு ஒழுங்கான இயக்கக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஒரு பிழையான தலைமையின் கீழ் முறையற்ற செயற்பாடுகளைச் செய்ய பட்டாபி விரும்பவில்லை. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறி தலைமையிடம் திரும்பிவிடத் தீர்மானித்து அதற்கான அனுமதியும் பெற்றிருந்தார். பட்டாபி தொடர்பாக ஏற்கனவே திருப்திப்படாத கருணா பட்டாபியை திருப்பி அனுப்பினால் தன்னுடைய மோசடிகள் , திருகுதாளங்கள் வெளிவந்துவிடும் என்பதை உணர்ந்து துரிதமாகச் செயற்பட்டதன் விளைவு சிறீலங்கா காவலரண்களுக்கு அண்மையாகவுள்ள முனைத்தீவிலுள்ள அவரது வீட்டுக்கு விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
வீடு சென்ற பட்டாபி அம்மாவின் கையால் சோறுவாங்கிச்சாப்பிட்டிருந்த வேளையில் கருணா குழுவில் தற்போதும் அங்கம் வகிக்கும் கெங்கா , சுதா என்போரல் வீட்டில் வைத்து தாயின் முன்னாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டதற்கும் துரோகியாக்கப்பட்டமைக்கும் பின்வருமாறு காரணங்கள் சொல்லப்பட்டது.
'தப்பியோடி இராணுவத்திடம் சரணடைய பட்டாபி திட்டம்தீட்டியிருந்தார்" என்பதே அது. இச்சம்பவம் காலம்சென்று தெரியவந்த போது அப்போது இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. தலைமை சந்தேகத்தை மனதில் வைத்துக் கொண்டது.
கருணாவின் மர்மங்கள் நாளை இன்னும் வளரும்....
- தமிழ்வெப்றேடியோவுக்காக பட்டிருப்பான் -
(தகவல் மூலம் தந்தவர்கள் நியூசிலாந்து திலீப் , சுவிஸ் கல்லாறு நிலவன் , மட்டக்களப்பு கொற்றவன் , டென்மார்க் றோய்)
நன்றி - தமிழ் வெப் ரேடியோ

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>