04-11-2004, 02:01 PM
<b>அம்பாறை மாவட்டம் தலைமைப்பீடத்தின் கட்டுப்பாட்டில், மட்டக்களப்பின் தென்பகுதியும் அவர்கள் வசமே.! </b>
(தீபன் ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்பிரல் 2004, 19:50 ஈழம் )
தமிழீழ விடுதலைப்புலிகளின் அணி நேற்றிரவு அம்பாறை மாவட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், மட்டக்களப்பின் தென்பகுதியில் தாம் இதுவரை மீட்ட இடங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறது.
கடந்த வெள்ளியன்று வாகரையை விடுவித்த புலிகள் தங்குதடையின்றி வாழைச்சேனை வரை முன்னேறியதையடுத்த அவர்கள் மட்டக்களப்பை நோக்கி நகர வேண்டுமானால் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசமான வாழைச்சேனையின் ஒருபகுதியைக் கடக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியின் காவலைப் பலப்படுத்திய சிறீலங்காப் பாதுகாப்புப் படை விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப்பிரதேசத்தை கடக்க முனைந்தால் அது யுத்தநிறுத்த மீறல் என்றும், அவ்வாறு தமது பிரதேசத்தைக் கடக்க முயல்பவர்கள் தாக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்ததுடன் மிகவும் உசார்நிலையில் வைக்கப்பட்டது.
மறுபுறமாக, இப்பிரதேசத்தினூடான கருணா அணியினரின் நகர்விற்கு பேருதவி புரிந்ததுடன் அவர்களின் அணியினர் பின்வாங்கவும் வழிவகுத்துக் கொடுத்திருந்தது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் மட்டக்களப்பின் பிற பகுதிகளிற்குள் எவ்வாறு செல்லப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் யாருமே எதிர்பாராதவாறு அம்பாறை மாவட்டத்தினூடக உள்நுழைந்த புலிகள், அம்பாறை மாவட்டத்தில் கருணா அணியின் பிரதான செயற்பாட்டிடமாக இருந்த கஞ்சி குடிச்சாறு பகுதியுட்பட அம்பாறை மாவட்டப் பகுதிகளை விடுவித்ததுடன், மட்டக்களப்பின் இதர பகுதிகளிற்குச் செல்வதற்கான நகர்வையும் அங்கிருந்து மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் விடுவிக்கப்பட்ட பிரதேங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பணியாளர்கள் மக்களிற்கான தேவைகளைப் புூர்த்தி செய்வதிலும், விளக்கங்களை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர்.
சற்றுமே எதிர்பாராத வகையில் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இந்நகர்வை அம்பாறை மாவட்டத்திற்கான தளபதியான ஐனார்த்தன் முன்னெடுத்தார். இந்நிகழ்வில் கருணா அணியினர் எத்தகைய எதிர்ப்பiயும் காட்ட முடியாது பின்வாங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்