07-04-2003, 07:15 PM
sOliyAn Wrote:நான் இங்கே ஒரு காட்சியை விபரிக்கப் போகிறேன்.. தயவுசெய்த கமரா கையாளும் அனுபவம் உள்ளவர்கள்மாத்திரம் அறிவுரையோ.. வழிகாட்டலோ.. ஆலோசனையோ தாருங்கள்..:roll:
கதாநாயகி கணவனால் அடக்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்தால் ஐரோப்பிய நாடொன்றில் வெளியுலகம் தெரியாதவளாக இருக்கிறாள்.. அதாவது கடைக்குச் செல்வதற்குக்மகூட தனியாக செல்ல முடியாத நிலையில் இருக்கிறாள்.. விபத்தில் கணவன் இறந்த செய்தி தொலைபேசிமூலம் வருகிறது.. இப்போழுது அவள் முதன்தமுதலான தானாகச் செயற்பட வேண்டிய கட்டாயம்.. இங்கே வசனம் எதுவுமே இல்லை.. தயக்கம்.. பயம்.. விரக்தி.. ஒரு உறுதி.. இந்த உணர்வுகள் முகத்தில் பிரதிபலிக்கிறது.. அடியெடுத்து நடந்து கதவைத் திறக்கிறாள்.. பளீரென வெளி வெளிச்சம் உள்ளே பரவுகிறது.. அவள் அந்த ஒளியுள் கலக்கிறாள்..
இதுதான் காட்சி.. இங்கே கமராவுக்கம் இசைக்கும்தான் வேலை.. அவைதான் இந்த காட்சியின் பொருளைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும்.. எப்படி எப்படி காட்சிகளை அமைத்து.. எவ்வாறு பொருத்த வேண்டும்.. (என்ன இளங்கோ அவர்களே?!!) விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் உதவியாக இருக்கும்.. இந்தக் காட்சியை வேறு எவரும் பாவிக்கமாட்டார்கள்தானே?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்கள் தேவையை நீங்கள் எழுதுவதும் கேள்வி கேட்தும் உங்கள் உரிமை.
அதற்காக உங்கள் தேவைக்காக பதில் சொல்வர் மேல் சந்தேகப்படுவது காரணமாக எவரும் பதில் தர முனையமாட்டார்கள்.
உங்களால் இக்காட்சியை ஏனையவர்களின் ஒத்துழைப்பின்றி ஒளிப்பதிவு செய்ய முடிந்தால் உங்கள் கருத்தை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
திரைப்பட மீடியா என்பது ஒரு குடும்ப படைப்பு போன்றது.தனியொரு மனிதனால் நிச்சயம் வெற்றி பெற முடியாது.அப்படி எங்கும் நடந்ததாக யாரும் சொல்ல முடியாது.
உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு எழுதினால் எம்மால் முடிந்த ஒரு பதிலை தர முடியும்.

