04-06-2004, 11:39 AM
adipadda_tamilan Wrote:BBC Wrote:------------------------------------------------adipadda_tamilan Wrote:BBC Wrote:தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டது. தேர்தல் முடிவை வைத்து சில விடயங்களை பேசுவோமா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.=====================================================
1) தமிழர் கூட்டமைப்பின் வெற்றி
2) சங்கரியின் தோல்வி
3) ஜோசப் பரராஜசிங்கத்தின் தோல்வி
4) ஈ.பி.டி.பியின் தோல்வியும் மற்றும் அது பெற்ற ஒரு ஆசனம்
5) சந்திரிகா தலைமையிலான கட்சியின் வெற்றி - சிங்கள மக்கள் புலிகளுடனான பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளவில்லையா?
பிபிசி உங்களது...ஜோசப் பரராஐசிங்கத்தின் தோல்விக்கான பதில் கீழ் உள்ளது...
மட்டு/அம்பாறை - தேர்தலில் நடந்thaதென்ன...(உண்மையோ உண்மை, உண்மையோ உண்மை)
நீங்கள் நினைப்பது மாதிரி பரராசசிங்கம் தோக்கயில்ல, அவரை திட்டமிட்டு தோக்கடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் நின்ட சந்திர நேரு என்பவரும் இப்படித்தான் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழ்த்தேசியத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்டு சொன்னதாலதான் அவ்ர்கள் சதிவேலையினால் ஏமாற்ற்ப்பட்டிரிக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு வாக்களிக்க சென்ற மக்களைக்கூட தடுத்து அடித்து மிரட்டி விரட்டியிருக்கிறார்கள். கச்சேரியில காசு குடுத்து முடிவையே மாத்தியிருக்கிறார்கள். இதை அங்குள்ள மக்க்ள் சொல்லிச் சொல்லி அழுகிறார்கள். இந்த இரு முன்னைனாள் எம்பிக்களுக்கும்தான் நிறைய சனங்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. வன்னிக்கு இவர்கள் இருவரும் சப்போர்ட்டானவர்கள் என்ட காரணத்தால் இவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை...
மட்டக்கிளப்பு (4 எம்பி), அம்பாறை (1 எம்பி) மாவட்ட எம்பிக்களுடன் கருணா தரப்பு கூட்டம் ஒன்றை நடாத்தவுள்ளது. இவர்கள் கருணா தரப்பின் ஆணையின் கீழ் செயல்படலாம். மற்றும் தமிழர் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குமாறு சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தேசிய பட்டியல் பதவிகள் யாருக்கு என்று இன்னும் கூட்டமைப்பு அறிவிக்கவில்லை, அது ஜோசப் பரராஜசிங்கத்துக்கு கூட வழங்கப்படலாம்.
மட்டக்களப்பு 4 எம்பிக்களில் ஒருவர் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தலைமைக்கு விசுவாசமாக வேறு இடம் சென்று விட்டதாகவும் அறியக்கூடியதாகவுள்ளது. மற்றவர்களும் இப்படி செய்யமாட்டர்கள் என்பதற்கு எதுவிதமான உறுதியுமில்லை.
மற்றது, தேசியப்பட்டியலில் ஒரு எம்பியை அம்பாறைக்கு கேட்டிருக்கிறார்கள் என்பதும் அறிந்ததுதான் அப்படி கொடுக்கும்போது அது முன்னைனாள் எம்பி சந்திரனெருவுக்கே போய்ச்சேரும். அப்படி அவ்ரோ அல்லது ஜோசப்போ வருமிடத்து அவர்கள் தலைமைக்குத்தான் தங்களது சப்போர்ட்டை கொடுப்பார்கள் என்பது உறுதி. எனவே மற்ற நால்வரும் ஒரு பக்கம் நின்றாலும் அவர்களை எதிர்க்க ஒருவர் வருவார். இதனால் ஒருதலைப்பட்சமாக மற்ற 4 பேரினாலும் ஒரு முடிவும் எடுக்கமுடியாமலும் போகலாம்(இந்த நால்வரும் எந்தனெரமும் மாறலாம் என்பதையும் நாம் இங்கு கவனத்திலெடுக்க வேண்டும்).
<b>முக்கியமானது என்னெண்டா, இப்ப எந்த முக்கிய அரசியல் கட்சிக்கும் தமிழரின் சப்போர்ட் தேவைப்படுவதுமாதிரி தெரியவில்லை</b>.
தமிழ் கூட்டமைப்பின் ஆதரவின்றி மகிந்த் ராஜபக்ஷ ஆட்சியமைக்க கூடியதாக இருந்ததாலேயே தமிழ் கூட்டமைப்பு பிளவுபடகூடிய சந்தர்பம் உருவாகவில்லை என்று நான் நினைக்கின்றேன். கூட்டமைப்பு எம்பிக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்று இருந்திருந்தால் சந்திரிகா கிழக்கின் 5 எம்பிக்களின் ஆதரவை கேட்டிருக்ககூடும். எப்படியே பிளவுபடகூடிய சந்தர்ப்பம் உருவாகவில்லை. அது நல்லதுதான்.
இப்போது தமிழ் கூட்டமைப்பு முன்னால் இருக்கும் அடுத்த கேள்வி யார் தேசிய பட்டியல் எம்பி என்பது. இதற்கு கிழக்கில் இருந்து ஜோசப் பரராஜசிங்கத்தின் பெயர் அடிபடுகின்றது. தேர்தலில் தோற்ற அவர் தேசிய பட்டியல் எம்பியாக நியமிக்கபடக்கூடாது என்று கிழக்கில் இருந்து (அல்லது கருணா தரப்பில் இருந்து) குரல் கேட்கின்றது. இதைபற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

