04-05-2004, 07:00 PM
<span style='font-size:30pt;line-height:100%'> \"க\" சொல்லும் தஸ்லீமா நச்ரீன் </span>
அந்தப் பெண் எழுத்தாளர் எழுதும் ஒவ்வொரு புத்தகமும், ஒரு பரபரப்பை உண்டாக்கும். அவர் எழுதிய புத்தகம், பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றால்தான் ஆச்சரியம்! வழக்கம் போலவே கடந்த அக்டோபர் 23_ம் தேதியன்று, அவர் எழுதி, வெளியான "க" எனும் புத்தகம், பங்களாதேஷில் பெறும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்தப் புத்தகத்தைப் படித்த புலவர்கள், பண்டிதர்கள் "அய்யோ... அய்யோ" என்று அலறினார்கள். சிலர் "ஷாக்"கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றும் சிலர் அந்தப் புத்தகத்தை "தடை" செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகினார்கள். ஆனால், வாசகர்கள் அந்தப் புத்தகத்தை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கினார்கள். தற்போது அந்தப் புத்தகம் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. இத்தனைக்கும் அந்தப் புத்தகத்திலுள்ள கதைதான் என்ன என்கிறீர்களா?
"க" என்ற தலைப்புடன் தஸ்லீமா தன்னுடைய சுயசரிதையை எழுதினார். இதற்கு முன் தஸ்லீமா இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். முதல் பாகம் மேயபேலா (எண் குழந்தை பருவம்) உதல் ஹவா (சுதந்திர காற்று) எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த இரண்டு புத்தகங்களும், உடனே தீர்ந்துவிட்டன. ஆனால், இந்தப் புத்தகங்கள் ஆபாசமாக இருக்கின்றனவென்று பங்களாதேஷ் அரசு தடை போட்டது. இந்தப் புத்தகங்களுக்கு அப்புறம் எழுதப்பட்ட புத்தகம்தான் "க". வங்க மொழியில் முதல் மெய் எழுத்து "க". என்றால், எதாவது சொல்லுங்களென்று பொருள். இந்தப் புத்தகத்தில் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்ட கவிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி தஸ்லீமா எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில், இஸ்லாமிற்கும், முகம்மத்துக்கும் எதிராக சில கருத்துகள் வெளியிட்டிருக்கிறார். மேலும் பங்களாதேஷ் பிரதமர் பேகம் கலிதா ஜியா, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஷேக் ஹசீனா நடுவிலுள்ள சண்டையைப் பற்றியும் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். அதனால் அந்தப் புத்தகம் இலக்கிய துறை அன்றி அரசியலிலும் பரப்பரப்பாக பேசப்பட்டது.
என் வாழ்க்கை பயணத்தில் நான் சந்தித்த நபர்களைப் பற்றி எழுதியிருந்தேனென்று தஸ்லீமா சொன்னாலும், 415 பக்கங்கள் கொண்ட "க" புத்தகத்தில் எழுதப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள் இதைப் பற்றி லேசாக நினைப்பதில்லை. இத்தனை நாள் தமக்கு கிடைத்துக் கொண்டிருந்த பெயரும், புகழும் ஒரேயடியாய் தரை மட்டமானதைப் பார்த்து, பங்களாதேஷ் கவிஞர்களால் ஜீரணிக்க முடியவில்லை. சிலருடைய வீடுகளிலும் பிரச்னை ஆரம்பமானது. "தஸ்லீமா சொல்வதெல்லாம் பொய். அவருடைய எழுத்துக்கள் இதுவரை நாங்கள் படித்ததேயில்லை" என்று பலர் புலம்பத் தொடங்கினார்கள். சிலர் அந்தச் செய்தியை கேட்டு "ஷாக்"கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றும் சிலர் நீதிமன்றத்தை அணுகினார்கள். சய்யத் ஷம்ஷீல் ஹக் எனும் எழுத்தாளர், 10 கோடி டாகாக்கள் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கைப் செய்தார். மொத்தத்தில் பங்களாதேஷ் எழுத்தாளர்கள் "க" புத்தகத்தை "தடை" செய்யக்கோரி அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, அப்புத்தகம் பங்களாதேஷ் நாட்டில் "தடை" செய்யப்பட்டது.
அந்தப் புத்தகம் நம் நாட்டில் "த்விகந்தித" எனும் பெயரில் வெளியிடப்பட்டது. நம் நாட்டின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சய்யத் ஹஸ்மத் ஜலால் என்பவரின் பெயரும், அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றது. இருவருக்கு நடுவில் வெறும் பேச்சுவார்த்தை தவிர, வேறு ஏதும் இல்லை என்று ஜலால் சொல்கிறார். மேற்கு வங்காளத்தில் முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு எதிராக, இந்து எழுத்தாளர்கள் செயல்படுகிறார்களென்று தஸ்லீமா எழுதியது, மேலும் விவாதத்திற்கு உள்ளானது.
இந்த பரபரப்பு ஒருபுறமிருக்க, தஸ்லீமா தன்னுடைய பணியில் மும்முரமாக இருக்கிறார். தற்போது அவர் ஹர்வர்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. செய்கிறார். இஸ்லாமிய நாடுகளை மதசார்பற்ற நாடுகளாக மாற்றுவதற்கான வாய்ப்புகள், மதச்சார்பற்ற தன்மைக்கும், பெண்ணீயத்துக்கும் நடுவிலுள்ள தொடர்பைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்கிறார். இன்னொரு பக்கம், சுயசரிதையின் நான்காவது பாகத்தை எழுதும் வேலையிலும் தீவிரமாக இருக்கிறார்.
தஸ்லீமா எழுதியதைப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவருடைய துணிச்சலை எல்லோரும் பாராட்டுகின்றனர். 41 வயது தஸ்லீமாவை, அனுபவங்கள்தான் வழி நடத்துகின்றனவென்று அவருடன் நெருங்கிய நண்பர்கள் கூறுவதுண்டு. அவர் ஒரு சம்பிரதாய முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு ஏழு வயதிருக்கும் போது, நெருங்கிய உறவினரால் கற்பழிக்கப்பட்டார். அதை வெளியே சொன்னால் அடிப்பார்களென்று அச்செய்தியை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டார். சிறு வயதிலிருந்தே இலக்கிய ஆர்வமுள்ள தஸ்லீமா, 15 வயதில் முதன் முதலில் ஒரு கவிதையை எழுதினார். மருத்துவக் கல்லூரி மாணவியாக மேலும் கவிதைகள் எழுதித் தள்ளினார். டாகா அரசு மருத்துவமனையில், கைனகாலஜிஸ்ட்டாக வேலை பார்க்கும்போது, பெண்களை ஆண்கள் சித்திரவதை செய்யும் கொடுமையை கண்கூட பார்த்தார். இந்த அனுபவங்கள் எல்லாம் அவரை ஒரு போராளியாக மாற்றிவிட்டன. சில மதத் தலைவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகளுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகள், பரபரப்பை ஏற்படுத்தின.
பாப்ரி மசூதி இடிப்பிற்கு அப்புறம், பாங்களாதேஷில் இந்துக்களின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்களை "லஜ்ஜா" எனும் பெயரில் எழுதியதால், மதவாதிகள் "ஃபத்வா" விதித்தனர். அதன்படி அவருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. அரசுகூட மதவாதிகளின் பேச்சை கேட்டதால், தாயை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார். அவருக்குத் துணையாக உலகின் எத்தனையோ அமைப்புகள் குரல் கொடுத்தன. தாயின் கோரிக்கையை ஏற்று, 98_ல் மறுபடியும் சொந்த நாட்டில் அடியெடுத்து வைத்த தஸ்லீமா, மறுபடியும் மதவாதிகளின் எதிர்ப்பால் வெளிநாடுகளுக்கு கிளம்பினார்.
தன்னுடைய அந்நிய நாட்டு வாழ்க்கையைப் பற்றி தஸ்லீமா இப்படிச் சொல்கிறார். "எனக்கென்று சொல்லிக் கொள்ள எந்த நாடும் இல்லை. எல்லா நாடுகளும் பஸ் ஸ்டாப்களைப் போல் தோன்றுகின்றன. என் தாய்நாட்டிற்கு போக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆனால், அங்கு கொண்டு போகும் பஸ்தான் கிடைக்க மாட்டேங்கிறது."
தீராநதி