04-05-2004, 11:05 AM
AJeevan Wrote:[quote=BBC]யார் மகிந்த ராஜபக்ஷவா?
இன்னும் முடிவாகவில்லை.
ஆனால் சந்திரிகா நேற்றிலிருந்து மகிந்த ராஜபக்ஷவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அது என்னவென்று அடுத்தவர்களுக்கே தெரியவில்லை. சிலவேளை அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம்.
எது இருப்பினும் JVP இன்றைய வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
இவர்களையும் தவிர்த்து, சிங்கள மக்கள், ஒரு சிங்கள கத்தோலிக்கரோ அல்லது கிறிஸ்தவரோ கூட அதிபராகவோ அல்லது பிரதமராகவோ வரக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழும் போது ஒரு தமிழர் இவர்களால் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு, வாக்கு வேட்டைக்கான ஒரு விளம்பர தந்தரமாகவே கருதலாம்.
அப்படியான ஒரு முடிவு வருமானால் அடுத்த தேர்தல் உடனடியாக வருவதற்கு அதுவே வாய்ப்பை உருவாக்கும்.
அல்லது 2 வருடத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் அதிபர் நிலையிலுள்ள சந்திரிகா, அதிபர் பதவியையே கூண்டோடு அழித்து விட்டு வருவதற்கு முன், ஒரு முத்திரை(Stamp)யாக கதிர்காமரை தற்போதைக்கு பயன்படுத்தலாம்??????????????
<span style='font-size:25pt;line-height:100%'>
இதுவும் அரசியல்தான் சாமி</span>
பிரதமர் பதவிக்கு போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அனுராவை சமாளிப்பதற்காக பிரதமர் பதவி கதிர்காமருக்கு கொடுக்கப்படலாம். அதனுடன் கதிர்காமர் ஜேவிபியுடன் சுமூகமான உறவுகளை கொண்டுள்ளதுடன் அவர் சந்திரிகாவின் விசுவாசியும் கூட.
ஜனாதிபதி, பிரதமர் இருவரும் ஒரே கட்சியாக இருக்கும்போது பிரதமருக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. சந்திரிகாவின் ஜனாதிபதி பதவி இன்னும் 2 வருடத்தில் முடிந்துவிடும். அதன் பின் அவர் அந்த பதவிக்கு போட்டியிட முடியாது. அப்போது அவர் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை மாற்றிவிட்டு பிரதமராக பதவியேற்க முயற்சிப்பார் என்றே நானும் நினைக்கின்றேன், சந்திரிகாவின் தற்போதைய தேவை தற்காலிக 2 வருட பிரதமரே,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

