04-04-2004, 09:32 PM
BBC Wrote:யார் மகிந்த ராஜபக்ஷவா?
இன்னும் முடிவாகவில்லை.
ஆனால் சந்திரிகா நேற்றிலிருந்து மகிந்த ராஜபக்ஷவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அது என்னவென்று அடுத்தவர்களுக்கே தெரியவில்லை. சிலவேளை அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம்.
எது இருப்பினும் JVP இன்றைய வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
இவர்களையும் தவிர்த்து, சிங்கள மக்கள், ஒரு சிங்கள கத்தோலிக்கரோ அல்லது கிறிஸ்தவரோ கூட அதிபராகவோ அல்லது பிரதமராகவோ வரக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழும் போது ஒரு தமிழர் இவர்களால் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு, வாக்கு வேட்டைக்கான ஒரு விளம்பர தந்தரமாகவே கருதலாம்.
அப்படியான ஒரு முடிவு வருமானால் அடுத்த தேர்தல் உடனடியாக வருவதற்கு அதுவே வாய்ப்பை உருவாக்கும்.
அல்லது 2 வருடத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் அதிபர் நிலையிலுள்ள சந்திரிகா, அதிபர் பதவியையே கூண்டோடு அழித்து விட்டு வருவதற்கு முன், ஒரு முத்திரை(Stamp)யாக கதிர்காமரை தற்போதைக்கு பயன்படுத்தலாம்??????????????
<span style='font-size:25pt;line-height:100%'>
இதுவும் அரசியல்தான் சாமி</span>

