04-02-2004, 01:18 PM
யாழ். பகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளார்கள்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 18:41 ஈழம் ஸ
யாழ். தேர்தல் தொகுதியில் தொடர்ச்சியான கடும் கண்காணிப்பில் ஈடுபட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களும், ஏனைய அனைத்து சிங்கள கண்காணிப்பாளர்களும், யாழ். வாக்களிப்பு நிலையங்களில் எதுவித வன்முறைகளோ ஒழுங்கீனங்களோ முறைகேடுகளோ நிகழவில்லை என்று கருத்துக் கூறியுள்ளார்கள்.
ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி.உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.உறுப்பினர்கள், யாழ். தேர்தல் தொகுதியில் கடும் ஒழுங்கீனங்கள் காணப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையாளரிடம் முன்வைத்திருந்தனர். அதைவிட, தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தலொன்றை அறிவிக்கும் படியும் கோரியிருந்தனர்.
இந்நிலையில், அங்கு கடமையிலிருந்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்த கருத்தில், யாழ். தேர்தல் தொகுதியில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்ததாகவும், அங்கு அனைத்துக் கட்சியின் அங்கத்தவர்களும் தங்களது துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கியதைத் தாம் அவதானிக்க முடிந்ததாகவும் கருத்துக் கூறியுள்ளனர்.
நன்றி புதினம்!