04-01-2004, 08:32 PM
kuruvikal Wrote:<b><span style='color:red'>ஊரோடும் உறவாடும் இவர்கள் யார்?
பாதைத்திறப்பு, சமாதானத்தின் வருகை, தடை செய்யப்பட்ட பொருட்களின் பாவனை என தளைகளின் முடிச்சுக்கள் பல விடுபட தாயகத்தின் உள்ளே வருகை என்பது விசாலித்து நிற்கிறது.
இப்போது ஒருவருகை எங்கள் செவிகளுக்குள் நுழைந்து நச்சு விதைகளை விதைக்கத் தொடங்கி விட்டது.
அதுதான் \"ஊரோடு உறவாடும்' எனும் வானொலி ஒலிபரப்பு. இதன் வீச்சு இப்போது தாயகத்தின் எல்லையின் விசாலித்து நிற்கிறது.
யார் இவர்கள்? இன்று ஊரோடு உறவாடுபவர்கள்?
நாம் இவர்களை புரிந்துகொள்வதோடு தெரிந்து கொள்வது அவசியம்.
இந்திய இராணுவக்காலத்தில் ஈ.என்.டி.எப் எனவும், த்திரிஸ்டார் எனவும் அழைக்கப்பட்ட தேசிவிரோத கும்பலின் வானொலியே இந்த ஊரோடு உறவாடு வானொலி ஒலிபரப்பு. இன்று எங்கள் மக்களோடும், ஊரோடும் உறவாட முனைபவர்கள்.
பரந்தன்ராஜன் என்று அழைக்கப்பட்ட இந்தத் திரிஸ்டார்கும்பலின் தலைவனின்கீழ் இப்போது லண்டனிலிருந்து இந்த வானொலி ஒலிபரப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது மக்களால் பெருமளவு மறக்கப்பட்ட இந்த கும்பல் ரி.வி.சி.என்ற பெயரில் பெரிதும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்தியலை விதைத்து வந்தனர்.
தற்போது கிழக்கில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைத் தமக்குக் கிடைத்த அவலாக இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் தொடர்பாக தாயக மக்களும், புலம்பெயர்ந்த மக்களும் விழிப்பாக இருப்பது அவசியம். எமது விடுதலைப்போரை அழிப்பதற்கு படையியல் ரீதியாக போரிட்ட அதேசமயம் அதே அளவாக கருத்தியல் ரீதியாக எத்தனையோ படை எடுப்புக்களை மேற்கொண்டதை தமிழீழமக்கள் மறந்து விடமாட்டார்கள்.
லங்காபுவத், இராணுவப்பேச்சாளர், கூட்டுப்படைத் தலைமையகம், மக்கள்குரல், வானம்பாடி, என நீண்ட பட்டியல் உண்டு.
இப்போது இந்த கும்பலிற்கான வரவுகளுக்கு மக்களின் தடைகள் எல்லைகளில் இருப்பதால் வானலைகளின் ஊடே ஊரோடு உறவாட அல்ல ஊரின் உறவைக்கெடுக்க முயற்சித்து வருகின்றனர்.
இத்தகைய ஒலிபரப்புக்கள் தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.
ஒரு விடுதலைப் போரின் ஆணிவேரைப் பிடுங்கியெறிய இத்தகைய களைகளை எப்போதும் விடுதலையை விரும்பாத சக்திகள் பயன்படுத்த முனைவது வழமையே.
ஆனால் தாங்கள் சார்ந்த இனத்தின் விடுதலையையே இந்த சக்திகள் அடியோடு அழிக்க துணைபோவது வெட்கக்கேடானது.
[b]கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் இந்தக்கருத்தியல் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</b>
ஆகவே மக்களே இந்த புள்ளுருவிகளின் இந்த ஒலிபரப்புத் தொடர்பாக விழிப்பாக இருப்பது மிக அவசியம்.
ஒரு தெளிவுபெற்ற இனத்தைக்கூட கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்யும் வல்லமை பொருத்தியது இந்தக்கருத்து.
இதில் இந்த கருத்துக்களை மக்கள் மத்தில் கொண்டு செல்லும் பணியில் செயற்படும் ஊடகங்கள் எந்த இலட்சியங்களையும் இலக்குகளையும் வரையறை செய்யாது ஒரு இனத்தைக் கெடுப்பதையே குறியாகக்கொண்டு இயங்கும் இத்தகைய குழுக்களின் கைகளில் சென்றடைந்திருக்கும் நிலையில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.
இது இந்த இனத்திற்கு அதிக பாதுகாப்பைத்தரும். </span>
வேழினி ஈழநாதம்.
இக்கருத்துக்கு வெளிச்சம் தந்தது சூரியன் டொட் கொம்...!
[url]ஊரோடு உறவாடும் இவர்கள் யார் ? (வேழினி) 28.03.04
http://www.oliveechu.com/velini.ram
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

