03-31-2004, 06:09 PM
காதல் என்பது துன்பம் தரும் இன்பம். காதலர்களாக இருக்கும்போது ஒருவருக்கொருவர் அடிமையாக வாழ்கிறோம். கெஞ்சிக் கொஞ்சி குளைகின்றோம். நான் என்ற அகந்தை அங்கு தலைகாட்டுவதில்லை. பாதிநேரம் பிரிவில் கழிவதால் வலியில் வேறு எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை. குற்றங்கள் கூர்ந்துபார்க்கப்படுவதில்லை. திருமணம் என்ற பந்தத்தின் பின் காதல் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. குற்றங்கள் குறைகள் உருப்பெறுகின்றன. இருவரில் ஒருவர் பிழைசெய்தாலும் விரைவில் அது மற்றவரையும் தொற்றிக்கொள்கிறது.
ஆண் நடவடிக்கையில் மாறுகிறான். கெஞ்சுதலும் கொஞ்சுதலும் ஆண்மைக்கு அழகன்று என நினைக்கிறான். இதனால் பெண் ஏமாற்றம் அடைகிறாள். பெண் கொஞ்சம் படித்திருந்தால் பெண்ணியம் பேசி பிரச்சனைகளுக்கு நெய்வார்க்கிறாள். பிரிவிற்கு அவர்களே பாதிக்குமேல் காரணமாகிவிடுகிறார்கள்.