03-29-2004, 04:10 PM
எங்களைப் பொறுத்தவரை ஆண் பெண் என்று பிரச்சனைகளை அணுகுவதைவிட மனிதன் என்ற பொது வடிவில் ஆணினதும் பெண்ணினதும் பிரச்சனைகள் ஏற்றத் தாழ்வுகள் இன்றி சமமாக பரிசீலிக்கப்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுவான தீர்வுகள் எட்டப்பட வேண்டும்....! அதே வேளை அவை அவரவரின் தனித்துவங்களை பாதுகாக்கும் வகையிலும் சமூக கட்டமைப்பைப் பாதிக்காத வகையிலும் பாதுகாத்து உறுதிப்படுத்தும் வகையிலும் தூய அன்பின் பாலான புரிந்துணர்வுடனான செயற்பாடுகளுக்கு வழி சமைத்துக் கொடுக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதே எமது அவா....!
ஆண்- பெண் சார்ந்த ஒரு குற்றச்செயல் தொடர்பில் வெறுமனவே யதார்த்தப் புற நிலைகளுக்கு அப்பால் ஆணின் மீதோ அல்லது பெண்ணின் மீதோ தனித்து குற்றச் சாட்டுகளை வைத்து தாந்தோன்றித்தனமான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் வளர்த்து உணர்வுகளைச் சீண்டி ஒருவர் மீது மற்றவர் வெறுப்புகளை வளர்த்து சமூகத்துக்க அவசியமான ஒழுக்கம் கட்டுப்பாடு ஆகியவற்றை இழந்து வாழ முயலுதல் மனிதன் என்ற சமூக விலங்குக்கு எப்போதும் வளமான வாழ்வுக்கு உதவப் போவதில்லை.....! அது மட்டுமல்லாமல் வெறுப்புக்களால் அன்பின் பாலான புரிந்துணர்வை நோக்கிச் செல்லுதல் என்பது சாத்தியமில்லாத ஒன்று....!
எனவேதான் மேலோட்டமாக, யதார்த்தத்தை, மனித வாழ்வியல் கோலங்களை எல்லாம் கடந்து எடுத்ததற்கெல்லாம் ஆணின் மீது குற்றம் சாட்டும் பெண்ணியத்தையும்.... பெண் சொல்கிறாள் என்பதற்காக தங்களளவில் சரியென்று பட்டதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் ஆண்களையும் ஆண் என்பதற்காக பெண்களையும் சக மனிதன் என்று பார்க்க மறுப்பதையும் அவர்களிடத்தில் யதார்த்தத்திற்கு அப்பால் உள்ள வேறுபாடுகளை திணிக்க முயல்வதையும் நாம் எப்போதும் ஆதரிக்க மாட்டோம்....!
அப்படியான கருத்துக்களைத் திணிக்கவோ அல்லது பரப்புரை செய்வதையோ எவராகிலும் எம்மட்டில் எதிர்ப்போம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>