03-28-2004, 06:24 PM
Eelavan Wrote:மகேஸ்வரன் பற்றி தெரியாது என்று சொல்ல விரும்பவில்லை
அவரை தமிழ் மக்களுக்கு ஒன்றுமே செய்யாதவர் என்று ஒதுக்கிவிடவும் முடியவில்லை அதே நேரம் அவரது அரசியல் வாழ்வு பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளவும் முடியவில்லை
ஈ.பி.டி.பியினரிடமிருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பவள் கவசவாகனமொன்றையே தன் வீட்டுக்கு காவலாக நிற்கச்செய்யுமளவுக்கு செல்வாக்கு உள்ளவர்
அரசியல்வாதிகளுக்குரிய எமது விளக்கத்தை வைத்துப் பார்த்தால் மகேஸ்வரன் சிறந்த "அரசியல்"வாதி
எனக்கு உண்மையிலேயே மகேஸ்வரன் பற்றி நிறைய தெரியாது. சிலர் அவர் வர்த்தகர்தான் என்றும் வடக்கில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி அரசியலில் புகுந்தவர் என்றும் அவருக்கு அரசியல் பாரம்பரியம் கிடையாது என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள். வேறு சிலர் அவர் திடீர் என்று அரசியலுக்கு வந்தாலும் மற்றய தமிழ் அரசியல் கட்சிகளை விட நன்றாக செயற்பட்டவர் என்றும் அவருடைய தந்தையும் ஒரு அரசியல்வாதி என்று சொல்கின்றார்கள்,
நீங்கள் சொல்லியது போல அவருக்கு நிறைய செல்வாக்கு உண்டு என்றுதான் நானும் அறிந்தேன். ஆனால் அவருடைய செல்வாக்கு மக்கள் பிரைச்சனையை தீர்ப்பதில் இராணுவத்தின் மேல் செல்லுபடியாகவில்லையே. ஏதோ சாலை மறியல் எல்லாம் செய்தார். அது அரசியல் ஸ்டண்டா அல்லது உண்மையா?
எது எப்படியோ பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் நின்று வென்றார். அந்த தேர்தல் தீவுப்பகுதி தேர்தல் போல் அல்ல என்று நான் நினைக்கின்றேன். யாராக இருந்தாலும் சங்கரியாக இருந்தாலும் கூட நியாயமான தேர்தலில் வென்றால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

