03-28-2004, 04:29 PM
Eelavan Wrote:ஒரு வகையில் அதுவும் கற்பழிப்புத் தான் அதாவது பெண்ணின் மனவிருப்பத்துக்கு மாறாக உடலுறவு கொள்ளல் ஆனால் தற்போது ஊடகங்களிலும் சரி புத்தகங்களிலும் சரி கற்பழிப்பு என்ற பதம் உபயோகிக்கப்படுவதில்லை மாறாக பாலியல் வல்லுறவு என்ற பதமே உபயோகிக்கப்படுகிறது.
இதற்கு கற்பழிப்பு என்ற சொல்லை உபயோகிக்க முடியாது, நீங்கள் சொன்ன பாலியல் வல்லுறவு என்ன சொல்லே பொருத்தமானது என்பது எனது கருத்து.
Eelavan Wrote:ஆண் தனது உடல்வலிமை காரணமாக இந்த பாலியல் வல்லுறவுக்கு உட்படுவதில்லை அல்லது உட்பட்டாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை ஆயினும் அப்படிக் கேள்விப்பட்ட சம்பவங்களும் உண்டு
வெறுமனே பெண்ணின் மனவிருப்பத்துக்கெதிராக உடலுறவு கொள்வதுதான் கற்பழிப்பு எனின் பல கணவன்மார் தம் மனைவி மாரை தினம் தினம் கற்பழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்
பெண்ணின் மனவிருப்பத்துக்கெதிராக உடலுறவு கொள்வது கணவனாக இருந்தால் கூட அது பாலியல் வல்லுறவுதான். நீங்கள் சொன்னது போலவே தினம் தினம் பல கணவன்மார் தம் மனைவிமாரை பாலியல் வல்லுறவு செய்வது உண்மைதான். ஆங்கில சட்டப்படி பெண்ணின் விருப்பமின்றி உறவு கொள்ளும் கணவனின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று நினைக்கின்றேன்
Eelavan Wrote:இதேவேளை பெண்ணோ ஆணோ தம் வாழ்க்கைத்துணை அல்லாத இன்னொருவருடன் உடலுறவு கொள்வது அவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் உரிமை ஆனால் அவர் தம் துணைக்கு துரோகம் செய்கின்றனர் என்ற முறையில் அதுவும் கற்பிழப்பே
ஒருவருடைய கற்பை இன்னொருவரால் பலாத்காரமாக அழிக்க முடியாது. கற்பு என்பது வெறும் உடல் உறவு அல்ல பலாத்காரமாக அழிப்பதற்கு. ஒருவர் வாழ்க்கை துணை அல்லாத இன்னொருவருடன் விருப்பத்துடன் சேரும்போதுதான் கற்பிழக்கின்றார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

