03-28-2004, 12:16 AM
<span style='font-size:22pt;line-height:100%'>சில வருடங்களுக்கு முன் என் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து \"நாங்கள் செய்த குறும்படங்களுக்கு விருதுகள் கிடத்திருக்கு. இதுவே நமக்கு அடுத்த அடி எடுத்து வைக்கிறது சரியான நேரம். ஓரு முழு நீளப் படத்தை செய்வோம்\" என்றார்கள்.
நானும் சரியென்று சொல்லி வானோலி ,தொலைக்காட்சியிலெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நல்லதொரு திருப்பம்.
எல்லா இடத்தில இருந்தும் டெலிபோன் கோள்கள். வானோலி பேட்டி வேற தூள் பறக்கிற மாதிரிதான். . . . .
தெரியும்தானே, ஒரு விழிப்புணர்வு நம்ம உறவுகள் மத்தியில. . . சந்தோசமாக இருந்தது.
எல்லோருடய விலாசங்கள், தகவல்களை எல்லாம் வாங்கி அழைப்பிதழ் அனுப்பி, அழைப்பிதழிலேயே, என்ன எமது திட்டம் என்று எல்லாம் கொள்கை விளக்கம் கொடுத்து . . . அவங்களுடைய கருத்துகளையும் எழுதுங்கள். . . என்று சொன்னோம்.
இப்படி வாரவங்க பலருக்கு எழுத நேரமிருக்காது . . . .
சிலருக்கு எழுதத் தெரியாது. . . . . .
இவங்கள் போன்ல சொன்னதை நான் குறித்துக் கொண்டேன்.
முதல் கடிதம் குறைந்தது 100 பேருக்கு அனுப்பினோம்.
கொள்கை விளக்கமெல்லாம் ,படித்து தெளிவானதாலேயோ என்னவோ பிறகு கூட்டம் ஒரு 100 பேர்களாக இருந்தவர்கள், 35 பேர்களாக குறைந்தது.
அதற்கு பிறகு நான் அதிகமாக யோசிக்கத் தொடங்கினேன். . . .
ஏன் திடீரென்று 100,35 ஆகியது. ஓரே குழப்பம்.
ராடார் வேலை செய்ய மறுத்தது.
எங்கேயோ பிழை விட்டுட்டோமே?
அது என்னவா இருக்கும்?
தலையை பிச்சுக் கொண்டேன். . . . .ஊகும். . . . ஒரு கிழமையா பிடிபடவேயில்லை.
அதுக்கு பிறகு அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
விடை ஒரு மாதிரி வெளிச்சது.
நான் எடுக்கிற படங்கள் யதார்த்தமானவையா இருக்கும். எனது படங்களில கதாநாயகன் கதாநாயகி வில்லன் என்று இருக்காது. அவனவன் வாழ்கையில அவனவன் தன்னை கதாநாயகனாத்தான் நினைக்கிறான். ஓவ்வொரு மனிதனக்குள்ளயும், தெய்வமுமிருக்கு மிருகமுமிருக்கு. அதனால கதாநாயகனா நினைக்கிற ஒவ்வொரு மனிதனும் எங்கோ ஒரு இடத்தில தப்பு பண்ணுகிறான். அப்போது அவன் வில்லனாகிறான். அதே மனிதனுக்கு ஏதோ ஒரு இடத்தில சிரிக்கிறதுக்கோ இல்ல இன்னொருவரை சிரிக்க வைக்கிறதுக்கோ ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அப்போ நாங்க கொமடியனாகிறோம். இப்படித்தான் என் படம் இருக்கும் என்று, மேதாவித்தனமா அடுத்தவங்களுக்கு அறிவை கொடுக்கிறதுக்கு நான் எழுதிய விளக்கத்தால் வந்த வினை அது என்று பிறகுதான் புரிந்தது.
நான், அதன்பிறகு, அப்படியான விளக்கங்களை தவிர்த்தே அடுத்த பதில் கடிதம் எழுதினேன்.
முதல் சந்திப்புக்கு நாள் குறித்து ஹோட்டல் ஒன்றில் எனது சுவிஸ் திரைப்பட சம்மேளனத்தின் கூட்டம் நடைபெறும் பகுதிக்கு பணம் கட்டி மாலை 2.00 மணிக்கு கலைஞர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்தால் மாலை 3.00 மணி வரை 5பேர்தான் வந்திருந்தார்கள்.
கொஞ்சம் நேரம் கழித்து அதாவது மாலை 4.30 மணிக்கு பிறகு ஒருவாறு 16பேர் அளவு வந்தார்கள்.
கூட்டத்தை ஆரம்பித்தோம்.
முன்ன விட்ட தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று மிக அவதானமாக பேசினேன். கதையை அவர்கள் ரசிக்கும் படி சொல்ல மிகவும் சிரமப்பட்டேன்.
கோடம்பாக்கத்தில் நின்று கொண்டிருப்பவர்களை ரேயின் ரேன்ஜூக்கு கொண்டு வாரதெண்டால் பின்லாடனை பிடிக்கிறதை விட கடினம். இருந்தாலும் எல்லாரும் சந்தோசத்தில் சிரித்தார்கள்.
எல்லோருக்கும் சந்தோசம்.......
அவர்களையும் கொஞ்சம் பேச விட்டேன். இது நான் செய்த அடுத்த தவறு.
அவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கதையிருக்கும் என்று சொல்லி பேசச் சொன்னேன்.. மனசிலிருந்தவற்றை ஒரு சிலர் மடை திறந்தது போல சொன்னார்கள்.
ஒரு சில கதைகள் நல்லாயிருந்தது.
இப்போ கதைக்கு பஞ்சமில்ல. ஆனா முதல்ல ஒரு கதையை தேர்வு செய்து செய்வோம், அடுத்ததா தொடரலாம் என்று சொல்லி ஒரு சின்ன இடைவேளை கொடுத்தேன்.
இடைவெளிக்கு எல்லோரும் வெளியே போனார்கள்.
இடைவேளை முடிந்த பிறகு மறுபடி கூடினால், 6-7 பேரைக் காணவில்லை.
தேடிப் போனால், அவர்கள் ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டே கதை விவாதத்தில் முழுதாக ஈடுபட்டிருந்தது தெரிந்தது.
எனக்கு சந்தோசம்.
நல்ல கலைஞர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று.
சரி டீயை குடித்து விட்டு கெதியா வாருங்கள் என்று சொல்லி விட்டு அறைக்கு திரும்பி வந்து, உள்ளே இருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரத்தில் டீ குடித்து விவாதித்துக் கொண்டிருந்தவர்களில், ஒருவர் மட்டும் எமது பகுதிக்கு வந்தார்.
நான் மற்றவர்கள் வருகிறார்களா? என்று கேட்டேன்.
இல்லை என்றார்.
நான் அவரது முகத்தைப் பார்த்தேன்.
அவரது முகம் இறுகிப் போயிருந்தது.
அமைதியாய் இருந்துவிட்டுச் சொன்னார் \"அவர்கள் விவாதித்த கதையை தாங்களே படமாக்க போறதா சொல்லிட்டு போயிட்டாங்கள்\" .
என்னோடு அப்பாவித்தனமான மீதியாகி இருந்த 8-9 பேருடைய முகங்களும் இறுகிப் போனது.
ஒருவர் மட்டும் கொடுக்கால் வாயை திருப்பி \"உங்க புண்ணியத்தில, அவங்களுக்கு படம் எடுக்க வாச்சிருக்கு\" என்று சொல்லி விட்டு பக்கத்திலிருந்தவரைப் பார்த்து \"கெக்கே\" என்று கோழிச் சிரிப்பொன்றை சிரித்தார்.
அடுத்த அடி எடுத்து வைக்கிறதுக்கு சரியான நேரம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
எடுத்து வைக்கிறது இல்ல, அடி சறுக்கிறதுக்கு................</span>
![[Image: falldown.jpg]](http://images.google.ch/images?q=tbn:gMCnFORBJlsJ:iccsports.com/article/images/falldown.jpg)
AJeevan
Note:அவர்களாவது படம் செய்தார்களா? அதுவும் இல்லை............

