03-26-2004, 12:41 AM
இஸ்ரேலைக் கண்டித்து ஐ.நா. வில் தீர்மானம்
அமெரிக்கா வீட்டோவை பிரயோகிக்குமா?
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்தும் ஹமாஸ் தலைவர் ஷேக் யாஸீனின் படுகொலையைக் கண்டித்தும் பலஸ்தீனம் ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளது. இஸ்ரேலுக்கு எல்லையற்ற ஆதரவை வழங்கி வருகின்ற அமெரிக்கா இந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தலைவர் ஷேக் அஹமத் யாஸீனை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. இதனை அடுத்து மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அல்ஜீரியா பலஸ்தீனம் சமர்ப்பித்த தீர்மானத்தை பந்தோபஸ்து சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய நாடுகளிடம் சுற்றுக்கு அனுப்பியுள்ளது.
பலஸ்தீனம் சமர்ப்பித்த இந்த தீர்மானம் ஒரு தலைப்பட்சமாக இருப்பதாலும் பயங்கரவாதத்திற்கு மறைமுக ஆதரவை வழங்குவதாகவும் கூறி அமெரிக்க இந்தத் தீர்மானத்தை ஆரம்பத்திலே நிராகரித்தது.
ஆனால் இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று பலஸ்தீனம் கேட்டுக் கொண்டது.
யாஸீன் எனும் தீவிரவாதியொருவரை கொன்றமைக்காக ஆதரவு கோரி விவாதிக்க அவசியமில்லை என்று அமெரிக்க தூதுவர் ஜொன் நெக்ரோ சயைபில் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த பலஸ்தீன தூதர் நாசர்அல்கித்வா, பயங்கரவாதத்தை விட்டுவிட்டு சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறும் விதத்தையும், பலஸ்தீன பூமியில் ஆக்கிரமித்ததையும் பற்றி விவாதிப்போம் என்றார்.
தீவிரவாதத்திற்கு ஆதரிப்பதில்லை என்ற போதிலும் தீவிரவாதத்தின் தந்தைக்காகவே சபை கூடுகிறது என்றார் இஸ்ரேலிய தூதர் டான்கில்லார் மேன். ஆனால் இதற்கு பதிலளித்த கித்வா, பலஸ்தீனத்தின் எந்த தீவிரவாதத்தின் குழுவின் பெயரையும் தீர்மானத்தின் மொழியக்கூடாது என்றும் தெரிவித்தார். விவாதம் தொடர்ந்தும் நடைபெறும் என தெரிகிறது.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>