03-25-2004, 08:18 PM
நிதானமாக எழுத வேண்டிய விடயம் . ஈழவன் & சண்முகி, படம்தான் வேதனையாக இருக்குமே தவிர படப்பிடிப்பு நடந்த விதத்தைக் கேட்டால் அல்லது நினைத்தால் சிரிப்புதான் வரும்.
பின்னர் விடயத்தை நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடாதீர்கள்.
<b><span style='font-size:30pt;line-height:100%'>சினிமா கனாக்கள்..............</b></span>
[size=15]அதைப்பற்றி எழுதுமுன் சுவிசில் என் முதல் அனுபவத்தை முகவுரையாக எழுதுவது அடுத்ததற்கு மனதை தயார் செய்து கொள்ள உதவியாக இருக்குமென நம்புகிறேன்.
நான் சுவிசுக்கு வந்த ஆரம்ப கால கட்டத்தில் (1990), ஒரு சிலர் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு தயாராவதாக அறிந்தேன். எனக்கும் பெருமகிழ்ச்சி. நானும் அப்படியா என்று வாயைப் பிளந்தேன். ஓரு சிலர் சொன்ன கதைகளைக் கேட்டால் ஐரோப்பாவெல்லாம் தூள் கிளப்பும் என்றார்கள். இக் கதை என் காதுகளுக்கு எட்டும் காலத்தில் நான் அகதி முகாமிலிருந்தேன்.
அக்காலத்தில் இருக்கும் முகாமிலிருந்து நகருக்கு வர மாத்திரமே எனக்குத் தெரியும். மொழியும் புரியாது இடமும் பெரிதாக பரிச்சயமில்லை.
என்னோடு முகாமிலிருந்த ஒருவர் ஊடாக, எனக்கு சினிமாவில் பரிச்சயமிருப்பது அறிந்து , ஒருநாள் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்கள். நானும் பயபக்தியுடனே அங்கு சென்றேன்.
அவர்களது வீட்டுக்குள் நுழைந்ததும் எனக்கு முதல் அதிர்ச்சி. அறையெல்லாம் பியர் டின்கள் நிறைந்து கிடந்தது. அறையிலிருந்த இருவரும் கொஞ்சம் போதையுடன் இருந்தார்கள். நானும் சுததாகரித்துக் கொண்டு இருக்கச் சொன்ன இடத்தில் அமர்ந்தேன்.
கொஞ்ச நேரம் வழமையான அறிமுகபடலம், குசல விசாரிப்புகள்.
பின்னர் கதை சொல்லும் படலம் ஆரம்பமாகியது. இருவரும் மாறி மாறி கதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒருவர் சொல்வதில் உள்ள தவறை சரி செய்து, அடுத்தவர் கதை சொல்லத் தொடங்குவார். அவர் விடும் தவறிலிருந்து முன்னையவர் கதையை தொடருவார். இதற்குள் நல்ல நல்ல வார்த்தைகள் தலைகாட்டி மறையும். இப்படியே 2 மணித்தியாலங்கள் சென்றது. எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.கதையும் புரியவில்லை.
எனது முக்கிய பிரச்சனையானது யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர், யார் நடிகர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாதவனாக திணறிப் போனதேயாகும்.
ஓரு சந்தர்ப்பம் வந்த போது, மெதுவாக நான் என் சந்தேகத்தைக் கேட்டேன். அவர்கள் தந்த பதில் அவரவர் பகுதிகளை அவரவரே இயக்கி நடிப்பதாகச் சொன்னார்கள்.நான் வாயே திறக்கவில்லை.
"கமரா நீர் எடுத்தால் போதும்.........." என்றார்கள்.
எனக்கு முச்சு நின்றது போலாகியது. நான் பேசவில்லை.
அடுத்த கேள்வி "என்ன மாதிரி கமரா வாங்கினால் படம் நல்லா வரும்?"
நான் கடையில் பார்த்து விட்டு சொல்வதாக கூறிவிட்டு, அழைத்துச் சென்றவரோடு வெளியேறினேன்.
அழைத்துச் சென்றவர் என்னிடம் "நான் என்ன பாத்திரத்தில் நடித்தால் நல்லாயிருக்கும்" என்று கேட்டார்.
கதையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாக வருகிறதே அந்த பாத்திரத்திதை தந்து பாலத்திலிருந்து ஓடும் ரயிலில் குதிக்கச் சொல்லி , உன்னைக் கொன்று போட வேண்டுமென்றேன்.
அதன் பிறகு நான் அந்தப்பக்கமே போகவில்லை. கண்டால் , கடன் கொடுத்தவனைக் கண்டவன் போல நான் மறைந்து விடுவேன்.
அவர்கள் கடைசி வரை படம் எடுக்கவேயில்லை, ஆனால் படம் எடுக்க தேர்ந்தெடுத்த இரு பெண்களையும் (அக்கா-தங்கை) திருமணம் செய்து சுவிசை விட்டுச் சென்று குழந்தை குட்டிகளோடு தற்போது இரு நண்பர்களும் ஹொலண்டில் வாழ்கிறார்கள்.
தொலைக்காட்சியில் எனது பேட்டியை பார்த்து விட்டு ,என்னோடு தொடர்பு கொண்டார்கள்.
இன்னும் படமெடுக்கும்
ஆசையோடே வாழ்வதாக சொன்னார்கள்........................
AJeevan

ஆசையோடே வாழ்வதாக சொன்னார்கள்........................ AJeevan