03-25-2004, 06:25 PM
MURALI Wrote:<span style='font-size:22pt;line-height:100%'>மகன்-மருமகள்-பெரியவர் சார்ந்த ஒரு சில பகுதிகள் சேர்க்கப் பட்டிருந்தால் அழியாத கவிதை இன்னும் சிறப்புப் பெற்றிருக்கும்.அதுவே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி கதையின் தாக்கத்தை குறைத்திருக்கிறது. </span>
முரளி, தங்களது விமர்சனத்துக்கு நன்றிகள். இக்குறை எனக்கே தெரியும். ஆனால் அதிலிருந்து மீள நான் காரணங்கள் கூறி தப்புவதற்கு முடியாது. ஒரு படைப்பின் வெற்றியை விட தோல்வியை ஏற்றுக் கொள்வது ஒரு இயக்குனரின் கடமையாகும். எனவே உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
[quote=MURALI]
அழிவைத் தேடிய இலங்கை தமிழ் சினிமா புலத்தில் வளர வேண்டிய தருணத்தை நோக்கி முளை விட்டிருக்கும் இக் கால கட்டத்தில் அழியாத கவிதையின் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டுவது எமது கடமையும், பொறுப்புமாகும்.
<span style='font-size:21pt;line-height:100%'>உங்கள் வாழ்த்துகளுக்குள்ளே <b>அழிவைத் தேடிய இலங்கை தமிழ் சினிமா என்று</b> குறிப்பிட்டிருப்பது போலவே, நான் பலரோடு முரண்படுவதும் விசனப்படுவதும் ஏன் என்பது பலருக்கு தெரியாமலிருக்கலாம். இலங்கையின் தமிழ் சினிமாவை அழித்தொழித்த பெருமை தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றையே சாரும். அதிலிருந்து மீள்வதற்கு புலம் பெயர் நாடுகளில் சிறிதாக முயற்சிகளை மேற் கொண்டால், அவற்றையும் ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டும் விமர்சனங்களும் ,திருட்டுக்களும் நடைபெறுவதை வளரவிட்டால் நிச்சயம் அது புலம் பெயர் நாடுகளில் வளரும் தமிழ் சினிமாவை தலை தூக்க முடியாமல் ஆக்கிவிடும். எனவே உங்கள் கருத்துகளை கண்டு மகிழ்கிறேன். இதை ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
எனது படைப்பாக மட்டுமல்ல, வேறு எவருடைய படைப்பாகட்டும் , ஆரம்பத்தில் வைக்கப்படும் விமர்சனங்கள் காரணமாக எம்மவர் படைப்புகளை உருவாக்கவே முடியாத நிலை உருவாகலாம். இலங்கை தமிழர்கள் பேசாமலே இருந்து தம் உரிமைகளை இழந்து விட்ட ஒரு நிலையைப் போல, இங்கும் வளரும் தமிழ் சினிமாவொன்றை அழித்தொழிக்க கருத்துகளை முன் வைக்கும் எவரையும், எதிர்த்து குரல் கொடுப்பது தப்பாகாது. அதைச் செய்யாமல் இருப்பதே மாபெரும் தவறாகும். எனவே தங்களைப் போன்ற விமர்சனங்கள் வருவதில் அனைத்து கலைஞர்களும் பலம் பெறுவார்கள்.</span>
AJeevan

