03-25-2004, 10:58 AM
<b>எஞ்சப்போவது நரமாமிச உலகு?.</b>
மத்திய கிழக்கின் காசா நகரில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்னால் பாலஸ்தீனத் தீவிரவாத இயக்கமான ஹமாஸின் ஆன்மீகத் தலைவர் Nர்ய்க் அஹமட் யாசீன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாலஸ்தீன மக்கள் கொந்தளித்த வண்ணமிருக்கின்றார்கள்.
சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கையை ஓட்டிý வந்த பார்வைக்குறைபாடுமுடைய அந்த 67 வயதான ஆன்மீகத் தலைவர் மீது ஹெலிகொப்டர்களில் இருந்து ராக்கெட் தாக்குதலை நடத்தி இஸ்ரேலிய இராணுவம் அதன் 'படை வலிமையை" பறைசாற்றியிருக்கிறது.
இழந்த தங்கள் தாயகத்தை மீட்பதற்காக அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக இரத்தம் சிந்திப் போராட்டம் நடத்திவரும் பாலஸ்தீன மக்களின் பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய Nர்ய்க் அஹமட் யாசீன் மீது இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலின் மறுகணம் அப்பகுதிக்கு விரைந்தோடிýச் சென்றவர்களினால் காணக் கூýடிýயதாக இருந்ததெல்லாம், ஆன்மீகத் தலைவரின் இரத்தம் தோய்ந்த சக்கரநாற்காலியின் பாகங்களையே.
இக்கொலைக்கான பொறுப்பை உடனடிýயாகவே உரிமை கோரிக்கொண்ட இஸ்ரேலிய இராணுவம், பிரதமர் ஏரியல் ர்ரோனே நேரடிýயாக Nர்ய்க் அஹமட் யாசீனைக் கொலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்ததாகவும் உலகுக்குக் கூýறியது.
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிýக்கைகளின் ஒரு அங்கமே ஆன்மீகத் தலைவரின் கொலை என்று இஸ்ரேலிய அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வாய் கூýசாமல் பிரகடனம் செய்தார்.
இஸ்ரேலின் இந்தச் செயலை ஏறக்குறைய முழு உலகமுமே கடுமையாகக் கண்டனம் செய்து கொண்டிýருக்கின்ற அதேவேளை, சியோனிஸவாதிகளோ, பாலஸ்தீனத்தின் சகல தீவிரவாதத் தலைவர்களுமே கொலை செய்யப்படுவதற்காக குறி வைக்கப்பட்டிýருக்கிறார்கள் என்று திமிர்த்தனத்துடன் அதே உலகத்துக்குச் சொல்லிக் கொண்டிýருக்கிறார்கள்.
தங்கள் ஆன்மீகத் தலைவரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்குவதற்கு பாலஸ்தீனத் தீவிரவாதிகள் கொந்தளித்துக் கொண்டிýருக்கின்ற வேளையில், உலகத்துக்கே தலைமை தாங்கும் தகுதியைத் தனக்குத்தானே பொருத்திக் கொண்ட அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புர்; 'பயங்கரவாதத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது. அதை இஸ்ரேல் செய்து கொண்டிýருக்கிறது" என்று கூýறியிருக்கிறார்.
பாலஸ்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டத்தை ஒடுக்குவதில் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளுக்குப் பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து, 2001 செப்டெம்பர் 11 நியூயோர்க்கிலும் வார்pங்டனிலும் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு 'தான் பயங்கரவாதமென்று நினைப்பதற்கு" எதிராக முழு உலகையும் அணி திரட்டுவதற்கு கங்கணம் கட்டிýக் கொண்டு செயற்பட்டு, உலக மக்களின் எந்தவொரு நியாயமான வேண்டுகோளுக்கும் செவிசாய்க்க மறுத்து அடாவடிýத்தனத்தை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து இதைத் தவிர வேறு எந்த வார்த்தையை எதிர்பார்க்க முடிýயும்?.
ஆனால், நியாயமானதும் சட்டபூர்வமானதுமென்று உலக சமூýகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை 'மேலும் மாசுபடுத்துவதற்கு" 2001 செப்டெம்பர் 11 இன் பின்னரான நிலைமைகளை முற்று முழுதாகப் பயன்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு துணிச்சலைக் கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் கடைப்பிடிýக்கும் அணுகுமுறையை சகித்துக் கொள்வதனால் ஏற்படக் கூýடிýய விபரீதத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது புரிந்து கொண்டும் ஏனோதானோவென்று எதுவும் பேசாமல் இருப்பது பெரும் விசனத்தை ஏற்படுத்துகிறது.
நியாயபூர்வமானவை என்று உலக சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட விபரீதத்தின் காரணமாக அவற்றின் நியாயத் தன்மைகளையோ அல்லது இலட்சியக் கூýறுகளையோ இழந்து விட்டதாக கருதமுடிýயாது.
அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னர் 'பயங்கரவாதத்துக்கு எதிராக" உலகளாவிய போரைத் தொடுப்பதில் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் கையாளத் தலைப்பட்ட அணுகுமுறையை அவதானித்த கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த கருத்தொன்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.
'அமெரிக்காவும் மேற்குலகும் உலக வரைபடத்தில் இருந்து ஒரேயொரு வேறுபாட்டை ஒழித்து விடுவதற்கு கங்கணம் கட்டிý நிற்கின்றன. அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான வேறுபாடே அது" என்று காஸ்ட்ரோ கூýறியிருந்தார்.
இரு தசாப்தங்களுக்கும் கூýடுதலான காலமாக உள்நாட்டுப் போரில் சிக்கி அவலப்பட்டுக் கொண்டிýருந்த இலங்கையர்களாகிய எமக்கு அந்த உள்நாட்டுப் போரை மூýளவைத்த அடிýப்படைக் காரணிகளை நிதர்சனமாகக் காணக்கூýடிýயவர்களான எமக்கு அமெரிக்காவும் மேற்குலகும் துடைத்தெறிய விரும்பும் அந்த 'வேறுபாட்டிýன்" கனதி விளங்காமல் இருக்க எந்த நியாயமும் இல்லை.
அமெரிக்காவும் அதன் பின்னால் அணிதிரண்டு நிற்கும் நேசநாடுகளும் வகுப்பது தான் உலக ஒழுங்கு என்றும் உலக நியதி என்றும் ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர வேறுமார்க்கமேயில்லை என்று போதிப்பதற்கு பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள்.
அந்த 'உலக ஒழுங்கையும் நியதியையும்" இணங்கிச் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டதன் விபரீதத்தையே இன்று சர்வதேச சமூýகம் ஈராக் விவகாரத்தில் அனுபவித்துக் கொண்டிýருக்கிறது. பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாகக் கூýறி தங்களது ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்த ஜோர்ஜ் டபிள்யூ.புர்;ர்{க்கும் பிரிட்டிýர்; பிரதமர் ரொனி பிளயருக்கும் அவர்களது நாடுகளிலேயே எதிர்ப்பு அதிகரித்து 'பொய்யர்கள்" என்று நாமகரணம் சூýட்டப்படுகின்ற போதிலும் உலக நாடுகளின் தலைவர்கள் எனப்படுவோர் பேசாமடந்தைகளாகவே இருக்கிறார்கள்.
எனவே, மத்திய கிழக்கில் பாலஸ்தீனர்கள் மத்தியில் ஏற்பட்டிýருக்கும் கொந்தளிப்பை 'பயங்கரவாதம்" என்று கூýறி 'நியாயத்தை" மறைப்பதற்கு தொடர்ந்தும் இஸ்ரேலிய சியோனிஸ்டுகளும் அவர்களின் அமெரிக்க-மேற்குலக ஆசான்களும் மேற்கொள்ளப் போகும் முயற்சிகள் பெரும் அனர்த்தத்தையே கொண்டுவரும் என்பது நிச்சயம்.
நியாயபூர்வமான போராட்டத்தின் 'யதார்த்தபூர்வமான மெய்மைகளை" பயங்கரவாதத்திற்குள் புதைத்துவிடத் துடிýக்கும் சக்திகளுக்கு உலக சமுதாயம் துணை போகாதிருப்பது அவசியம்.
அவ்வாறு தொடர்ந்தும் துணை போனால் எந்தக் கொலையையும் எவரும் நியாயப்படுத்தி விடக்கூýடிýய நரமாமிச உலக்கு தான் மிஞ்சும்.
நன்றி : தினக்குரல்.