07-01-2003, 06:06 PM
யாவாவால் என்ன முடியும்?
சுருக்கமாகச் சொல்லின் எல்லாம் முடியும்.
உதாரணம்: அசைவூட்டம், இணையப்பக்கங்களில் இயங்கும் நாற்சந்திகள்(Chatroom),
கணிப்பி(Calculator), இணையப்பக்கம், இசை, எழுதிகள், சிறிய மிதக்கும் செய்நிரல்(Applet),
இணையப்பக்க நேரங்காட்டி, விளையாட்டு மென்பொருட்கள், மொழிபெயர்ப்புச் செயலிகள்,
கல்வி சார் செயலிகள், இன்னும் பலப்பல..
யாவாவால் முடியாதது என்ன?
யாழ் இணையக் கருத்துக்களத்தில் தமிழீழப் பகுதிக்குள் நின்று வாக்குவாதப்படுவது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆம் உண்மைதான்! உதாரணத்திற்கு உங்களிடம் "லேகோ"(சிறுபிள்ளைகள் வீடு கட்டி
விளையாடும் கட்டைகள்) கட்டைகளைத் தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களால்
என்னவெல்லாம் செய்யமுடியும்? எத்தனைவிதமான உருவமைப்புக்களை உங்களால்
ஆக்கமுடியும்? அதுபோலத்தான் யாவாவும். இதனைக் கொண்டு உங்களால் நிறையவே படைக்க
முடியும்.
யாவாவைச் சுற்றி:
<b>யாவா மிதக்கும் செய்நிரல் (Java Applet): </b>இது இணையத்தின் மூலம் இன்னொரு
கணணியிலிருந்து (இணைய வழங்கி)உலாவி (Browser) மூலம் தரவிறக்கப்பட்டு உங்கள்
கணணியில் இயங்கும் ஒரு செயலி.
<b>யாவா பயனுறுத்தம் (Java Application): </b>இது உங்கள் கணணியிலிருந்தே இயங்கும்
செயலி வகை.
<b>யாவா எழுத்துரு (Java Script): </b>இதற்கும் யாவாவிற்கும் நேரடியாக எந்த சம்பந்தமும்
இல்லை. எனவே நீங்கள் யாவாவையும், யாவா எழுத்துருவையும் ஒன்றென எண்ணிக் குழம்பி
விடாதீர்கள். இரண்டுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கின்றது. அது யாவா என்னும் பெயர்தான்.
மற்றும்படி யாவா எழுத்துரு இணையமொழியான HTML உடன் இணைத்து எழுதப்படும் எழுத்துரு
மட்டுமே. இது இணைய உலாவியான NETSCAPE இன் தயாரிப்பு. இது ஒரு செயலி என்று கூடச்
சொல்லமுடியாது. பெரிய செயலிகள் உருவாக்கத்திற்கும் இது பயன்படுத்தப்படுவதில்லை.
இது யாவா போன்று Bytecode வடிவில் தொகுக்கப்பட்டு (compile) தரப்படுவதில்லை. நேரடியாகவே
இயங்குவது. இன்னொன்று என்னவென்றால் யாவா மிதக்கும் செய்நிரலைவிட வேகம் குறைந்தது.
நல்லது நண்பர்களே...
இத்துடன் யாவா பற்றிய அறிமுகத்தை முடித்துக் கொள்வோம். இனி யாவா பயில்வதற்குத்
தொடங்குவோம். மற்றும் மேலே தந்த தகவல்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எழுதுங்கள்.
தீர்த்துக் கொள்வோம். கேள்விகளையும் சந்தேகங்களையும் உடனுக்குடன் தாருங்கள். அதுபோல
பிழைகளையும் உடனுக்குடன் சுட்டிக்காட்டுங்கள். நான் யாவா பற்றி விளக்கும் முறை உங்களிற்குப்
புரியாமல் இருந்தாலும் அறியத் தாருங்கள். உங்களிற்கு விளங்கக் கூடிய முறையில் எனது
எழுத்துநடையை மாற்றிக் கொள்கிறேன்.
மற்றும் மேலே தந்த தகவல்கள் சில (பல?) இணையத்தில் பெற்றது. அவற்றின் முகவரிகளைப்
பின்னர் ஒன்றாகத் தொகுத்துத் தருகிறேன். சரி... என்ன? எல்லோரும் படிப்பதற்குத் தயாரா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சுருக்கமாகச் சொல்லின் எல்லாம் முடியும்.
உதாரணம்: அசைவூட்டம், இணையப்பக்கங்களில் இயங்கும் நாற்சந்திகள்(Chatroom),
கணிப்பி(Calculator), இணையப்பக்கம், இசை, எழுதிகள், சிறிய மிதக்கும் செய்நிரல்(Applet),
இணையப்பக்க நேரங்காட்டி, விளையாட்டு மென்பொருட்கள், மொழிபெயர்ப்புச் செயலிகள்,
கல்வி சார் செயலிகள், இன்னும் பலப்பல..
யாவாவால் முடியாதது என்ன?
யாழ் இணையக் கருத்துக்களத்தில் தமிழீழப் பகுதிக்குள் நின்று வாக்குவாதப்படுவது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->ஆம் உண்மைதான்! உதாரணத்திற்கு உங்களிடம் "லேகோ"(சிறுபிள்ளைகள் வீடு கட்டி