03-24-2004, 11:44 PM
BBC Wrote:sOliyAn Wrote:முகமூடி கிழிந்து முகம் தொ¤ய
உனக்காக
பொய்முகத்தோடு
கவிதை
புனைபெயர்
கூட்டத்தில் கத்தல்
எதுவுமே இனி சாத்தியமில்லை
எனக்கு
இந்த முடிபுக்கு என்ன காரணம் சொல்கிறார் கவிஞர்? எதுவுமே சாத்தியமில்லை என்பதுற்கு பதிலாக எதுவுமே இனி சாத்தியமில்லை என எதிர்காலத்தைப்பற்றி எதற்காக சொல்கிறார்? அப்படியாயின் இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் சாத்தியமானது எதிர்காலத்தில் சாத்தியமாகாததற்கு என்ன காரணம் சொல்லியிருக்கிறார்?! தெரிந்தவர்கள் கூறவும். அறிய ஆவலாயுள்ளேன்.
அவர் தன்னுள் இருக்கும் இன்னொரு மனிதன் வெளிப்பட்டதுதான் காரணம் சொல்கின்றார். இல்லை அப்படித்தான் நினைக்கின்றேன். அதை அவர் உணர்ந்ததும் எதிர்காலத்தில் முகமூடி போட்டு பொய் பெயரில் கவிதை போன்றவை இனி சாத்தியமில்லை என்று சொல்கின்றார், இப்படித்தான் நினைக்கின்றேன் சோழியான். தவறாக இருந்தால் திருத்துங்கள்.
திருத்துவதற்கு எனக்கு தகுதி இல்லை பிபிசி.. ஆனால் கவிதையைக் குறித்து நாங்களே எமக்குத் தகுந்தமாதிரி முடிவெடுப்பதாயின்.. அதற்கேன் நிர்வாணி. அதற்கேன் கவிதை?! ஒரு ஆக்கமென்றால் அது எதற்காக, எதைக் குறிதது எழுதப்படுகிறது.. வாசகனுக்கு அதனூடாக எழுதுபவர் எதைக் கூற வருகிறார் என்பதில் தெளிவிருக்க வேண்டும். இல்லையா?! ஏதோ எழுதுகிறேன்.. வாசகர்கள் எதையாவது தமக்கேற்றவாறு நினைத்துவிட்டு போகட்டும் என்றால்.. அது ஆக்கமல்ல. அரைகுறை!
.

