03-24-2004, 11:41 PM
சுமை இறக்கி வைக்க என் மடி உண்டு
இந்தக் குழந்தை
நாமிருவரும் இணைந்து
எழுதத் துவங்கிய கவிதை தான்..
ஆனால்
பத்து மாதம் நீ இருக்கும் தவத்திற்கு
நம் இருவருக்கும் வரம்..!!
நியாயம் தானா என்று
சில நேரம் சிந்திக்கிறேன்..
இறைவனும் ஆணோ..? அவன் செய்த சதியோ??
அல்லது இயற்கை வகுத்தளித்த விதியோ..??
உன் சுமை கருதி,
'பத்து மாதம் எதற்கு,
பத்து நாட்களில்
குழந்தை பிறந்திட வழியுண்டா?'
என விசாரித்துப் பார்த்தேன்..
குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரக் குழுவினர்
தேடி வந்து அடித்துப் போயினர்..!!
முதன்முதலாய் நம் குழந்தை
உன் வயிற்றில் உதைத்ததாய்ச் சொன்னபோது
உன் கண்ணிலும் குரலிலும்
எத்தனை இன்பம்.. எத்தனை உற்சாகம்..??
அதெல்லாம் எனக்கு
எப்போதும் எட்டாக் கனி தானா..??
உன்னைத் தினந்தோறும்
கோவிலுக்குக் கூட்டிச் செல்லும் போது
நான் வேண்டிக் கொள்வேன்..
இரவில் கனவில் கடவுள் வந்து
உன் சுமையை எடுத்து
எனக்கு மாற்றிப் போக வேண்டுமென்று..
இன்று வரைக்கும்
கனவு மட்டும் தான் வருகிறது..
கடவுளைக் காணோம்..!! நீ சில மணி நேரம்
ரத்தத்தில் மிதந்து
உன் உயிரைக் கொடுத்து
இன்னொரு உயிரைப் பெற்றெடுப்பாய்..
அறை வெளியே காத்திருக்கும்
நான் இழப்பதெல்லாம்
கை விரலின் சில நகங்கள் மட்டுமே..
அதனால் தான் முடிவு செய்தேன்..
உன் பெயரின் முதலெழுத்து தான்
நம் குழந்தைக்குத் தலைப்பெழுத்து..!!
சின்னச் சின்ன வேலைகளுக்காவது
என்னை அடிக்கடி ஏவு..
சாய்ந்து கொள்ள என் தோள் வேண்டுமென்று
தைரியமாய் அடம்பிடி..
தினந்தோறும் வயிற்றில் காது வைத்துக் கேட்டு
நெற்றியில் முத்தமிட வேண்டுமென்று
உரிமையோடு கட்டளையிடு..
இதைப் போல இன்னும் நிறைய
என்னைச் செய்யச் சொல்லிக் கட்டாயப் படுத்து..!!
அணில்கள்
சின்னச் சின்னதாய்க்
கற்களை எடுத்துப் போட்டிருந்தாலும்
அவைகளும் பாலம் கட்டியதாய்
இன்றைக்கும் காப்பியத்தில் உண்டு..!
கடைசியாய் ஒன்று..
எனக்கு மகள் தான் வேண்டும்..
என்னுள் இருந்து வருவதைக் காட்டிலும்
உன்னுள் இருந்து வந்தால்
நம் மகள்
பரிபூரணமாய்
உன்னைப் போலவே இருப்பாள்..
அதனால் தான்
இந்த அநீதியை
நான் கொஞ்சம் பொறுத்துக் கொள்கிறேன்..!!
நன்றி - மீனாக்
இந்தக் குழந்தை
நாமிருவரும் இணைந்து
எழுதத் துவங்கிய கவிதை தான்..
ஆனால்
பத்து மாதம் நீ இருக்கும் தவத்திற்கு
நம் இருவருக்கும் வரம்..!!
நியாயம் தானா என்று
சில நேரம் சிந்திக்கிறேன்..
இறைவனும் ஆணோ..? அவன் செய்த சதியோ??
அல்லது இயற்கை வகுத்தளித்த விதியோ..??
உன் சுமை கருதி,
'பத்து மாதம் எதற்கு,
பத்து நாட்களில்
குழந்தை பிறந்திட வழியுண்டா?'
என விசாரித்துப் பார்த்தேன்..
குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரக் குழுவினர்
தேடி வந்து அடித்துப் போயினர்..!!
முதன்முதலாய் நம் குழந்தை
உன் வயிற்றில் உதைத்ததாய்ச் சொன்னபோது
உன் கண்ணிலும் குரலிலும்
எத்தனை இன்பம்.. எத்தனை உற்சாகம்..??
அதெல்லாம் எனக்கு
எப்போதும் எட்டாக் கனி தானா..??
உன்னைத் தினந்தோறும்
கோவிலுக்குக் கூட்டிச் செல்லும் போது
நான் வேண்டிக் கொள்வேன்..
இரவில் கனவில் கடவுள் வந்து
உன் சுமையை எடுத்து
எனக்கு மாற்றிப் போக வேண்டுமென்று..
இன்று வரைக்கும்
கனவு மட்டும் தான் வருகிறது..
கடவுளைக் காணோம்..!! நீ சில மணி நேரம்
ரத்தத்தில் மிதந்து
உன் உயிரைக் கொடுத்து
இன்னொரு உயிரைப் பெற்றெடுப்பாய்..
அறை வெளியே காத்திருக்கும்
நான் இழப்பதெல்லாம்
கை விரலின் சில நகங்கள் மட்டுமே..
அதனால் தான் முடிவு செய்தேன்..
உன் பெயரின் முதலெழுத்து தான்
நம் குழந்தைக்குத் தலைப்பெழுத்து..!!
சின்னச் சின்ன வேலைகளுக்காவது
என்னை அடிக்கடி ஏவு..
சாய்ந்து கொள்ள என் தோள் வேண்டுமென்று
தைரியமாய் அடம்பிடி..
தினந்தோறும் வயிற்றில் காது வைத்துக் கேட்டு
நெற்றியில் முத்தமிட வேண்டுமென்று
உரிமையோடு கட்டளையிடு..
இதைப் போல இன்னும் நிறைய
என்னைச் செய்யச் சொல்லிக் கட்டாயப் படுத்து..!!
அணில்கள்
சின்னச் சின்னதாய்க்
கற்களை எடுத்துப் போட்டிருந்தாலும்
அவைகளும் பாலம் கட்டியதாய்
இன்றைக்கும் காப்பியத்தில் உண்டு..!
கடைசியாய் ஒன்று..
எனக்கு மகள் தான் வேண்டும்..
என்னுள் இருந்து வருவதைக் காட்டிலும்
உன்னுள் இருந்து வந்தால்
நம் மகள்
பரிபூரணமாய்
உன்னைப் போலவே இருப்பாள்..
அதனால் தான்
இந்த அநீதியை
நான் கொஞ்சம் பொறுத்துக் கொள்கிறேன்..!!
நன்றி - மீனாக்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

