03-24-2004, 10:23 PM
மறக்கத்தான் முடியுமோ சொல் மனமே
மனிதமனத்தின் வேதனைக்கு
மறதியொன்றே நல் ஒளடதம் என்பார்
மனதில் வலிப்பதை மறந்திடலாம்
மற்றோர் பிழைகளையும் மன்னித்து மறந்திடலாம்
மதியாதோர் முற்றம் வேண்டாமெனவும் மறந்திடலாம்
மமதையுணர்வு கொண்டோர் பேதமையையும் மறந்திடலாம்
மண்ணின் நேசத்தை மறக்கத்தான் முடியுமோ சொல்மனமே
அன்னை மொழி மறக்கின்ற அநியாயம் இங்கு வேண்டாம்
அடுத்த மொழி மோகம் எங்கள் கண்ணை மறைக்கலாமோ
அறிவாளி என்று நாம் அடிக்கடி பீற்றிக் கொண்டாலும்
அருமையான தாய்மொழி அறிவு இல்லாத அறிவீனம்
அவைதனில் எங்களை இனம்காட்டும் அழகு தமிழை
அன்பர்கள் நாம் மறக்கத்தான் முடியுமோ சொல்மனமே
நாம் நாமாக இருந்தால் நலமாக என்றும் இருப்போம்
நாடு மாறியதால் நம் கோலங்களும் மாறலாமோ
நாசமாகி விடலாமோ நாம் கட்டிக்காத்த கலாச்சாரங்கள்
நாவடக்கம் நம்மை விட்டு தொலைதூரம் போகலாமோ
நாளும் பொழுதும் கட்டிக்காத்த நம் கலாச்சாரங்களை
நாம் இந்த மண்ணில் மறக்கத்தான் முடியுமோ சொல்மனமே
நன்றி - ஏ.ஜே.ஞானேந்திரன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>