03-24-2004, 10:09 PM
Kanthar Wrote:BBC Wrote:[........ வெளில சொல்ல மற்றவை அதுக்கு ஒரு முத்திரை குத்த
வேண்டாம் மேனை இந்த விபரித விளையாட்டு.........
கருத்து எழுத இவ்வளவு பயப்படுறீங்களே?
முதல்ல நான் ஒரு கட்சிக்காரன் கிடையாது.அடுத்தது ஒரு கட்சியை ஆதரிப்பதும் இல்லை.
இருந்தாலும் எலக்சனில வோட் போட போவன்........
எனக்கு கொஞ்சமாவது பிடிச்சிருக்க வேணும். அவ்வளவுதான்.
இது வேறை: கருத்து சொல்லுறது வேறை...[/quote]
Eelavan Wrote:நீங்கள் சொன்னதில் எனக்கும் உடன்பாடு B.B.C வெறுமனே புலிகள் ஆதரவுக்கட்சி என்றில்லாமல் தமிழரசுக்கட்சி,ஈரோஸ்,டெலோ,EPRLF போன்ற அமைப்புகள் கூட்டுச் சேர்ந்ததைப் பாராட்டியாவது அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் அவர்களும் நாளை மாற மாட்டார்கள் என்றில்லை அது நேற்றைய வரலாறு சொல்லும்
ஆனாலும் வேறு ஒரு சிறந்த மாற்றுக் கிடையாது என்பதால் இதுதான் முடிவு
அது சரி கந்தர் வாக்குப் போடுவது போடாதது உங்கள் இஷ்டம் அது போன்று நீங்கள் ஆதரிக்கும் கட்சியின் பெயரை சொல்லி அதற்கு நான்கு பேர் நக்கல் சொல்லி கடைசியில் நீங்களே ஏன் இவர்களுக்கு வாக்குப் போட்டோம் என்று நினைப்பீர்கள்
ஆயினும் ஒரு கருத்துக் களம் என்ற முறையில் கட்சிப் பிரச்சாரமாக இல்லாவிட்டாலும் நீங்கள் எதற்காக அந்தக் கட்சிக்கு வாக்குப் போட்டுவீர்கள் என்று சொன்னால் மற்றவர்களும் சிந்திப்பார்கள் அல்லவா
நீங்கள் சொன்னதன் படி பார்த்தால் மத்தியிலும் மாநிலத்திலும் என்ற கருத்து ஒரு கட்சியால் தான் முன் வைக்கப்பட்டுள்ளது
நீங்கள் அவர்களுக்கா ஆதரவு?
பிபிசியும் ஈழவனும் நான் என்னத்தை சொல்லவாறன் எண்டதை ஓடி விளங்கிவினம் எண்டு நினைச்சதை பொய்யாக்கேல்லைதான்.......
எண்டாலும் நான் இன்னொரு விசயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக்க வேணும் எண்டு நினைக்கிறன்.
இப்ப நிக்கிற ஆக்களில அவை சரி எண்டதிற்காக நான் வோட் போடவில்லை...
எனக்கு அவையில ஆர் குறஞ்ச குற்றம் செய்யினம் எண்டதிலதான் என்ர முடிவு தங்கி இருக்கு.
இதில போய் ஈழவன் சொல்லுற மாதிரி மற்றை சிந்திக்க வைக்க உது சரியான விசயமும் இல்லை: சரியான இடமும் இல்லை: சரியான காலமும் இல்லை.

