Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழியாத கவிதை, கனவுகள், தாகம், ஏகலைவன்.
#17
[b]<span style='color:darkred'>அழியாத கவிதை
<img src='http://www.eelavarcinearts.com/a_kavithai_trailer.jpg' border='0' alt='user posted image'>


[size=15]
ஈழத்தில் மனைவியை இழந்த ஒரு முதியவர், லண்டனில் வாழும் தனது மகனோடு கழிக்க வேண்டுமென்ற கனவுகளோடு புலம் பெயர்ந்து வந்த பின், அவர் அனுபவிக்கும் வேதனைகள் மற்றும் மன உழைவுகளை சுற்றி அஜீவன் இயக்கத்தில் நெறிப்படுத்தப்பட்டு திரைக் கவிதையாகியுள்ள குறும்படமே அழியாத கவிதை.

ஆரம்பமே ஒரு ஆங்கிலத் திரைப்படத்தைப் போன்ற வண்ணக் கலவையுடன் அகன்ற திரைப் பிம்பத்தினூடக ஒரு கார் வந்து நிற்கிறது.

அதிலிருந்து இறங்கும் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன் காரிலிருந்து இறங்கி , சுற்றும் முற்றும் பார்த்து விட்டு காரின் டிக்கியை திறக்கிறார். \"ஐயோ பாவம்\" என்று சொல்லும்படியாக ஒரு முதியவர் இதுவரை காருக்குள் அடைபட்டு வந்திருக்கிறாரே என்ற வேதனை மனதை வருடுகிறது. டிக்கியை விட்டு வெளியே வரும் முதியவர் காருக்குள் ஏற்றப்படுகிறார்.

காரில் உள்ள இளைஞர் \"இனி பயமில்லை ஐயா லண்டனுக்குள் வந்து விட்டோம்\" என்று சொல்கிறார்.

பெரியவர் தான் யாழ்பாணத்தில் இருந்து, வன்னி-கொழும்பு-இந்தியா-சிங்கப்புூர் -ஜெர்மனி- பிரான்ஸ் என தான் கடந்து வந்த பாதைகளையும், இன்னல்களையும் புலம்பும் போது எமது பெரியவர்களின் இடைவிடா புலம்பல்களே நினைவுக்கு வருகிறது.

அவரது புலம்பல் தாங்க முடியாமல் வாகனத்தை ஓட்டும் இளைஞன், திரும்பி பெரியவரை முறைக்கும் பார்வையை எவராலும் மறக்க முடியாது. குறும்படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் அந்த மௌனத்தோடு கூடிய முறைப்பு கோடி வார்த்தைகளுக்கு சமமானது. எங்கே மௌனம் தேவை எங்கே பேச வேண்டுமென்பதை இக்குறும்படத்தில் பல இடங்களில் அழகாக செதுக்கியிருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று.

முதியவர் தன்னை ஒரு ஏஜன்ஸிகாரன் ஏமாற்றி விட்டதாக கூறும் போது காரிலுள்ள ஏஜன்ஸிகாரர்கள் முகத்தில் தெரிவது பிணத்தின் சாயலே. பெரியவர் பேச்சினூடே சுற்றும் முற்றும் பார்த்து அந்நிகழ்வைக் கூறுவதிலிருந்து பெரியவருக்கு இவர்கள் மேல் கூட நம்பிக்கை இல்லை என்பதைப் போலவும் தாம் எதற்கும் அஞ்சாதவர் போலவும் காட்டிக் கொள்கிறார்.ஆனாலும் உண்மை அதுவல்ல என்பதை அவரது முகமே காட்டுகிறது.

லண்டனில் இருக்கும் மகனது வீட்டுக்கு ஆவலோடு வரும் தந்தையை மகன் வரவேற்றாலும், மருமகள், வீட்டுக்கு வந்த மாமனாரை வரவேற்கும் விதமும் - \"வேலைக்கு நேரமாகி விட்டது. வந்து கதைக்கிறன் - சாப்பாட்டைக் காட்டிப் போட்டு தாமதிக்காமல் வேலைக்கு போங்கோ\" என்று கணவரை அன்புடன் அதட்டும் பாங்கும் வீட்டில் மனைவி ராஜ்யம் என்பதையும் விபரிக்காமலே விளக்குகிறது. அந்த வார்த்தை பெரியவரைச் சுடும் போதும் சரி, அவர் தன் மகனை அப்பாவியாகப் பார்க்கும் போது சரி, பெரியவருக்காக எமது இதயம் கூட, வலிக்கவே செய்கிறது.

அகதி விண்ணப்பத்துக்காக கையெழுத்திட சட்டத்தரணியிடம் சென்றவருக்கு, சட்டத்தரணி சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்தாலும், பெரியவரது மன உழைவையும் தனிமையையும் போக்கிக் கொள்ள வீதிகளிலும் ,புூங்காக்களிலும், அலைந்து திரியும் போது எமது மனதும் தடுமாறவே செய்கிறது.

அவர் கண்களில் காணும் காட்சிகளாக கமரா படம்பிடித்துள்ள காட்சிகளாக தெரியும், ஒரு நாயின் மேல் ஒரு ஐரோப்பியன் காட்டும் பரிவு , நாம் நாயைவிடக் கேவலமான ஒரு ஜீவனா? என்றும், சுதந்திரமாக நடந்து திரியும் குழந்தைகளைக் காட்டும் போது , இப்படியான ஒரு சிங்கார காட்சி தாயகத்தில் எப்போது உருவாகும் என்பதுமான கேள்விகளை எம்முள் எழுப்புகிறது.

புூங்காவில் பறவைகளுக்கு தான் உண்ணும் உணவைக் கொடுத்து, சிந்தனை வசப்பட்டிருக்கும் பெரியவரைக் காணும் போது, தாயகத்தில் இருந்து வருவோரிடம் புலம் பெயர்ந்த பல இதங்களில் இல்லாத ஈரமும், மனித நேயமும், அந்த அரக்கத் தனமான யுத்தக் கொடுமைக்குள்ளும் மறையவில்லை என்பது தெரிகிறது.

இடையிடையே ஐரோப்பிய நாடுகளில் நாம் காணும் காதலர்களையும், அவர்களது சிலுமிசங்களையும், கொச்சைத்தனமின்றி மென்மையாக திரைக்குள் கண் சிமிட்டிச் செல்ல வைத்திருப்து தவறாகத் தெரியவில்லை.

தவிரவும், நம்மவர்களே கண்டு கொள்ளாத நேரத்தில் கூட வேற்று இனத்தவர்கள் நம்மை விரும்புவது புலம் பெயர்ந்தோருக்குத் தெரிந்த விடயமே. இங்கும் கறுப்பு இன இரு இளைஞர்கள் பெரியவரை \"பப்பா\" என்று குசலம் விசாரித்து விட்டு \"ஏதாவது பிரச்சனையா?............. இலங்கையரா?........... ஓ!..........அவர்கள் மிக நல்லவர்கள்.........\" என்று கறுப்பர்களே கூறும் போது லாவகமாக அப்பாராட்டு எம்மையும் தழுவுகிறது.

தனக்கு ஒரு நிழல் கிடைக்குமென்ற கனவுகளோடு வந்த பெரியவர், மகனது இயலாமை மற்றும் மருமகளது வாத-விவாதங்கள் இடையே, தத்தளிக்கும் போதும் சரி, வானோலியின் ஒலியை அதிகரித்து வைத்ததனால் வெள்ளையனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் போதும் சரி, தனது வேதனையை இறந்து போன தனது மனவியின் புகைப்படத்தைப் பார்த்து விம்மும் போதும் சரி, பேத்தியின் மடலை வாசித்து பிரம்மை பிடித்தவராய் அலையும் போதும் சரி, பெரியவர் அலட்டல் அடங்கிய மௌனத்தில் எம்மை நெருட வைத்திருக்கிறார்.

மகன்-மருமகள்-பெரியவர் சார்ந்த ஒரு சில பகுதிகள் சேர்க்கப் பட்டிருந்தால் அழியாத கவிதை இன்னும் சிறப்புப் பெற்றிருக்கும்.அதுவே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி கதையின் தாக்கத்தை குறைத்திருக்கிறது.

மிகையான நடிப்புகளோடும் தொழில் நுட்பக் குறைகளோடும் வெளிவரும் ஈழத் தமிழரின் எத்தனையோ படைப்புகள் மத்தியில் அஜீவனின் படைப்புகள் வித்தியாசமானவையாகவும் தொழில் நுட்ப நிறைவோடும் வருவது ஆறுதல் தரும் விடயம்.

அழியாத கவிதையில் கதைக்குத் தேவையான நடிகர்களும் ஒளிப்பதிவும், இசையும், தொகுப்பும் மாத்திரமல்ல, தொழில் நுட்ப பகுதிகள் கூட சிறப்பாக இருப்பதால் ரசிகனின் கவனத்தை படத்திலே வைக்கும் உத்தி இயக்குனருக்கு கை வந்த கலையாகி இருக்கிறது.

அழிவைத் தேடிய இலங்கை தமிழ் சினிமா புலத்தில் வளர வேண்டிய தருணத்தை நோக்கி முளை விட்டிருக்கும் இக் கால கட்டத்தில் அழியாத கவிதையின் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டுவது எமது கடமையும், பொறுப்புமாகும். </span>

- முரளி
______________________________________________________________________________________________________________________________
[size=14]விமர்சனத்தை அனுப்பிய முரளிக்கு நன்றிகள்.
AJeevan


Messages In This Thread
[No subject] - by mohamed - 02-10-2004, 04:53 PM
[No subject] - by AJeevan - 02-10-2004, 08:54 PM
[No subject] - by AJeevan - 02-10-2004, 09:00 PM
[No subject] - by vasisutha - 02-26-2004, 08:38 PM
[No subject] - by AJeevan - 02-28-2004, 05:02 PM
[No subject] - by Manithaasan - 03-11-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 03-19-2004, 08:44 AM
[No subject] - by AJeevan - 03-19-2004, 11:02 AM
[No subject] - by Shan - 03-19-2004, 04:16 PM
[No subject] - by Manithaasan - 03-19-2004, 05:23 PM
[No subject] - by Manithaasan - 03-19-2004, 05:31 PM
[No subject] - by AJeevan - 03-20-2004, 12:07 AM
[No subject] - by AJeevan - 03-21-2004, 03:17 PM
[No subject] - by Manithaasan - 03-21-2004, 04:59 PM
[No subject] - by AJeevan - 03-23-2004, 05:21 PM
[No subject] - by AJeevan - 03-24-2004, 09:53 PM
[No subject] - by கண்ணன் - 03-25-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:25 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 06:25 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 06:28 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 06:45 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 06:50 PM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 07:29 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 08:18 PM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 09:24 PM
[No subject] - by Aalavanthan - 03-25-2004, 09:56 PM
[No subject] - by sOliyAn - 03-26-2004, 12:42 AM
[No subject] - by AJeevan - 03-26-2004, 09:32 AM
[No subject] - by கண்ணன் - 03-26-2004, 11:31 AM
[No subject] - by Eelavan - 03-26-2004, 12:30 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 01:00 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 01:09 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 01:14 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 02:39 AM
[No subject] - by AJeevan - 03-27-2004, 06:22 PM
[No subject] - by AJeevan - 03-28-2004, 12:16 AM
[No subject] - by sOliyAn - 03-28-2004, 12:50 AM
[No subject] - by Eelavan - 03-28-2004, 02:55 AM
[No subject] - by AJeevan - 03-28-2004, 07:05 AM
[No subject] - by AJeevan - 04-18-2004, 09:35 PM
[No subject] - by AJeevan - 04-18-2004, 09:47 PM
[No subject] - by Shan - 04-22-2004, 01:38 PM
[No subject] - by Ilango - 04-22-2004, 04:56 PM
[No subject] - by Shan - 04-23-2004, 08:47 AM
[No subject] - by Shan - 04-23-2004, 08:50 AM
[No subject] - by kuruvikal - 04-23-2004, 10:06 AM
[No subject] - by Shan - 04-23-2004, 10:52 AM
[No subject] - by Ilango - 04-23-2004, 10:39 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)