03-24-2004, 11:41 AM
சுய விமர்சனங்கள் ஒருவரை புடம் போடும் என்பது உண்மைதான் ஆனால் அதனை எமக்குச் சொல்ல வேண்டிய காரணம் என்ன ஆக கவிஞர் எமக்கு ஒன்றை சொல்லவருகிறார் உடனேயே நீ எப்படி இப்படிச் சொல்லலாம் என்றால் யதார்த்தத்தின் சூடு தாங்காமல் உடனேயே திருப்பிக் கேட்போம் ஏன் நீ மட்டும் திறமா என்று
அந்தக் கேள்வி எழாது கவனமாகக் கையாளுவதற்கான உத்திதான் தன்னைப் பற்றிய சுயவிமர்சனமும் மற்றவர்கள் தன்னைப் பற்றிச் சொல்வதாக தானே சொல்வது
இதன் மூலம் கவிஞர் தன்னை இரத்தமும் சதையுமான ஒரு அயல்வீட்டுக்காரனாகவோ அல்லது எதிரில் போகும் ஒருவனாகவோ வாசிப்பவனுக்கு உருவகிக்கப் படுகின்றார் அதன் மூலம் அவர் சொல்ல வந்த விடயம் அழகாகச் சொல்லி முடிக்கப் படுகின்றது

\" \"