03-24-2004, 11:01 AM
[size=14] இது சுவிஸ் ரவியின் "வாழ்வின் மீதான எளிய பாடல்கள்" என்ற அறிமுக குறிப்பில் இருந்து எடுத்த்து. அதில் அரசியல் பற்றிய விவாத்துக்குரிய பகுதி இருந்ததால் இங்கே போடுகின்றேன். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
இதில் இருந்து ஒரு முக்கியமான கேள்வி >>> நமது அள்வுகோல்களை வசதிக்கு ஏற்றவாறு மாற்றுகின்றோமா?
தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சம் கொண்டு நியாயம் தேடிய காலகட்டத்தில் காத்தான்குடிப் பள்ளிவாசலினுள் தொழுகையில் இருந்த நு£ற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் தமிழப் போராளிகளாலே இரத்தவெள்ளத்தில் அமிழ்த்தப்பட்டார்கள். இராணுவத்தின் கோவில்கள் மீதான குண்டுவீச்சுகளுக்கும் மடுமாதாமீதான தாக்குதலுக்கும் புனித ஸ்தலங்கள் என்ற அளவுகோலில் நின்று இன்றுவரை குரல்கொடுக்கும் பல மனிதாபிமானிகளுக்கு இந்த காத்தான்குடிப் பள்ளிவாசல் இரத்தச் செய்திக்கு வேறு அளவுகோல்கள் தேவைப்பட்டதோ என்னவோ அடக்கியே வாசித்தார்கள், வாசிக்கிறார்கள். தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்ட யாழ் முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து தமிழ்ப் போராளிகளால் வெளியேற்றப்பட்டார்கள். அதுவும் 24 மணி நேரத்திற்குள் நடாத்திமுடிக்கப்பட்டது. இருளை மூளைக்குள் திணித்தபடி அகதியாய்ப் போயினர் அவர்களும். இப்படியே அவர்களை தமிழ்ப் போ¤னவாதமும் ஒடுக்கியது. அடக்குமுறைக்கு எதிராக போராடும் இனம் தன்னுடன் வாழும் இன்னொரு இனத்தை அடக்கியாள்வதை சகித்துக் கொள்கிற நிலை. அதனால்தானோ என்னவோ சகோதர மனிதனே என்று விழித்தபடி வருகிறான் கவிஞன்.
இந்தக் கவிஞன் அகதியாய்ப் போகிறான்.
<b>இந்தத் தேசத்தை விட்டும்
இங்கேயிருக்கும் தாவரங்களையும்
பூக்களையும்
புல்பூண்டுகளை விட்டும்
மிருகங்களையும்
எனக்கு அநியாயம் செய்தவர்களை விட்டும்
நான் போகிறேன்
எனது இதயத்திற்கும்
உங்கள் இதயத்திற்கும்
து£ரமென்று விலக்கிவிட்டீர்களே
அதனால் போகிறேன்.
...
நான் பிடித்த தும்பிகளே
வண்ணத்துப் பூச்சிகளே
இந்தக் காற்றில் கலந்திருக்கும்
நல்லவர்களின் சுவாசத்தின் வாசனைகளே
நான் போகிறேன்</b>
என்றபடி இந்த அநியாயங்களுக்காக கண்ணீர்வடித்த மனிதர்களிடமும் விடைபெற்றுப் போகிறான். அதே கவிதையில்,
<b>இடிவிழுந்து புயல் அடித்து
து£ள்து£ளாய்ச் சிதறி இந்தத் தேசம்
மண்போல் போகட்டுமென்று
என்னால் சாபமிட முடியாது
எனது நாகா¦கம் வேறு
நான் போகிறேன்</b>
என மனிதமாகிறான் கவிஞன். போராட்டத்தின் காயங்களைப் பற்றிப் பேசுவதே போராட்டத்துக்கு எதிரானவன் என்ற ஒற்றையிலக்கணத்தில் புதையுண்டோர் பலர். இதற்குள் நின்று இந்தக் கவிஞனின் உணர்வை வகைப்படுத்துவது ஒன்றும் போராட்டத்துக்குச் செய்யும் தொண்டல்ல. மாறாக தவறுகளுக்கு துணைபோனவர்களாகவே வரலாறு காண்பிக்கும்.
<b>தலையைக் கொத்தி மூளை குடி
வறுத்துண்ணு
விரும்பின் எலும்புகளையெல்லாம்
சேர்த்து சூப்புக் காய்ச்சலாம்
...
மொத்தத்தலிது ஈழமில்லை
சா¤காணின் பிணங்கள் கண்டதும்
காகங்கள் பூக்கும் தென்னை.</b>
பாறையைப் பிராண்டும் அலைகளின் வடிவாய், அடக்கப்படுதலின் தடுப்புச் சுவர்களை இந்தக் கவிதை வா¤களும் பிராண்டுகின்றன. போராட்டத்தின் நியாயங்களை எந்தக் கவிதையும் சீண்டவில்லை. உச்சமாக அவன் எமது தேசத்தை ஆக்கிரமித்தவர்களை நோக்கி வருகிறான் இந்தக் கவிதையில்...
<b>இன்று எனது பிறந்தவீடும்
தாய்நிலமும்
உன்னிடம் உனது படையிடம்
பறிபோயிருக்கலாம்
இன்னும் கடல் தள்ளும் அலையினு£டே
றப்பர் டையர்களினு£டே
நீளமான வாவிகளினு£டே
பதுங்குகுழியினு£டே
போராட்டம் குறித்த காயங்களோடும்
கனவுகளோடும்
எனதையும் நீ ஒதுக்கிவிடலாம்
உண்மையிலேயே யாரையும் யாரும்
காப்பாற்ற முடியாதும் போகலாம்
ஆனால் இவைகளுக்கப்பாலும்
இரவின் துவாரம் கிழிந்து
இன்னொரு இரத்தக் கட்டியை உதிர்த்தும்
அது உன்னையும் உனது படையையும்
எனது மண்ணிலிருந்து விரட்டியடிக்கும்.</b>
என முடிக்கிறான் கவிஞன்.
இப்படியே மனிதத்தை நேசிப்பவனாகவும் கொடுமைகளின்மீது தாக்குதல் தொடுப்பவனாகவும் போராட்டத்தின்மீது நம்பிக்கை கொண்டவனாகவும் சிலபொழுதுகளில் நம்பிக்கைகள் தளர்ந்த மனிதனாகவும் பா¤தாபத்துக்கு உ£¤யவனாகவும்கூட முரண்பாடுகள் கொண்ட உணர்வுநிலைகளில் உலவுகிறான். எழுத்துக்களில் தனது அகவிருப்பு வெறுப்புகளை சாதிப்பவனாக அன்றி எலும்பும் சதையும் கொண்ட மனிதனாய் நின்று பேசுகிறான். இதனால் அவனது கவிதைகளால் நாம் காவப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறோம். ஒற்றைச் சிறகு முளைத்தவர்கள் பறக்கமுடியாது, கவிதையின் வெளியை எட்டமுடியாது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>