03-24-2004, 09:49 AM
விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து ....
<b>காலமறியாக் கூத்து </b>
ஞாலம் முழுவதும்
நாங்கள் சுடர்விட
யாகம் செய்தவர்
பூமியில் விசச்செடி
தேவனின் ஒளிதரு
தேசியத் தலைவனின்
தேடலின் விளக்கொன்று
விரகத் தீயில்
விட்டிலாய் விழுந்திற்று
விடுதலை வேள்வியின்
பெருநெருப்பு உறங்குவதாய்
உனக்கு நீயே
சமாதானம் செய்ததே
உன் காலத்தின் தவறு
தமிழனின் தேசியம்
பேசியதனால் தான்
நீ மிளிர்ந்தாய்
என்பதை மறந்து போனது
மாபெரும் தவறு
அகிலமும் உனை
அகமகிழ்ந்து வரவேற்றதும்
ஆரவாரித்து அரவணைத்ததும்
நீ தேசியத் தலைவனின்
தளபதி என்பதால் தான்!
பேச்சுவார்த்தையின் போது
உனை வட்டமிட்ட
கமிராக்களின் ஒளியும்
உன் வாய் வரை நீண்ட
ஓலிவாங்கியும் போலி கருணா!
புரியமால் போயிற்றா...?
இல்லை உனக்கொரு கதிரை
தேவை போல் இருந்ததா?
நீண்டு நெட்டுயர்
விடுதலை யாகத்தில்
நீ மேனகையாயிற்றாய்!
சமாதானப் போக்கில்
இவை சகஜமேயெனினும்,
புறம்போக்குத் தமிழர் போல்
நீயுமா ~ஒலிவாங்கிக்
காய்ச்சலில்| சுருண்டாய் கருணா?
உன் தவறுகள் கண்டதும்
நிறையவே குறைகளைச் சொல்கிறாய்!
அப்படிச் சொல்வதைக்கூட - நீ
யாரிடம் சொல்கிறாய்?
போனதுன் வீரம்! மாண்டதுன் விவேகம்!!
கிழக்கின் தேவைகள்
இருந்ததாய் அறிந்தால்
அதை நிவர்த்தி செய்திட
உனக்கு முடியும்...!
அதற்கான பாதையும் தெரியும்...!
அதனை விடுத்து,
குற்றப்பட்டியல் உனைச் சுட்டியதும்
பிரதேசவாதம் எதற்குத் தேவை?
அசோசியேட் பிரசும், சன் ரீவியும்
எப்படி உன் அடுக்களைக்கு வந்தன?
உயிர்ப்பிச்சை கேட்டு - து}து வந்ததாய்
சந்திரிகா சொல்கிறார்...! சரனாகதியா?
சண்டைக்களத்தில் சாதித்தவைகள்
உந்தன் திறமையென்று நீ கூறுவதை
இனி நாங்கள் எப்படி நம்புவது?
தொடைநடுங்கியாய் மாறிய - உனக்கு
பிரித்து ஓதி, மந்திரித்து நு}ல்கட்ட
பிட்சுக்கள் கூட்டத்தைப் பலேகல்ல
தொப்பிக்கலைக்கு அனுப்புவதாய்
செய்தி வரலாம்... யார் கண்டது?
எனவே போனது போவென
புதிதாய் புறப்படும் புலியின் சரிதம்
உனது சதியை உலகிற்கு அறிவிக்கும்
விசச்செடி களைந்து கிழக்கில் வீரம் விளைவிக்கும்.
ஆம்! மேதினி போற்றும் கிழக்கின்
விடியல் தானாய் நடக்கும்... ஏனெனில் இது
காலமாறியாக் கயவர்கள் கூத்தேயன்றி
இதுவொரு புரட்சியல்ல.!
- சுதர்மா, கனடா
<b>காலமறியாக் கூத்து </b>
ஞாலம் முழுவதும்
நாங்கள் சுடர்விட
யாகம் செய்தவர்
பூமியில் விசச்செடி
தேவனின் ஒளிதரு
தேசியத் தலைவனின்
தேடலின் விளக்கொன்று
விரகத் தீயில்
விட்டிலாய் விழுந்திற்று
விடுதலை வேள்வியின்
பெருநெருப்பு உறங்குவதாய்
உனக்கு நீயே
சமாதானம் செய்ததே
உன் காலத்தின் தவறு
தமிழனின் தேசியம்
பேசியதனால் தான்
நீ மிளிர்ந்தாய்
என்பதை மறந்து போனது
மாபெரும் தவறு
அகிலமும் உனை
அகமகிழ்ந்து வரவேற்றதும்
ஆரவாரித்து அரவணைத்ததும்
நீ தேசியத் தலைவனின்
தளபதி என்பதால் தான்!
பேச்சுவார்த்தையின் போது
உனை வட்டமிட்ட
கமிராக்களின் ஒளியும்
உன் வாய் வரை நீண்ட
ஓலிவாங்கியும் போலி கருணா!
புரியமால் போயிற்றா...?
இல்லை உனக்கொரு கதிரை
தேவை போல் இருந்ததா?
நீண்டு நெட்டுயர்
விடுதலை யாகத்தில்
நீ மேனகையாயிற்றாய்!
சமாதானப் போக்கில்
இவை சகஜமேயெனினும்,
புறம்போக்குத் தமிழர் போல்
நீயுமா ~ஒலிவாங்கிக்
காய்ச்சலில்| சுருண்டாய் கருணா?
உன் தவறுகள் கண்டதும்
நிறையவே குறைகளைச் சொல்கிறாய்!
அப்படிச் சொல்வதைக்கூட - நீ
யாரிடம் சொல்கிறாய்?
போனதுன் வீரம்! மாண்டதுன் விவேகம்!!
கிழக்கின் தேவைகள்
இருந்ததாய் அறிந்தால்
அதை நிவர்த்தி செய்திட
உனக்கு முடியும்...!
அதற்கான பாதையும் தெரியும்...!
அதனை விடுத்து,
குற்றப்பட்டியல் உனைச் சுட்டியதும்
பிரதேசவாதம் எதற்குத் தேவை?
அசோசியேட் பிரசும், சன் ரீவியும்
எப்படி உன் அடுக்களைக்கு வந்தன?
உயிர்ப்பிச்சை கேட்டு - து}து வந்ததாய்
சந்திரிகா சொல்கிறார்...! சரனாகதியா?
சண்டைக்களத்தில் சாதித்தவைகள்
உந்தன் திறமையென்று நீ கூறுவதை
இனி நாங்கள் எப்படி நம்புவது?
தொடைநடுங்கியாய் மாறிய - உனக்கு
பிரித்து ஓதி, மந்திரித்து நு}ல்கட்ட
பிட்சுக்கள் கூட்டத்தைப் பலேகல்ல
தொப்பிக்கலைக்கு அனுப்புவதாய்
செய்தி வரலாம்... யார் கண்டது?
எனவே போனது போவென
புதிதாய் புறப்படும் புலியின் சரிதம்
உனது சதியை உலகிற்கு அறிவிக்கும்
விசச்செடி களைந்து கிழக்கில் வீரம் விளைவிக்கும்.
ஆம்! மேதினி போற்றும் கிழக்கின்
விடியல் தானாய் நடக்கும்... ஏனெனில் இது
காலமாறியாக் கயவர்கள் கூத்தேயன்றி
இதுவொரு புரட்சியல்ல.!
- சுதர்மா, கனடா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

