03-24-2004, 05:35 AM
BBC Wrote:vallai Wrote:திரும்பவும் வேதாளங்கள் முருக்க மரத்திலை ஏறாட்டி சரிதான்
உந்தத் தங்கிலீசு ரேடியோ தம்பி எல்லாரையும் விடுத்து விடுத்து ஆருக்கு வோட்டுப் போடுவியள் ஆருக்கு வோட்டுப் போடுவியள் எண்டு கதை புடுங்கிறியள்
நீங்கள் ஆருக்குப் போடுவியள்
மனோ கணேசனுக்கோ டக்ளசுக்கோ ஆனைக்கோ இலைக்கோ
எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே புள்ளடியாய் போடுவன் எண்டு சொல்லதீங்கோ
போன முறைக்கு முந்தின முறை நானும் அப்பிடித் தான் போட்டனான்
எனக்கு வடக்கு-கிழக்கிலை வோட்டு உரிமை இருந்தால் என்னுடைய வோட்டு தமிழர் கூட்டமைப்புக்கு தான் அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
எனக்கு தெரிந்து மூன்று வேட்பாளர்களை நான் வடக்கு - கிழக்கு களத்தில் பார்க்கின்றேன்.
1) தமிழர் கூட்டமைப்பு
2) ஈ.பி.டி.பி
3) சங்கரியோட சுயேச்சை அணி
இதில் ஈ.பி.டி.பி அணியை நான் ஏன் ஆதரிக்கவில்லை என்று சொல்கிறது நிறைய காரணங்கள் இருக்கின்றது. நிறைய ஜனநாயகம் பற்றி பேசும் இவர்கள் அரசியல் லாபத்துக்காக தீவிர இனவாத கட்சியான ஜே,வி.பி உடன் கூட்டு இது ஒன்றே அவர்களுடை உண்மையான முகத்தை அடையாளம் காண போதும். ஆகவே இந்த கட்சிக்கு எனது ஓட்டு இல்லை.
அடுத்தது சங்கரியோட அணி. இதில் சங்கரி கட்சி பிரைச்சனைகள் கையாண்ட விதம், உதய சூரியனை நீதிமன்றதில் முடக்கியவிதம் அதற்கு அவர் கூறிய காரணங்கள் என்பது அவர் மீது நம்பிக்கையை இழக்க செய்கின்றது. இதே சஙகரி போனமுறை புலிகளுக்கு கொடி பிடித்தவர்தான். இப்பொது இவர் கூறும் காரணங்கள் அப்போது தெரியாதா? சந்தர்பவாத அரசியலை மேற்கொள்வதால் இவருக்கும் எனது ஓட்டு இல்லை.
இவை இரண்டும் போனால் எனக்கு மிஞ்சி இருப்பது தமிழர் கூட்டமைப்பு தான். இதில் உள்ள கூட்டணி தலைவர்கள் கூட எதிர்காலத்தில் சங்கரி போல மாறக்கூடும். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான். ஆனால் எனது ஜனநாயக வோட்டை எனக்கு வீணடிக்க விருப்பமில்லை. உள்ள அரசியல் திருடர்களில் இவர்கள் ஓரளவு பரவாயில்லாத திருடர்கள் என்ற முறையில் எனது ஓட்டு இவர்களுக்குதான். வேறு யாராவது நல்ல வேட்பாளர்கள் களத்தில் இருந்திருந்தால் நான் இவர்களுக்கு போட்டிருக்கமாட்டேன். சில புது மக்கள் முகங்களையும் நிறுத்தியிருக்கின்றார்கள் நல்ல முயற்சி. நிறைய பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த முறை வாக்கு தமிழர் கூட்டமைப்புக்காகதானே அன்றி வேட்பாளர்களின் முகங்களுக்காக அல்ல, அதனால் நிறைய சமூக சேவகர்களையும் நிறைய பெண் வேட்பாளர்களையும் தேர்தலில் நிறுத்தி இருக்கலாம். ஆனால் சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டார்கள்.
அது வடக்கு கிழக்கிலையெல்லோ கொழும்பிலைதானே உங்களுக்கு வோட்டு அங்கை ஆருக்குப் போடுவியள்
எங்கடை சூப்பிக்கு போடுவியளோ?

