03-23-2004, 07:35 PM
kuruvikal Wrote:இங்கு குருவிகள் எழுதிய தனிப்பட்ட விமர்சனம் என்று தாங்கள் கண்டதை இங்கு தருவீர்களா.....????! :oops:
அனால் களவிதியின் பிரகாரம் களத்தில் அநாகரிக வார்த்தைகள் எது குறித்தும் பயன்படுத்தக் கூடாது....ஆனால் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது அது உங்கள் கண்ணிற்குத் தெரியவில்லையோ...என்ன சேலைத்தலைப்பாலா மறைக்கப்பட்டுள்ளது உங்கள் கண்கள்....!
அது ஏன் ஒவ்வொரு தடவையும் குருவிகள் மீதுதான் உங்கள் பார்வைகள் செலுத்தப்படுகிறது...இங்கு வெறிபோட்டுவிட்டு மதியிழந்தவர்கள் பேசும் வார்த்தைகள்... நாம் சில கருத்துக்களை எழுத முன்னரே வந்தாயிற்று...! அவை உங்கள் கண்ணில் படவில்லையா அல்லது அதுதான் நீங்கள் ஆராதிக்கும் சொற்களோ....நீங்கள் என்ன குத்தகை எழுத்தாளரா மற்றவர்களுக்கு....தயவு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் கருத்தால் நடுநிலை இல்லாத எவரினதும் கருத்துக்கும் நாம் செவிசாய்க்க முடியாது...!
களவிதியின் கீழ் எங்கள் கருத்துக்கள் தொடரும்....!
:evil: :evil: :evil:
மற்றவர்கள் உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக எழுதியிருந்தீர்கள். உங்களுடைய அண்மைய சில கருத்துக்களை படித்தபோது நீங்களும் அதே தவறை செய்வதாக எனக்கு பட்டது. அதனால் தான் நான் எழுதினேன். உங்களை விமர்சிக்கும் எண்ணம் எனக்கில்லை. எனது கருத்து தவறாக இருந்தால் மன்னியுங்கள். அது ஒரு சக களமாடியின் கருத்து அவ்வளவு தான்.
மற்றும் நான் உங்கள் மேல் மட்டும் பார்வையை செலுத்தவில்லை. நீங்களும் இன்னொருவரும் இதே பெண்கள் விடயமாக மோதியபோது இருவருக்கும் சேர்த்துதான் அதில் மோதல் நிறுத்த சொல்லி எழுதியிருந்தேன். மோகன் அண்ணா உங்கள் இருவரது தனிப்பட்ட மோதல் கருத்துக்களையும் நீங்கும்போது நான் அதை பற்றி எழுதியதையும் நீக்கிவிட்டார். அது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகின்றேன்.
யாராக இருந்தாலும் தனிப்பட்ட தாக்குதலை நான் ஆதரிக்கவில்லை. எந்த ஒரு கருத்துக்கும் தனிப்பட்ட மோதல் இன்றி கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைப்பதே நல்லது என்பது எனது கருத்து.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


