03-23-2004, 05:57 PM
ஆய்த எழுத்து’க்காக ஐந்து பாடல்கள் ஒலிப்பதிவு செய்து முடித்தபிறகு, ‘‘என்ன சார் நினைக்கிறீர்கள், பாடல்கள் பற்றி...’’ என்றார் மணிரத்னம் என்னை.
‘‘முதல் முறை கேட்டால் இசை பிடிக்கும். இரண்டாம் முறை கேட்டால் தமிழ் பிடிக்கும். மூன்றாம் முறை கேட்டால் பைத்தியம் பிடிக்கும்’’ என்றேன் நான்.
நான் அன்று சொன்னது இன்று தப்பாகிவிட்டது.
முதல்முறை கேட்கும்போதே பைத்தியம் பிடிக்கத் தொடங்கிவிட்டது.
பைத்தியம் என்றால் இது ஆனந்தப் பைத்தியம்.
பாடல் கேட்டுத் தனக்குத்தானே பேசிக்கொண்டு தலையாட்டும் பரவசப் பைத்தியம்.
‘ஆய்த எழுத்து’ திரைத் தமிழுக்கு ஓர் ஆறுதல் எழுத்து.
தமிழில் மட்டுமில்லாமல், இந்தியாவின் எல்லா மொழிகளிலுமே திரைப்பாட்டு வரிகள் தங்கள் உயரத்தைச் சற்றே இழந்திருக்கின்றன. இது பாடலுக்கு மட்டும் நேர்ந்த துயரமன்று.
உலகமயமாதலும், மேற்கத்திய நுகர்வுக் கலாசாரத்தின் மோகமும், இந்தியாவின் தளர்ந்த ஜனநாயகமும் கால் பிடித்திழுத்துத் தலைகீழாய்ப் பிடித்துத் தரையில் துவைக்கும்பொழுது வெகுஜனக் கலைகள் கதறவே கதறுகின்றன. இந்த நிலையில், கலையின் எல்லாக் கூறுகளும் நிறம் மாறி சற்றொப்ப நிர்வாணப்படும்போது பாடல்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன. மணிரத்னம் போன்ற குறிப்பிட்ட சில கலைஞர்களே தங்கள் உயரங்களை இழந்துவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.ஸ் முதல் பாடலுக்கு உட்காரும்போதே மணிரத்னம் _ ரகுமான் _ நான் ஆகிய மூவரும் ஒரு முடிவுக்கு வந்தோம்.
ஏற்கெனவே இயங்கிவரும் தளங்களிலிருந்து பாடல்களை வெளியே எடுத்து வந்துவிடுவது.
ஆனால் அது எத்தனை சிரமம் என்பது செயல்படும்போது தெரிந்தது. ஒவ்வொரு முறையும் சந்திப்போம்; விவாதிப்போம்; சண்டையிடுவோம்; சீண்டுவோம்; செல்லமாகக் கோபித்துக்கொள்வோம்; சிரித்துவிடுவோம்.
எல்லாமே படைப்பு நன்றாக வரவேண்டுமே என்ற வெறிதான்.
ஒரு காதல் பாடலை பதிவு செய்தோம்.
‘‘கடலில் இரண்டு அலைகளாய்
நீயும் நானும் விளையாடினோம்
இதோ காலவெப்பத்தில்
ஆவியாகிறோம்
நீ ஒரு மேகமாய்
நான் ஒரு மேகமாய்
எங்கோ ஒரு மலையில் நீ மழையாக
எங்கோ ஒரு மலையில் நான் மழையாக
மீண்டும் நதிகளாவோம்
மீண்டும் கடல் சேர்வோம்
அலைகளாய்த் தழுவிக்
கொள்வோம்
அதுவரை பொறுத்திரு.’’
_ என்ற பொருளில் ஒரு பாடல் எழுதிப் பதிவும் செய்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து மீண்டும் பாடலைக் கேட்டபோது, அது நாங்கள் நினைத்த உயரத்தில் இல்லாததுமாதிரி இருந்தது. வேறு பாட்டு எடுப்பது என்று தீர்மானித்துவிட்டோம். ஒரு பொறியும் தட்டவில்லை. அப்போதுதான் குமுதத்தில் என் கவிதைத் தொடரான ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’ வந்து கொண்டிருந்தது. அதில் ‘ஆறாம் பூதம்’ என்ற என் கவிதையை வாசித்தபோது, ‘‘பாட்டு; இதுதான் பாட்டு’’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் மணிரத்னம். அந்தக் கவிதையை ஏ.ஆர்.ரகுமானிடம் கொடுத்து, ‘‘என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ... ஏற்கெனவே எடுத்த பாடலின் அதே ட்ராக்கில் இந்தக் கவிதையைப் பொருத்திக் கொடுங்கள் _ திருத்தங்கள் தேவைப்பட்டால் கவிஞரை அழைத்துக்கொள்ளலாம்’’ என்றாராம். ஆச்சரியமான ஆச்சரியம்! வேறு பாடலுக்காக எடுக்கப்பட்ட ட்ராக்கில் என் கவிதையைக் சம்மணங்களால் போட்டு சாமர்த்தியமாக உட்கார வைத்துவிட்டார் ஏ.ஆர். ரகுமான்.
யாக்கை திரி
காதல் சுடர்
ஜீவன் நதி
காதல் கடல்
பிறவி பிழை
காதல் திருத்தம்
இருதயம் கல்
காதல் சிற்பம்’’
வாக்கியங்களற்ற வார்த்தைகளால் கட்டப்பட்ட ஒரு கவிதை பாடலாகி விட்டது. குமுதத்திற்கு நன்றி.
ஓர் ஆணும் பெண்ணும் எதிர்பாராமல் சந்தித்து மனசின் ஓரங்களால் பழகி _ அதன் மையத்தை நோக்கி நகரும்போது பிரிகிறார்கள்.
அந்தப் பிரிவின் சிறுவலியை அவள் மனசுக்குள் ரகசியமாய் பாடுகிறாள்.
மனசின் மர்மஒலிபோல் ஏ.ஆர்.ரகுமான் அமைத்த அந்த மெட்டைக் கேட்டபோது, அதன் ரகசியம் கெடாமல் வார்த்தைகள் உள்தளத்திலும் அது சிதறியடிக்கும் ஓசைகள் வெளித்தளத்திலும் புலப்படுமாறு இதற்கு வார்த்தைகள் அமைக்கவேண்டும் என்று சிந்தித்தேன். கடைசியில் ஒரு பல்லவியை ஓ.கே. செய்தார் மணிரத்னம்.
பாடல் ஒலிப்பதிவாகிக்கொண்டிருக்கிறது; பாடும் சந்தங்கள் என் காதில் விழவிழ, நான் காத்துக்கிடந்த சொற்கள் உள்ளிருந்து சிறகடித்து வெளியேறி வந்தன. என்ன ஆச்சரியம்! அவை முழுக்கத் தமிழ்ச் சொற்கள் அல்ல; சமஸ்கிருதச் சொற்கள். ஆங்கிலமோ, சமஸ்கிருதமோ முடிந்த அளவுக்குத் தவிர்த்துத் தனித்தமிழ் செய்யவே ஆசைப்படுபவன் நான். ஆனால் அந்த மெட்டு சமஸ்கிருதம் வேண்டும் என்றே கேட்டு அணிந்துகொண்டது. ஒலிப்பதிவு நிறுத்தப்பட்டு அங்கேயே பல்லவி மாற்றப்படுகிறது.
‘‘ஹேய் குட்பை
நண்பா
கண்ணிலே கல்மிஷம்
போதுமே சில்மிஷம்
ஸ்பரிசமோ துளிவிஷம்
நானில்லை என் வசம்
நீ யாரோ நான் யாரோ
கண்தோன்றிக் கண்காணாக் கண்ணீரோ?’’
_இந்தக் கல்மிஷம், சில்மிஷம், துளிவிஷம் என்ற சொற்களை சுனிதாசாரதியின் பரவசக்குரல் ரகசியமாய்ப் பாடும்போது சொல்லுக்குப் பாத்தியப்படாத சொல்லின் அர்த்தங்கள் விசிறியடிக்கப்படுவதை உணர்வீர்கள்.
‘‘சமூகவிரோத சக்திகளை எதிர்த்துப் போருக்குப் புறப்படும் இளைஞர்கள் பாடும் படைநடைப் பாட்டுக்கு வரிகள் போடுங்கள்’’ என்று மணிரத்னம் என்னைக் கேட்டபோது, ‘‘கவிஞருக்கு இது லட்டு ஆயிற்றே’’ என்று சிரித்தார் ஏ.ஆர்.ரகுமான்.
நம்பிக்கை கொடுக்கும் பாடல்கள் _ துருப்பிடித்த வாழ்க்கையைத் துலக்கிவைக்கும் பாடல்கள், திசையற்றுப் பறக்கும் இளைஞர்களை நெறிப்படுத்தும் பாடல்கள், கனவுகளை வளர்ப்பதோடு காரியத்தில் செலுத்தும் பாடல்கள் நிறைய நிறைய வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்தத் தினவுக்குத் தீனிபோடும் பாடலாக உருவானது ஜனகண மன. ‘‘ஜனகண மன’’ என்று பாடலைத் தொடங்குவதற்கு நாங்கள் பலமுறை யோசித்தோம். தேசிய கீதத்தின் முதல் வரியை எடுத்தாளுவதில் சிக்கல் வருமா? யாராவது ஒருவர், தேசிய கீதத்துக்கு அவமரியாதை என்று நினைப்பார்களா? என்றெல்லாம் நாங்களே கேள்வி கேட்டுப் பதில் சொல்லிக் கொண்டோம்.
‘‘காட்டுக்குள் நுழைகின்ற காற்று
என்றும்
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்து
விட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை’’
_ என்ற வரியைப் படித்துவிட்டு, ‘‘‘ஆய்த எழுத்து’ என்று படத்திற்குப் பெயர் வைத்திருக்கிறோம். ஆயுதம் தேவையில்லை என்கிறீர்களே!’’ என்று சிரித்த மணிரத்னம், ‘‘ஆனாலும் அழகான இந்த வரியை மாற்ற எனக்கு மனமில்லை’’ என்று சொல்லி ஏ.ஆர். ரகுமானையே பாடுமாறு கேட்டுக்கொண்டார்.
‘‘ஃபர்ஸ்ட் நைட்டுக்குக் கவிஞர் ஒரு புது நைட் லாம்ப் கண்டுபிடித்திருக்கிறார்’’ என்று பலரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஏ.ஆர். ரகுமான். அது வேறொன்றுமில்லை.
‘‘மச்சு வீடு வேணாம் எட்டுக் கெட்டு போதும்
மெத்தை ஏதும் வேணாம்
ஒத்தப் பாயி போதும்
மூக்குத்தியின் பொன் கீத்து
ராத்திரிக்குப் போதும்
_ என்று எழுதியிருந்தேன்.
அந்த மூன்றாம் வரி புரியவில்லை ஏ.ஆர்.ரகுமானுக்கு. ‘‘எல்லா விளக்கும் அணைக்கப்பட்ட பிறகு மூக்குத்தியின் வெளிச்சம் தான் முதலிரவின் வெளிச்சம்’’ என்று விளக்கினேன். ‘அடேங்கப்பா!’ என்றவர், வியந்து வியந்து சிரித்தார்; ரசித்தார்.
வெளியில் பார்க்கத்தான் ஏ.ஆர்.ரகுமான் இறுக்கம். தனிமைச் சந்திப்புகளில் குழந்தையாகிவிடுவார்; குதூகலிப்பார்.
இன்னொரு காதல் பாடல்_
பொய் சொல்லிக் காதலிக்கும் உலகத்தில் ஒரு காதலன் மெய்சொல்லிக் காதலித்தால் எப்படியிருக்கும் என்ற கோணத்தில் சிந்தித்தோம்.
‘‘நெஞ்சம் எல்லாம் காதல்
தேகம் எல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் கம்மி
காமம் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
_ என்ற பல்லவி பிறந்தது.
இந்தப் பாடலைப் பாட வந்த அட்நான் சாமி, பாகிஸ்தான் பாடகர். மும்பையிலிருந்து சென்னை வந்து பாடினார்.
ஒலிப்பதிவின்போது நான் உடன் இல்லை. இதில் _
‘‘நீ முத்தப் பார்வை பார்க்கும்போது _ என்
முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும்’’
என்று ஒரு வரி வரும். பாடலைக் கேட்கும்போதுதான் தெரிந்தது, ‘‘முத்தப்பார்வைக்குப் பதிலாக அவர் மூத்த பார்வை’’ என்று பாடியிருந்தது, ஓர் எழுத்து மாறியதில் பாடலுக்கே வயசாகிவிட்டதே என்று வருந்தினேன். மீண்டும் அவரை அழைத்துச் சொல்லிக் கொடுத்துப் பக்கத்திலிருந்து பாடவைத்தோம்.
இந்தப் படத்துக்கான பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் லண்டனில் செய்துகொண்டிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு படம் வெளிவரப் போகிறது. இளைஞர்களின் விடுமுறை விருப்பமாக இந்தப் படம் இருக்கும்.
பாடல் காட்சிகளை மணிரத்னம் எனக்குப் போட்டுக் காட்டினார். அற்புதம்! மணிரத்னத்திற்கு வயது 18.
தொகுப்பு : சந்துரு

\" \"