03-23-2004, 02:12 AM
லண்டனின் லட்சணம்
சாராமாரியாக பறக்கின்றன
சத்தத்துடன் வாகனங்கள்
முற்று முழுதாய் தம்மை உடைகளினால்
மூடிய மனிதர்கள்
முழுதாய் விடிவைக் காணாமலே
மூச்சிறைக்க ஓடும்
"முதல் உலக" மாந்தர்கள்
தேடியும் கிடைக்கா சூரிய ஒளியை
தேடிப் பூங்காக்களில் தவமிருக்கும்
தேர்ந்த மக்கள்
அவசரமான வாழ்வை
அவசரமாய் வாழ்ந்து
அவசரமாய் முடித்து
அடங்கியே விடுவர்
பனிக்கட்டிகள் தலைமேல் விழுந்தும்
பக்கெட்டில் வாங்குவார் கட்டி ஜஸை
மழை பெய்தால் நகரெங்கும்
மடைதிறந்த வெள்ளம்
பனிப்பெய்தால் சாலையெங்கும்
பழுதடைந்து நிற்கும் வாகனங்கள்
காற்றடித்தால் தெருவெங்கும்
கட்டையாய் சரிந்திடும் மரங்கள்
இலையுதிர் காலமென்றால்
இயங்கமறுக்கும் புகையிரதம்
இல்லையா இங்கே இனிமையான உணர்வுகள் ?
இரவிரவாய் மதுவருந்தி , இல்லம்
இருந்து இரா நிலயில் அவர்க்கு ஓர் மகிழ்ச்சி
கோடைகாலத்திலே
கோலங்களைப் பார்க்கணுமே
உடலை மூடும் உடையெல்லாம்
உண்மையாக ஒரு முழமே
அதுவும் ஓர் மகிழ்ச்சி அவ்ர்களுக்கு
வெப்பம் கூடினால் ஓடிடுவார்
வெண்மணற் கடற்கரைக்கே
ஆசிய மக்கள் எமக்கெல்லாம்
அடிமனதில்
அடங்காத எண்ணமொன்று
நிறத்தாலே எமைப் பிரித்து
நிச்சயமாய்
நீங்காத வேற்றுமை அளித்திடுவார்
நினைவெல்லாம் இதுவேதான்
என்னவென்று சொல்லுவேன் ?
திறமை உண்டென்றால் தடையின்றி
திறக்கும் வழி எமக்கு இவ்வூரில்
கல்வி கற்பதற்கு உள்ள வழிமுறைகள்
கடைசிவரை கைகொடுக்கும்
உழைத்துவாழ இங்கு
உண்டாமே பலவழிகள்
உண்மை மனிதர் பலருண்டு
உள்ளம் ஒன்றே அவர் சொத்தென்று
நிறங்கள் பிரிவினை
நிறைந்ததிங்கென்றால்
நிறைவாய் வாழும் பல தமிழர்
நிறைவதன் மர்மமென்ன?
ஒன்று சொல்வேன் கேளீர் !
லண்டன் என்னும் நகர்
லட்சங்கள் பலவற்றை
லட்சியத்தோடு வாழும்
லட்சண மனிதருக்கு அளித்ததுண்டு
காலநிலை
கவலைதான்
நிறப்பிரிவும் நிஜம்தான்
ஆனாலும் தோழனே
தாயகத்திற்கடுத்து எமை
தாலாட்டி வளர்த்த
தரமான லண்டன்
தப்பாமல் லட்சணம்தான்.
நன்றி - சத்தி சக்திதாசன்
சாராமாரியாக பறக்கின்றன
சத்தத்துடன் வாகனங்கள்
முற்று முழுதாய் தம்மை உடைகளினால்
மூடிய மனிதர்கள்
முழுதாய் விடிவைக் காணாமலே
மூச்சிறைக்க ஓடும்
"முதல் உலக" மாந்தர்கள்
தேடியும் கிடைக்கா சூரிய ஒளியை
தேடிப் பூங்காக்களில் தவமிருக்கும்
தேர்ந்த மக்கள்
அவசரமான வாழ்வை
அவசரமாய் வாழ்ந்து
அவசரமாய் முடித்து
அடங்கியே விடுவர்
பனிக்கட்டிகள் தலைமேல் விழுந்தும்
பக்கெட்டில் வாங்குவார் கட்டி ஜஸை
மழை பெய்தால் நகரெங்கும்
மடைதிறந்த வெள்ளம்
பனிப்பெய்தால் சாலையெங்கும்
பழுதடைந்து நிற்கும் வாகனங்கள்
காற்றடித்தால் தெருவெங்கும்
கட்டையாய் சரிந்திடும் மரங்கள்
இலையுதிர் காலமென்றால்
இயங்கமறுக்கும் புகையிரதம்
இல்லையா இங்கே இனிமையான உணர்வுகள் ?
இரவிரவாய் மதுவருந்தி , இல்லம்
இருந்து இரா நிலயில் அவர்க்கு ஓர் மகிழ்ச்சி
கோடைகாலத்திலே
கோலங்களைப் பார்க்கணுமே
உடலை மூடும் உடையெல்லாம்
உண்மையாக ஒரு முழமே
அதுவும் ஓர் மகிழ்ச்சி அவ்ர்களுக்கு
வெப்பம் கூடினால் ஓடிடுவார்
வெண்மணற் கடற்கரைக்கே
ஆசிய மக்கள் எமக்கெல்லாம்
அடிமனதில்
அடங்காத எண்ணமொன்று
நிறத்தாலே எமைப் பிரித்து
நிச்சயமாய்
நீங்காத வேற்றுமை அளித்திடுவார்
நினைவெல்லாம் இதுவேதான்
என்னவென்று சொல்லுவேன் ?
திறமை உண்டென்றால் தடையின்றி
திறக்கும் வழி எமக்கு இவ்வூரில்
கல்வி கற்பதற்கு உள்ள வழிமுறைகள்
கடைசிவரை கைகொடுக்கும்
உழைத்துவாழ இங்கு
உண்டாமே பலவழிகள்
உண்மை மனிதர் பலருண்டு
உள்ளம் ஒன்றே அவர் சொத்தென்று
நிறங்கள் பிரிவினை
நிறைந்ததிங்கென்றால்
நிறைவாய் வாழும் பல தமிழர்
நிறைவதன் மர்மமென்ன?
ஒன்று சொல்வேன் கேளீர் !
லண்டன் என்னும் நகர்
லட்சங்கள் பலவற்றை
லட்சியத்தோடு வாழும்
லட்சண மனிதருக்கு அளித்ததுண்டு
காலநிலை
கவலைதான்
நிறப்பிரிவும் நிஜம்தான்
ஆனாலும் தோழனே
தாயகத்திற்கடுத்து எமை
தாலாட்டி வளர்த்த
தரமான லண்டன்
தப்பாமல் லட்சணம்தான்.
நன்றி - சத்தி சக்திதாசன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

