03-22-2004, 11:46 PM
கல்லறைகள் கருத்தரிக்கின்றன..!
புல்லும் கொடுமையினால் போர்வாளாய் நிமிர்கையிலே
புவியில் ஒருபுரட்சி மென்பூக்களினால் வெடித்திடாதோ?
அல்லும் பகலும் தமிழரின்னும் அமைதியற்றுத் தவிப்பதற்கு
அந்நியர் கொடுமையென்று அனைவருமே உரைத்தனரே
எல்லைகள் தாண்டிவந்து எமதீழமண்ணில் புகுந்து - எதிரி
எம்மினத்தை அழிக்கையிலே கல்லறைகள் கருத்தரிக்கின்றன..
சொல்லுக்குள் அடங்கிடாத சோகத்தில் துவண்டதையும்
சூழ்ந்திருந்த எதிரிகளின் சூட்சுமங்களை அறிந்ததையும்
கல்லும் கவிபாடும் எங்கள் காதல் தேசத்துமைந்தர்கள்
காவியம் படைத்துப் பலகரும்புலிகள் களமாடியதையும்
மெல்ல உரைத்திட்டால் மேனியெங்கும் சிலிர்த்திடும் - இந்த
மேதினி அறிந்திடத்தான் மென்கல்லறைகள் கருத்தரிக்கின்றன..
கொல்லும் படைவந்து கொய்தவுயிர்களின் கணக்கென்ன
கோயில்பள்ளி ஆலயங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததென்ன
நெல்வயலும் நிலபுலமும் நீண்டவெம் தொழில்வளமும்
நீர்அணையும் நிறைந்தவெம் நித்திய வாழ்வும் வீடுகளும்
கல்விக்கூடமும் கலைபயிலும் பள்ளிகளும் கருகியதால் - எம்
கண்மணிகள் உறங்குகின்ற கல்லறைகள் கருத்தரிக்கின்றன..
பல்கலைக்கழகம் துறந்து படிப்புடன் தொழில் மறந்து
பாழும் கொடுமையினால் பாயும்புலிகளாய் பரிணமித்ததும்
வெல்லும் எங்கள்தேசமென்று வெகுண்டெழுந்த மக்களின்
வேர்களும் விழுதுகளும் விடுதலைப்புலிகளானதால் - கொடும்
செல்லென்ன பம்பரென்ன சிதைத்திடுமோ எமது தாகத்தை
சீறிவந்தவேங்கைகளின் சிவந்த கல்லறைகள் கருத்தரிக்கின்றன..
மல்லுக்கு வந்தவர்க்கு மரியாதைசெய்வது முறையல்லவே
மார்தட்டி நிமிர்ந்து எழுந்து எம்மானத்தைக் காத்திடத்தான்
மில்லரும் எத்தனையோ பலமேஜர்களும் நிமிர்ந்தெழுந்தார்
மீட்டிடுவோம் மண்ணையென்று மூச்சாக மோதிநின்றார்
வல்லவர் புலிகளென்று வளிமொழிந்தது உலகமின்று - அந்த
வரலாற்று வார்த்தைகளாலேயே கல்லறைகள் கருத்தரிக்கின்றன..
வில்லிலிருந்த அம்புகளாக வேங்கைகள் புறப்பட்டபோதும்
வீழ்த்திடுவோம் என்று அரசு விமானக்குண்டு வீசிப்பார்த்து
வெல்வது கடினமென்று புலிகள்வேகத்தைக்கண்டு தடம்மாறி
விரும்பியழைத்தது சிங்களம் விடுதலையை திசைதிருப்பிடவே
கல்லறையில் துயில்பவருடன் கலைந்திடுமோ எம்கனவு - எதிர்
காலத்தின் கணிப்பினால் ஈழத்தில் கல்லறைகள் கருத்தரிக்கின்றன.
-அம்பலவன் புவனேந்திரன், ஜேர்மனி.
நன்றி: 'மண்' சஞ்சிகை.

.