03-22-2004, 01:47 PM
இதுவா தருணம்?
கருணா கருணா இதுவா தருணம்?
உலகமே நேற்று
இலங்கையை உற்றுப் பார்த்தது!
இழந்து இழந்து நொந்த
ஈழத் தமிழினத்தின்
இன்னல் தீரும் கீற்றொளி தெரிந்தது!
ஒன்றுபட்ட தமிழர்க்கு
உதவிகள் நிதியாய்
நீளும் என்ற நம்பிக்கை தெரிந்தது!
தமிழர் தாயகம், சுய நிர்ணயம்
தன்னாட்சிக் குரல் கேட்டு
தென்னிலங்கைச் சிங்களம்
திகைத்து விழித்தது!
யாருமே கோராத
தேர்தல் ஒன்று வந்து,
இலங்கை வரலாற்றின்
புதியதோர் பக்கத்தை
எழுத வேண்டிய
அவலம் நேர்ந்தது!
மாவீரராய் மாண்டு மறைந்த
ஆயிரம் ஆயிரம் வீரரின்
உயிர்த் தியாகத்தால்
நேர்ந்த விளைவிது!
இந்த வேளையில்,
இந்த வேளையில்
புலி ஏன் கருணா
புல்லைத் தின்றது?
எதிரியை வென்ற
உனது வீரம் -
இயக்கப் பணிகளில்
உனது அர்ப்பணம் -
யாரிதை மறுப்பார்?
பொங்கு தமிழில்
புலிகளே தமிழர்
என்ற பெருங்குரலால்
வானமே அதிர்ந்ததைக்
கண்டவர் நாங்கள்!
ஈழத் தமிழர், விடுதலைப் புலிகள்,
இணைந்த பலத்தால்
தீர்வு கிடைக்கும்
திருப்பம் நேரும் என்ற
எண்ணம் பிறந்த வேளையில்
பூ10கம்பமாய்ப் புறப்பட்டு
பிளவுபட்டு நிற்பதற்கு
இதுவா கருணா தருணம்?
தமிழர் கண்ணீர்
குருதியாய்க் கசிய
சோற்றுக் கவளம்
தொண்டைக் குழியில்
இறங்க மறுக்க
சாவீடாய்ப் போனது
தமிழர் இல்லம்!
தகுமா கருணா
இது தகுமா?
இதுவா தருணம்?
கண்டவன் எல்லாம்
காறித்துப்பி,
கைகொட்டிச் சிரிக்கும்
காலம் நேர்ந்தது
கொள்கையை மாற்றிக் கொள்
கருணா!
எங்கள் குழந்தைகள்
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க வேண்டாமா?
ம.சண்முகநாதன்
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (21.03.04)
கருணா கருணா இதுவா தருணம்?
உலகமே நேற்று
இலங்கையை உற்றுப் பார்த்தது!
இழந்து இழந்து நொந்த
ஈழத் தமிழினத்தின்
இன்னல் தீரும் கீற்றொளி தெரிந்தது!
ஒன்றுபட்ட தமிழர்க்கு
உதவிகள் நிதியாய்
நீளும் என்ற நம்பிக்கை தெரிந்தது!
தமிழர் தாயகம், சுய நிர்ணயம்
தன்னாட்சிக் குரல் கேட்டு
தென்னிலங்கைச் சிங்களம்
திகைத்து விழித்தது!
யாருமே கோராத
தேர்தல் ஒன்று வந்து,
இலங்கை வரலாற்றின்
புதியதோர் பக்கத்தை
எழுத வேண்டிய
அவலம் நேர்ந்தது!
மாவீரராய் மாண்டு மறைந்த
ஆயிரம் ஆயிரம் வீரரின்
உயிர்த் தியாகத்தால்
நேர்ந்த விளைவிது!
இந்த வேளையில்,
இந்த வேளையில்
புலி ஏன் கருணா
புல்லைத் தின்றது?
எதிரியை வென்ற
உனது வீரம் -
இயக்கப் பணிகளில்
உனது அர்ப்பணம் -
யாரிதை மறுப்பார்?
பொங்கு தமிழில்
புலிகளே தமிழர்
என்ற பெருங்குரலால்
வானமே அதிர்ந்ததைக்
கண்டவர் நாங்கள்!
ஈழத் தமிழர், விடுதலைப் புலிகள்,
இணைந்த பலத்தால்
தீர்வு கிடைக்கும்
திருப்பம் நேரும் என்ற
எண்ணம் பிறந்த வேளையில்
பூ10கம்பமாய்ப் புறப்பட்டு
பிளவுபட்டு நிற்பதற்கு
இதுவா கருணா தருணம்?
தமிழர் கண்ணீர்
குருதியாய்க் கசிய
சோற்றுக் கவளம்
தொண்டைக் குழியில்
இறங்க மறுக்க
சாவீடாய்ப் போனது
தமிழர் இல்லம்!
தகுமா கருணா
இது தகுமா?
இதுவா தருணம்?
கண்டவன் எல்லாம்
காறித்துப்பி,
கைகொட்டிச் சிரிக்கும்
காலம் நேர்ந்தது
கொள்கையை மாற்றிக் கொள்
கருணா!
எங்கள் குழந்தைகள்
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க வேண்டாமா?
ம.சண்முகநாதன்
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (21.03.04)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

