03-22-2004, 11:25 AM
தாத்தா
எவரையும் தனிப்படத் தாக்கி எழுதுவது எனது வழக்கம் இல்லை இது வரை காலமும் நான் எழுதி வந்த கருத்துக்களை பார்த்தால் அது புரியும்
ஆளவந்தான் சொன்ன கருத்துக்கு நீங்கள் சொன்ன பதில் மழுப்பாலாக இருந்ததால் சீண்டிப் பார்க்கலாம் என நினைத்தேன் அதனால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்
அவர் சொன்னது சரியாகக் கூட இருக்கலாம் அது தவறு என்று கூட நான் சொல்லமாட்டேன் ஒரு இயக்கத்தின் கொள்கைகளால் கவரப் படுவதோ அவர்களுடன் சேர்வதோ உங்கள் உரிமை அதை நான் மறுக்கவில்லை
அதைப் போன்று கண்மூடித் தனமாக விடுதலைப் புலிகளையோ தலைவர் பிரபாகரனையோ நான் ஆதரித்து கருத்து எழுதவில்லை எனக்கு சரி என்று பட்டதை எழுதுகின்றேன் பிழை என்றால் சுட்டியும் காட்டுவேன் கருணா அம்மான் விடயத்தில் அவரை துரோகி என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் எழுதிய கருத்து இன்னமும் கருத்துக்களத்தில் தான் இருக்கின்றது
அதே போன்று நான் சொல்வதுதான் சரி என்று வாதாடவும் வரவில்லை ஆனால் எமது பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதுதான் எனது மட்டுமல்ல எமது மக்கள் அனைவரினதும் விருப்பம் அது விடுதலைப் புலிகள் என்றால் என்ன மாற்று இயக்கம் என்றால் என்ன யார் குற்றியானாலும் அரிசியானால் சரி என்ற நிலமையில் தாம் நாம் எல்லோரும் இருக்கின்றோம்
ஆரம்பகாலம் முதலே பொருந்தாத இரு தரப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி,விடுதலைப் புலிகள் இதனால் இருபக்கமும் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் அரசியல் நட்டங்கள் அதிகம்
அதே போன்று ஆரம்பகாலத்தில் மோதிக்கொண்ட இயக்கங்கள் ரெலோவும் விடுதலைப் புலிகளும் இதனால் இருபக்கமும் ஏற்பட்ட அழிவும் நிரைய
இறுதியாக இந்திய இராணுவ காலகட்டத்தில் மோதிக் கொண்டவர்கள் விடுதலைப் புலிகளும் E.P.R.L.F உம்
இப்படி காலாகாலத்துக்கும் மோதிக்கொண்டவர்கள் இன்று ஒரே தரப்பாக ஒருமித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு விடுதலைப் புலிகள் மேல் கொண்ட பயம் காரணமாக இருக்கமுடியாது அவர்களுக்கு நிகராக ஒரு காலத்தில் போராடியவர்கள் இன்று ஒரு நிலைப்பாட்டுக்குள் வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு வெறுமனே அரசியல் சுயலாபங்கள் காரணமாக இருக்க முடியாது போராட்டத்தில் ஏற்பட்ட களைப்பும் காரணமாக இருக்க முடியாது
அந்த ஏதோவொரு காரணம் மக்களுக்கு நன்மைதரும் என நினைக்கிறோம் அதே போன்று மக்களும் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிடுபவர்களிலும் பார்க்க தமக்கு தெரிந்தவர்களே மேல் என்ற நிலையில் ஆதரவு தெரிவிக்கிறார்கள்
நீங்கள் சொல்வதைப் போன்று ஒரு நியாயமானதும் மக்கள் மயமானதுமான சக்தியிடம் தமிழ் மக்களின் தலைவிதி வரும் வரைக்கும் காத்திருப்பதற்கு எதிர்த்தரப்பு விடப் போவதில்லை
அதனால் நாங்கள் ஆரம்பித்த போராட்டம் எங்கள் தலைமுறையிலேயே முடிவுக்கு வரவேண்டும் அதற்காக இன்னொரு சக்தியை எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட இருப்பதிலேயே உருப்படியானவர்களிடம் இந்தப் பிரச்சனையை ஒப்படைப்பதுதான் சரி
நீங்கள் சொல்வது போல விடுதலைப் புலிகள் ஒரே நாளில் ஆயுதத்தை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும் அங்கே அவர்கள் உயிர் இலங்கை இராணுவத்தால் பறிக்கப் படுவது மட்டுமல்ல தமிழரில் பாதிப்பேருக்கு மேல் காணாமல் போய்விடுவார்கள்
அரை குறையான ஒரு தீர்வு எஞ்சியிருப்பவர்களிடம் வழங்கப்பட்டு அதனை ஏற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் படுவார்கள் இதற்கெல்லாம் ஆயுதப் போராட்டம் ஒரு விதத்தில் காரணியாக இருக்கலாம் ஆனால் காலத்துக் காலம் ஏற்பட்ட கசப்பாண உண்மைகளின் படி அதுவும் நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட ஒன்று
எனவே தூக்கிய ஆயுதத்தை வைப்பதற்காண வேளை வரும் வரை காத்திருப்போம் அல்லது அதற்காண தருணத்தை உருவாக்குவோம்
உங்களுக்கு

\" \"