Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்ணே நீயும் பெண்ணா
#2
அன்னையர் தினம் எமக்குத் தேவையா?


எமது இனம் அன்னையை போற்றித் துதிக்கும் இனம். பெண் தெய்வங்களை நிறையக் கொண்ட திருநாடு. பெண்மை போற்றப்படுகிறது, பேணப்படுகிறது, தாய்மை போற்றப்படுகிறது. பருவமடைதலைக்கூட பகிரங்கப்படுத்திவிழா எடுத்து பெண்மைக்கு அங்கீகாரம் கொடுத்து அவளை பெரியவர்களுக்கு சமனான அந்தஸ்த்தில் உயர்த்தி வைக்கிறோம் என கூறுவதோடு இவ்வளவு காலமும் இவள் எனது பெண் இனி இவளை பாதுகாப்பது இந்த ஊரின் கடமையாகிறது வேறு ஒரு ஆடவனுடன் மம்மல் பொழுதில் கண்டுவிட்டால் ஊரே பொல் எடுக்கும் என்றெல்லாம் கூறிப் பெருமைப்படத்தான் முடிகிறது. இது வேண்டுமானால் ஏட்டிலும் எழுத்திலும் பேச்சிலும் தொனிக்கலாம். தாய்மையின் வாழ்வு அலங்கோலமாகி சீழ் ஒழுகி நாறுகிறது. எமக்கெதற்கு அன்னையர் தினம்? தங்கமுலாம் பூசி தாய்மையை போற்றித் துதிக்கிறோம் என மினுக்க நினைக்கிறோம். வேண்டாம் எமக்கு அன்னையர் தினம்.

அன்னையின் அன்பு வற்றாத நதி, அட்சய பாத்திரம். பொங்கி பிரவாகிப்பது என்றால் அன்னையின் அரவணைப்புத்தான். அன்னையானவள் தன்குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதிலேயே கரைந்து போகக்கூடியவள். ஆனால் அந்த தாய்மைக்கு மதிப்பு கொடுக்கிறோமா?

ஒரு பெண் திருமணத்திற்கு முன் தாய்மை அடைந்து விட்டால் அவளை தள்ளி வைக்கிறோம். அவளை தற்கொலைக்கு கூட தள்ளி விடுகிறது சமூகம். ஒரு பெண்ணால் தனித்து கருத்தரிக்க முடியுமா என்ன? ஆண் தண்டனையில் இருந்து தப்புவதோடு வேறுபெண்ணையும் திருமணம் முடித்து விடுகிறான். இது ஆணாதிக்க உலகம் அப்படித்தான் செய்யும். எங்கே தாய்மைக்கு மதிப்பளிக்கிறீர்கள்? அன்னை தாய்மை எல்லாம் வெறும் ஏட்டளவில் தான். இல்லை என்றால் சிசுக்கொலை நடக்குமா? நெல்மணிகளை தொண்டைக்குள் செருகி சிசுக்கொலை. அச்சிசுவை கொலை செய்யத்தூண்டியது எது? இந்த ஆணாதிக்க சமூகம் தானே. குழந்தையை குப்பைத்தொட்டியிலே போடுகிறோம். ஏன்? தாய்மையை மதிக்காத சமூகம் தானே.

தெருக்குத்தெரு வீதிக்கு வீதி ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் எத்தனை? ஏன்? ஆண் தப்பிலிருந்து தப்பிக்கும் மனோபாவம் தானே. ஆனால் உலகமே தாய்மையை நோக்கித்தானே புழுதி வாரி இறைக்கிறது. அதனால் கருத்தடை மாத்திரைகள் கூட தாய்மையை நோக்கித்தானே படை எடுக்கிறது.பெண்ணை மலடாக்கும் முயற்சி.சிந்திக்க ஓர் விடயம். எப்படி என்றால் ஒரு பெண் கருத்தரித்து பத்து மாதங்களின் பின்னரே மீண்டும் கருத்தரிக்க முடியும். ஆனால் ஒரு ஆணால் தொடர்ந்து பல பெண்களை கருத்தரிக்கச் செய்ய முடியும். அப்படி இருக்க எப்படி பெண்ணை மட்டும் மலடாக்கும் முயற்சி? ஆணையும் அல்லவா மலடாக்கல் நிகழ வேண்டும். இது ஆணாதிக்க உலகம் அப்படித்தான் செய்யும். எங்கே தாய்மை போற்றப்படுகிறது. மதிக்கப்படுகிறது?

கணவன் இறந்து விட்டால் பூ , பொட்டு, பட்டெடுத்து வெள்ளைச்சேலையை கொடுத்து விடுகிறது. நல்ல நிகழ்ச்சிகளில் இருந்து அவளைத் தள்ளி வைத்து விடுகிறது. அதுவும் இளம் பெண்ணாக இருந்து விட்டால் காம வெறியோடு பார்க்கும் கண்கள் தான் அதிகம். எங்கே தாய்மை போற்றப்படுகிறது?

விளம்பரங்களில் பெண்ணை ஆபாசமாக்கி பணம் பெறுகிறது. சினிமாவிலோ கமறா பெண்ணின் உடலை அங்குலம் அங்குலமாக ரசித்து பணம் பண்ணுகிறது. அழகிகள் போட்டி வைத்து பெண்களை விற்கிறது, முதலாளித்துவ ஆணாதிக்கம். பெண்ணை விற்றால் என்ன, தாயை விற்றால் என்ன, நாட்டை விற்றால் என்ன. எங்கே தாய்மையை போற்றி துதிக்கிறோம்.?

ஏன் வேலைக்குப் போகும் பெண்ணிடம் எனக்கு எத்தனை குழந்தைகள்? இனி கருத்தரிப்பியா? என்றெல்லாம் கேட்டுக் குடைகிறது முதலாளித்துவ ஆணாதிக்கம். என்னுடன் வேலை செய்யும் போத்துக்கல் நாட்டைச் சேர்ந்த பெண் , ஏழு வருடமாக பிள்ளைப்பேறு கிடைக்காமல் தற்போது கருத்தரித்துள்ளாள். அவளின் ஆனந்தம் சொல்லி மாளாது. ஆனால் எங்கள் முதலாளியோ சீறிச்சினந்ததுதான் மிச்சம். அண்மையில் கூட டென்மாக்கில் தாய்மை அடைந்துள்ள பெண்ணை முதலாளி தாய்மை அடைந்துள்ளாள் எனும் காரணம் காட்டி அவளை வேலையில் இருந்து நீக்கியதாக டென்மாக் செய்தி கூறி நின்றது. அத்தோடு ஓர் தமிழ்ப் பெண்ணை வதிவிட அனுமதி கிடைக்காத காரணத்தால் ஒன்றரை வயதுடைய குழந்தையை தகப்பனுடன் விட்டுவிட்டு அப்பெண்ணை மட்டும் நாடு கடத்தியதே. எங்கே தாய்மை போற்றப்படுகிறது.?

போர் மேகங்கள் சூழ்ந்த நாடுகளில் ஆதிக்க ராணுவத்தினரால் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதும் கருத்தரித்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும், ஏன் முதாட்டிகளைக்கூட தம் காம இச்சைக்கு ஆளாக்குவதும் இன்று சர்வ சாதாரணமாக நடந்தேறி முடிகிறது. அத்துடன் புலம்பெயர்ந்து வரும் பெண்களைக் கூட முகவர்கள் விட்டுவைப்பதாய் இல்லை. சிறையில் அடைக்கப்பட்ட பெண்களை சிறைக்காவலாளி முதல் உயர்மட்ட பொலிஸ்காரர் வரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்குவதும் விருப்பின்றி சிங்களக் குழந்தைகளை சுமப்பதுவும் சிறைக்கதவுகளுள் இருட்டடிப்பாய் நிகழும் கொடுமை. எங்கேதாய்மை பேற்றப்படுகிறது.?

இந்தியாவிலோ கட்டிய மனைவியை, சொந்த சகோதரியை பாலியல் வியாபாரம் செய்யும் நோக்குடன் சகோதரன், கணவனாலேயே விற்கப்படுகிறார்கள்.

வேசி தாசி என்று வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்க்கிறோம். யாரை பாலியல் தொழில் செய்யும் பெண்களை. உண்மையிலேயே ஓர் பெண் தன் உடலை ஒரு போதும் விற்கத் துணிய மாட்டாள். இப்பிடியான நிலைக்கு தள்ளியது யார்? எமது சமூகம். எப்படி? பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை எம் சமூகம் ஒதுக்குகிறது. திருமணத்திற்கு முன் தாய்மை அடைந்த பெண்ணை ஒதுக்குகிறோம். அவர்களை ஆண் சமூகம் காமம் கலந்த கழுகுப்பார்வையுடன் பார்த்து அலைகிறது. இச் சமூகத்தால் ஒதுக்கப்படும் நாம், சாவின் விளிம்புக்கே தள்ளப்படும் நாம் ஏன் அச்சாக்கடையில் விழக் கூடாது என நினைத்து வாழ வழி தெரியாமல் விருப்பின்றி அச்சாக்கடையில் விழுந்து தொலைக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? எமது சமூக அமைப்பும் பெண்ணை துச்சமாக நினைக்கும் பொறுக்கித்தனமும் தானே. விபச்சார தொழில் செய்யும் பெண்ணை ஒதுக்கும் எம் சமூகம் அவர்களுடன் போகும் ஆணை ஏன் ஒதுக்குவதில்லை. அதற்கு அழகாக பழமொழியும் வேறு. அவன் ஆம்பிளை. சேறு கண்ட இடத்திலை மிதிச்சு தண்ணி கண்ட இடத்திலை களுவுவான் என. இது ஆணாதிக்க சமூகம் அப்படித்தான் சொல்லும். எங்கோ தாய்மையை போற்றுகிறோம், துதிக்கிறோம்.?

சங்க கால இலக்கியத்தில் பார்த்தால் கண்ணகி தெய்வமாக்கப்பட்டாள் எதற்காக? கோவலனை ஆடல் மங்கையிடம் சரச மாட விட்டபடியால். அக் கோவலன் அவ் ஆடல் மங்கையை தன் வசப்படுத்த எவ்வளவு மிரட்டியிருப்பானோ யாருக்குத் தெரியும். அரசனாயிற்றே. வாளைக் கூட கழுத்து நேரே பிடித்திருப்பானோ என்னவோ. மாறி கண்ணகி வேறு ஒரு ஆடவனுடன் சரசமாடியிருந்தால், நாமெல்லாம் கண்ணகி தெய்வமாக்கப்பட்டாள் என படித்திருக்கமாட்டோம். கழுவில் ஏற்றப்பட்டாள் என்றே படித்திருப்போம். நளாயினி தன் கணவனை கூத்தி வீட்டிற்கு கூடையில் சுமந்து சென்றதால் போற்றப்படுகிறாள். அதே மாறி நளாயினி வேறு ஓர் ஆடவனுடன் கணவனே விட்டான் என்றால் குடும்பமே புதைக்கப்பட்டது என்றே படித்திருப்போம்.

கோபால கிருஸ்ணன் கோபியரின் சேலையை திருடி சேட்டை விட்டான். அப்பப்பா அதெல்லாம் கடவுளின் லீலைகள். அதை ஒரு பெண்கடவுள் ஆண்களின் உடைகளை திருடி லீலைகள் புரிந்திருந்தால் பிசாசாக, குண்டோதரியாக, மண்டோதரியாக, சூர்ப்பனகையாக கதையே புனைந்திருப்பார்கள்.

ஆண்கள் பேனாவை கையில் எடுத்து ஆதிக்கம் செலுத்தியதால் தான் தங்களுக்கு சாதகமாக எழுதிவைத்தார்கள். இலக்கியத்தில் தம் பெயர் பட்டியலிடப்பட வேண்டும் என்பதற்காக வேண்டுமானால் பெண்மையை போற்றுகிறோம், துதிக்கிறோம் என ஆண்கள் எழுதலாம். ஆனால் ஆணாதிக்க சமூக அமைப்பில் தாய்மை அழுகி , புழுத்து நாறுகிறது. இதற்குள் எமக்கு அன்னையர் தினம் ஒரு கேடா?

இருந்தாலும் கூட சற்று தெம்பு தரக் கூடிய வகையில் இன்று பெண்கள் கல்வியறிவில் சிறந்தவர்களாக வளர்ந்து வருகிறார்கள். நிறையவே சிந்திக்கிறார்கள். பல புதிய பெண் எழுத்தாளர் வளர்ந்து வருகிறார்கள். தம் இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை அக்கு வேறு ஆணிவேறாக்கி இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு சாவுமணி அடிக்க துணிகிறார்கள். சகல நிர்வாகங்களிலும் தடம் பதிக்கிறார்கள். குசுனியும் படுக்கை அறையும் தான் உலகம் என்ற நிலை மாறி உலகே வீடென்றாகி வருகிறது. குழந்தையைப் பெறுவது என்பது பௌதீகத்தன்மை வாய்ந்த உடல் ரீதியான விசயங்களைப் பெண்களால் தான் செய்ய முடியும். குழந்தையை வளர்ப்பது போன்ற விடயங்களில் ஆண்கள் தம்மை இணைக்கலாம். தாய்மை என்பது ஓர் குண இயல்பு. இந்த குண இயல்பு ஆண்களுக்கும் உண்டு. ஆண்கள் தம்மை குழந்தை வளர்ப்பில் ஈடுபடுத்த தவறினால் நாம் கட்டிக்காத்து வரும் இந்த குடும்ப அமைப்பு நிச்சயமாக சிதறி சுக்கு நூறாகி விடும்.

அடுத்ததாக இந்த அன்னையர் தினத்தை நாம் கொண்டாடுவோமேயானால் குழந்தைகள் இல்லாது தவித்து தத்தளிக்கும் பெண்ணை நாம் காயப்படுத்துவதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே குழந்தைப்பாக்கியம் இல்லை என்றாலே அவளை எம் சமூகம் மலடி என பெயர் சூட்டி ரணப்படுத்தி மங்களகரமான நிகழ்சியின் போது தள்ளி வைக்கிறது

பெற்றால் தான் ஓர் பெண்ணுக்கு தாய்மை உணர்வு உண்டா என்ன. ஒவ்வொரு பெண்ணிடத்திலுமே தாய்மை உணர்வு குடி கொண்டு தான் இருக்கிறது. எம் சமூகம் ரணப்படுத்தியது காணாது என்று அன்னையர் தின விழா வேறு எடுத்து அவர்களை காயப்படுத்த நான் விரும்பவில்லை. எம் ஆணாதிக்க சமூக அமைப்பால் ரணப்பட்டு ரணப்பட்டு காயப்பட்டு, காயப்பட்டு சீழும், சிதழும் வடிந்து நாற்றமெடுக்கும் தாய்மைக்கு அன்னையர் தினம் ஒரு கோடா? தாய்மையை போற்றுகிறோம் , துதிக்கிறோம் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டுமே. குற்றுயிரும், குலை உயிருமாய் இருக்கும் தாய்மையை அழகுபடுத்தி போலிக் கௌரவம் கொடுத்து அரியாசனத்தில் ஏற்றி தமக்குத்தாமே மகுடம் சூட்டப் பார்க்கிறது மகுடம் வைத்த முட்டாள் ஆணாதிக்க உலகு.

நன்றி - நளாயினி தாமரைச்செல்வன்


நளாயினி அக்கா எழுதி யாழில் வந்த இந்த கட்டுரையை இன்னைக்கு பொருந்தமா இருக்கிறதால இங்கே போட்டிருக்கேன். இதை படிச்சுட்டு உங்க கருத்தை எழுதுங்க
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 03-21-2004, 07:00 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 08:07 PM
[No subject] - by Aalavanthan - 03-22-2004, 08:24 PM
[No subject] - by Aalavanthan - 03-22-2004, 08:27 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 08:43 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 10:44 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 10:57 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 11:45 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 01:59 AM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 02:04 AM
[No subject] - by Mathan - 03-23-2004, 02:22 AM
[No subject] - by kaattu - 03-23-2004, 04:48 AM
[No subject] - by nalayiny - 03-23-2004, 07:32 AM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 12:36 PM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 03-23-2004, 12:45 PM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 03:52 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 04:18 PM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 04:43 PM
[No subject] - by vallai - 03-23-2004, 04:57 PM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 05:00 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 07:35 PM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 07:49 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 09:52 PM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 10:28 PM
[No subject] - by anpagam - 03-24-2004, 12:43 AM
[No subject] - by sOliyAn - 03-24-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 01:30 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 01:32 AM
[No subject] - by sOliyAn - 03-24-2004, 01:35 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 02:06 AM
[No subject] - by sOliyAn - 03-24-2004, 02:15 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 02:36 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 02:40 AM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 12:07 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 12:19 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 12:36 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 12:51 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 01:06 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 01:18 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 01:28 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 01:40 PM
[No subject] - by sOliyAn - 03-24-2004, 01:50 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 01:51 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 01:57 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 01:58 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 02:05 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 02:15 PM
[No subject] - by anpagam - 03-24-2004, 02:19 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 02:24 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 02:26 PM
[No subject] - by anpagam - 03-24-2004, 02:29 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 02:39 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 03:18 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 03:24 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 03:34 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 04:06 PM
[No subject] - by kuruvikal - 03-24-2004, 04:18 PM
[No subject] - by nalayiny - 03-24-2004, 08:40 PM
[No subject] - by Eelavan - 03-24-2004, 09:02 PM
[No subject] - by nalayiny - 03-24-2004, 10:01 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 10:05 PM
[No subject] - by nalayiny - 03-24-2004, 10:43 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 11:02 PM
[No subject] - by anpagam - 03-24-2004, 11:35 PM
[No subject] - by sOliyAn - 03-25-2004, 12:03 AM
[No subject] - by nalayiny - 03-25-2004, 08:10 AM
[No subject] - by nalayiny - 03-25-2004, 08:34 AM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 09:39 AM
[No subject] - by nalayiny - 03-25-2004, 01:57 PM
[No subject] - by anpagam - 03-25-2004, 02:11 PM
[No subject] - by nalayiny - 03-25-2004, 02:14 PM
[No subject] - by anpagam - 03-25-2004, 02:21 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 04:43 PM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 05:37 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 06:20 PM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 06:40 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 07:06 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 07:10 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 07:12 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 07:18 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 07:20 PM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 07:20 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 07:23 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 07:23 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 07:27 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 07:33 PM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 07:35 PM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 08:19 PM
[No subject] - by Mathivathanan - 03-25-2004, 08:31 PM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 08:43 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 08:55 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 08:56 PM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 09:20 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 09:25 PM
[No subject] - by anpagam - 03-25-2004, 11:23 PM
[No subject] - by Mathan - 03-26-2004, 12:02 AM
[No subject] - by sOliyAn - 03-26-2004, 12:10 AM
[No subject] - by anpagam - 03-26-2004, 12:14 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:23 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 12:06 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:15 PM
[No subject] - by sOliyAn - 03-27-2004, 11:40 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:54 PM
[No subject] - by sOliyAn - 03-27-2004, 11:56 PM
[No subject] - by Eelavan - 03-28-2004, 02:45 AM
[No subject] - by kuruvikal - 03-28-2004, 10:01 AM
[No subject] - by Mathan - 03-28-2004, 11:47 AM
[No subject] - by Mathan - 03-28-2004, 11:50 AM
[No subject] - by Eelavan - 03-28-2004, 01:58 PM
[No subject] - by Mathan - 03-28-2004, 04:29 PM
[No subject] - by Eelavan - 03-28-2004, 04:42 PM
[No subject] - by Mathan - 03-28-2004, 04:43 PM
[No subject] - by Mathan - 03-28-2004, 11:58 PM
[No subject] - by Kanani - 03-29-2004, 12:21 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 12:22 AM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 12:25 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 12:34 AM
[No subject] - by Mathivathanan - 03-29-2004, 12:37 AM
[No subject] - by Eelavan - 03-29-2004, 12:43 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 12:46 AM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 01:13 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 01:22 AM
[No subject] - by Eelavan - 03-29-2004, 01:38 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 01:46 AM
[No subject] - by sOliyAn - 03-29-2004, 02:15 AM
[No subject] - by Eelavan - 03-29-2004, 05:09 AM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 03:36 PM
[No subject] - by Eelavan - 03-29-2004, 03:43 PM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 04:10 PM
[No subject] - by Eelavan - 03-29-2004, 04:18 PM
[No subject] - by Mathan - 03-29-2004, 11:18 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 07:00 PM
[No subject] - by Mathan - 04-19-2004, 11:04 PM
[No subject] - by Mathan - 04-20-2004, 11:27 AM
[No subject] - by Mathan - 04-20-2004, 12:11 PM
[No subject] - by Mathan - 04-20-2004, 12:13 PM
[No subject] - by Mathan - 04-20-2004, 01:29 PM
[No subject] - by Mathan - 05-22-2004, 01:55 AM
[No subject] - by kuruvikal - 05-22-2004, 02:23 AM
[No subject] - by shanmuhi - 05-22-2004, 06:17 PM
[No subject] - by Mathan - 06-05-2004, 03:36 AM
[No subject] - by Mathan - 06-05-2004, 03:39 AM
[No subject] - by kuruvikal - 06-05-2004, 12:28 PM
[No subject] - by Mathan - 06-11-2004, 10:57 PM
[No subject] - by kuruvikal - 06-12-2004, 03:07 PM
[No subject] - by kuruvikal - 06-12-2004, 03:23 PM
[No subject] - by Mathan - 07-24-2004, 10:39 PM
[No subject] - by tamilini - 07-25-2004, 03:22 PM
[No subject] - by kuruvikal - 07-25-2004, 06:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)