03-21-2004, 03:17 PM
<img src='http://www.thinakural.com/2004/March/21%20Sunday/front.gif' border='0' alt='user posted image'>
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் தோன்றியிருக்கும் நெருக்கடிý குறித்து தென்னிலங்கையின் பிரதான அரசியல் முகாம்கள் ஆரம்பத்தில் 'நிதானமான" போக்கைக் கடைப்பிடிýத்திருந்த போதிலும், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வியாழக்கிழமை பிரிட்டிýர்; ஒலிபரப்புக் கூýட்டுத்தாபனத்தின் (பி.பி.சி.) கொழும்புச் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசனுக்கு அளித்திருக்கும் பேட்டிýயில் தெரிவித்திருக்கும் சில கருத்துகள் அந்த நெருக்கடிýயை தங்களுக்குச் சாதகமான முறையில் 'பயன்படுத்துவதற்கான" முனைப்பை வெளிக்காட்ட அவரது முகாம் ஆரம்பித்திருப்பதை உணர்த்துவதாக இருக்கின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிýருக்கும் முன்னாள் மட்டக்களப்பு- அம்பாறை விசேட தளபதி கருணா, தன்னுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அதற்குப் பதிலளிக்க தான் மறுத்துவிட்டதாகவும் பி.பி.சி. பேட்டிýயில் தெரிவித்திருந்த திருமதி குமாரதுங்க தேர்தலுக்குப் பிறகு அரசாங்கம் விடுதலைப் புலிகளின் 'ஏற்றுக்கொள்ளப்பட்ட" தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் விவகாரங்களைக் கையாள வேண்டிýயிருக்கும். ஆனால், கருணாவுடன் விவகாரங்களைக் கையாளுவதற்கான வழிவகைகளையும் அரசாங்கம் கண்டறிய வேண்டிýயேயிருக்கும் என்றும் குறிப்பிட்டிýருக்கிறார்.
கருணாவுடனான தகராறை அடுத்து விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் இரு வாரங்களுக்கு முன்னர் வன்னி கிளிநொச்சியில் நடத்திய விசேட செய்தியாளர்கள் மாநாட்டிýல் அவ்வியக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கருணா இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவித்திருந்தாலும், வன்னியிலிருந்து விடுதலைப் புலிகள் தரப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர்வதற்கு தாமதிப்பதை கருணாவின் 'பலமாக" திருமதி குமாரதுங்கவின் முகாம் நினைப்பது போல் தோன்றுகிறது. இதன் பிரதிபலிப்பே திருமதி குமாரதுங்க தனது பேட்டிýயில், அரசாங்கம் கருணாவுடன் விவகாரங்களைக் கையாளவேண்டிýய வழிவகைகளையும் கண்டறிய வேண்டிýயிருக்கும் என்று தெரிவித்த கூýற்று என, கருதுவதற்குக் காரணம் இருக்கிறது.
கருணாவின் செயற்பாடுகளினால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் தோன்றியிருக்கும் நெருக்கடிýக்கு இரத்தம் சிந்தாமல் தீர்வைக் காண்பதில் பற்றுறுதி கொண்டிýருப்பதாக அதன் தலைமைத்துவம் திரும்பத் திரும்ப கூýறி வருகின்றபோதிலும் இயக்கத்திற்குள் பெரும் மோதலை இந்த நெருக்கடிý உருவாக்கக் கூýடும் என்று தான் நம்புவதாகவும், இறுதியில் விடுதலைப் புலிகள் பலவீனமடைவர் என்றும் திருமதி குமாரதுங்க கூýறியிருக்கிறார்.
பலம் பொருந்திய நிலையில் உள்ள விடுதலைப் புலிகளுடன் அல்ல பலவீனமான நிலையில் இருக்கக் கூýடிýய ஒரு விடுதலைப் புலிகளுடன் தான் தங்களுக்கு அனுகூýலமான முறையில் 'சமாதானப் பேச்சுவார்த்தைகளை" முன்னெடுக்கக் கூýடிýயதாக இருக்கும் என்ற தென்னிலங்கை சிங்கள அரசியல் வர்க்கத்தினர் மத்தியிலான 'பாரம்பரிய நம்பிக்கையை" அடிýப்படையாகக் கொண்டு நோக்குகையில் திருமதி குமாரதுங்கவின் இக்கருத்துகளும், எதிர்பார்ப்புகளும் ஒன்றும் புதிரானவையல்ல என்று சில அரசியல் அவதானிகள் கூýறுகின்றனர்.
இதேவேளை, விடுதலைப் புலிகள் மத்தியில் தோன்றியிருக்கும் நெருக்கடிýயை 'கட்சியரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக" கொழும்பு அரசியல் முகாம்கள் பயன்படுத்த நினைத்து மேற்கொள்ளக்கூýடிýய எந்தச் சாகசமுமே நெருக்கடிýயை மேலும் தீவிரமடையச் செய்யும் என்று பிரபல அரசியல் அவதானியும், கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை தலைவருமான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட, எச்சரித்திருப்பதை இங்கு சுட்டிýக்காட்டுவது பொருத்தமானது.
இது இவ்வாறிருக்க கருணாவின் விவகாரத்தின் பின்னணியில் இருக்கக் கூýடிýய வெளிநாட்டுச் சக்திகள் குறித்து அரசியல் அவதானிகள் எனப்படுவோர் பலவித சந்தேகங்களைக் கிளப்பியிருந்தாலும் தங்களுக்கு ஆபத்தில்லாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்த வெளிச் சக்திகளை வெளிப்படையாக இனம் காட்டுவதற்கு அவர்கள் தயாரில்லை என்றாலும், பின்னணியில் இருக்கக் கூýடிýய வெளிச் சக்திகளில் சிலவற்றை விடுதலைப் புலிகள் அண்மைய சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே கூýறத் தயங்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இது இவ்வாறிருக்க கருணா விவகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கக்கூýடிýய தென்னிலங்கை அரசியல் சக்திகள், மீண்டும் ஒரு போர் மூýலம் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான எண்ணமொன்றைக் கொண்டிýருப்பதாகவும் பேசப்படுகிறது.
கருணா விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டு நிற்பதாலும், அவருக்குப் பின்னால் கணிசமான 'போராளிகள்" தற்போதைய நிலையில் இருப்பதாலும், இலங்கைப் படைகளுக்கு சாதகமானதொரு நிலையைக் கிழக்கில் ஏற்படுத்திக் கொண்டு வடக்கு முனையில் மாத்திரம் போரை வன்னி நோக்கித் திசை திருப்பி, விடுதலைப்புலிகளை ஒடுக்க முடிýயும் என்ற இந்த தென்னிலங்கைச் சக்திகளுக்கு ஒரு வெளிநாட்டுத் தரப்பினால் ஆலோசனை கூýறப்பட்டுள்ளதாக, தன்னை இனங்காட்டிýக் கொள்ளவேண்டாமெனக் கேட்டுக்கொண்ட மேற்குலக இராஜதந்திர வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
கிழக்கு முனையை அமைதியாக வைத்திருப்பதற்கு கருணாவைப் பயன்படுத்துவதில் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கும் என்று நம்புவதற்கு காரணமெதுவுமில்லை.
நன்றி : தினக்குரல். (21.03.2004)