03-21-2004, 02:45 PM
<b>குழப்பத்தில் கருணா குழு</b>
துரோகத்தின் உச்சியில் நின்று சாதனை புரிந்திருக்கும் கருணாவும் அவரது கும்பலும் இப்போது ஆப்பிழுத்த குரங்குகளாக நின்று தவிக்கிறார்கள் என்பது தெளிவாகி வருகிறது. ஈழத்தமிழ் மக்களால் துரோகி என்று வெறுத்தொதுக்கப்பட்டது மட்டுமல்லாமல்இ நம்பியிருந்த பல தரப்புகளினாலும் கைவிடப்பட்ட நிலையில் கருணாவும் அவரது அடியாள்களும்இ என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் நாளொரு பேட்டியும் பொழுதொரு குழுப்பமுமாக நின்று திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
கருணாவின் காட்டிக் கொடுப்புக்குக் காரணமாக அமைந்த அடிப்படை அம்சங்கள் அனைத்தும் உள்ளுரிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் தமிழர்களுக்கு அம்பலமாகிவிட்டதால் கருணா கும்பலை ஈழத்தமிழ்ச் சமுதாயம் சரியாக அடையாளம் கண்டு ஒதுக்கியது மட்டுமல்லஇ வெறுக்கவும் தொடங்கிவிட்டது. ஈழத்தமிழர்கள் மத்தியில் செல்வாக்குமிக்க தமிழ் ஊடகங்களும் கருணாவின் நயவஞ்சகச் செயலுக்குத் துணைபோக மறுத்ததுமல்லாமல்இ அவரின் உண்மைச் சொரூபத்தைப் புட்டுப்புட்டுக்காட்டவும் தொடங்கிவிட்டன. அதனால் ஏற்பட்ட கோபத்தினால் மட்டக்களப்புஇ அம்பாறைக்கு விநியோகத்துக்குப் போகும் தமிழ்ப் பத்திரிகைகளை - ஆயுதத்தைக்காட்டி மிரட்டி - விநியோகிக்க விடாமல் தடுத்திருக்கின்றது அக்கும்பல்.
பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம். அதுபோன்று மட்டக்களப்புஇ அம்பாறைக்குச் செல்லும் - உண்மையை விளம்பும் - பத்திரிகைகளை விநியோகிக்கவிடாமல் தடை செய்துவிட்டால் உண்மையை மூடிமறைத்துவிடலாம் என்று கருணா கூட்டம் கனவு காண்கின்றது. உண்மையை - யதார்த்தத்தை - புரிந்துகொள்ளாத இதே போக்கில்தான் - கிழக்குத் தமிழர்களையும் உண்மையை மறைத்துஇ பிழையான வழியில் கொண்டு நடத்தலாம் - என்ற பகற்கனவில்தான் தமக்குக் கிடைத்த கிழக்குத் தளபதி என்ற பதவியைத் துரோகத்தனத்துக்கும் நயவஞ்சகத்துக்கும் வாய்ப்பான போக்கில் பயன்படுத்த முயன்றிருக்கின்றார் கருணா.
ஆள்வைத்து பத்திரிகைகளைத் தனது பிரதேசத்துக்கு வரவிடாமல் தடுத்துஇ மிரட்டிஇ பத்திரிகையாளர்களை எதிர்த்த கருணா கூட்டம்இ தமக்கும் அந்தச் செயலுக்கும் தொடர்பேதுமில்லை என்று இப்போது வெளியுலகத்துக்கு கயிறு விடுகின்றது.
"தமிழீழம் பகற்கனவுஇ தமிழர் தாயகம் என்ற பேச்சுக்கு இடமில்லைஇ பிரபாகரன் தமிழரின் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார்" என்று கடந்த இருவாரங்களாக இந்திய மற்றும் தென்னிலங்கைப் பேரினவாதிகளின் ஊடகங்கள் மூலம் பிதற்றிய கருணாஇ கிழக்குத் தமிழ் மக்களுக்கு வேறு வேடம் போட முயல்கிறார். நேற்றுமுன்தினம் அன்னை பூபதியின் நினைவு நிகழ்வில் பேசிய கருணாவின் எடுபிடியான விசுஇ நாங்கள் தமிழீழப்போராட்டத்துக்குத் துரோகம் செய்யமாட்டோம் - என்கிறார்.
மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அழைத்து "தமிழ்த் தாயகம் குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது பேசக்கூடாதுஇ மட்டக்களப்புஇ அம்பாறை அபிவிருத்தி குறித்து மட்டுமே பேசவேண்டும்" - என்றும் மிரட்டிய கருணா குழுஇ அந்தப்போக்கு கிழக்கு மக்களால் அடியோடு நிராகரிக்கப்படும் என்பது புரியத் தொடங்கியதும்இ இப்போதுஇ அப்படி அறிவுறுத்தல் ஏதும் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்களிடம்இ தெரிவிக்கப்படவில்லை என்று பச்சைப் பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றது. தனித்து இயங்குவது என்ற துரோக நடவடிக்கைக்குக் கருணா தயாரானதும் தமக்கு ஆதரவு தேடுவதற்காகத் தென்னிலங்கையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கஇ இலங்கை அரசு போன்ற பல தரப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தத் துடியாய்த் துடித்தார். அதற்காகப் பல வழிகளாலும் முயன்றார். அவர்களோடு இணைந்து செயற்படுவதன் மூலம் தனது துரோகத்தன நடவடிக்கைகளை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று அவர் கனவு கண்டார்.
அரசுடனும் ஜனாதிபதியுடனும் தொடர்புகொள்ள அவர் பட்டபாட்டை செய்தி ஊடகங்கள் அப்போதே அம்பலப்படுத்தின. ஒரு தமிழினத் துரோகியுடன் சக வாசம் வைத்துஇ மோசமான விளைவுகளை எதிர்கொள்ள அத்தரப்புக்கள் விரும்பவில்லை என்ற செய்தியும் அப்போதே வெளியாகின. இப்போது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே அதைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தியதும் வழமை போல முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கமுயலும் தமது அணியின் முயற்சியை அவர் அவிட்டு விட்டிருக்கின்றார். ஜனாதிபதியுடன் தொடர்புகொள்ளத் தாங்கள் முயற்சியே எடுக்கவில்லை என்கிறார் கருணா கும்பலின் பேச்சாளர் வரதர்.
இப்படித் தங்களின் ஒவ்வொரு முயற்சியும் தோற்றுப்போய்இ உண்மைகள் அம்பலமாகத் தொடங்கியதும்இ என்ன செய்கின்றோம்இ என்ன கூறுகின்றோம் என்பது புரியாமல் குழப்பமான பேட்டிகளையும் தகவல்களையும் அளிப்பதோடுஇ குழப்பமான செயல்களையும் புரியத் தலைப்பட்டுள்ளது கருணா கூட்டம். மட்டு.இ அம்பாறை தளபதியாக இருந்துகொண்டு கருணா புரிந்த குற்றங்களை மூடி மறைப்பதற்காக இன விடுதலைப் போராட்டத்தையே விலைபேசி ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குளறுபடிகள் கருணா கும்பலை இன்று குழப்பத்தின் உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றது என்பதே உண்மை.
நன்றி: உதயன் (21-03-2004)