Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழ்வது எதற்காக..?
#3
shanmuhi Wrote:நாம் ஏன் எதற்கு உயிர் வாழ்கிறோம்.

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துதான் வாழ்கிறோமா....? ? ?

வாழ்வது எதற்காக..?
ஒரு இலட்சிய நோக்கை அடைவதற்காகவா...? ? ?

அல்லது

சாவதற்காகவா வா...? ? ?

மனிதவாழ்வின் அர்த்தம் என்ன?
ஷண்முஹியின் கேள்விக்குள் பதிலும் இருக்கும் அதிசயம்தான் மனிதவாழ்க்கை.
அந்த அர்த்ததை தேடுவதுதான் மனித வாழ்வின் சாரம்சம்.

மனிதன் சிரிக்கவும் சிந்திக்கவும் பேசவும் எழுதவும் தொடங்கியது எப்போதோ அப்போதே அர்த்தம் தேடும் படலம் தொடங்கிவிட்டது. கடலாலும் காடுகளாலும் மலைகளாலும் நதிகளாலும் பலைவனங்களாலும் பனிப்பிரதேசங்களாலும் தனித் தனி தீவுகளாக இயற்கையின் சிறையில் இருந்த பல்வேறு மனித சமூகங்கள் தமது வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப சிந்திக்கவும் பேசவும் எழுதவும் முற்படுகையில் 'மதம்' தான் முதலில் மனிதவாழ்வின் அர்த்தம் பற்றி பேசியது. இனம் என்ற கருத்துரு தோன்றமுதல் மதம் மிகபலமாக இருந்தது. மனித வரலாற்றுக் கட்டங்களில் ஒன்றான இன்றைய உடமைசார் சமூகத்தில்தான் மனிதவாழ்வின் அர்த்தம் பல்வேறு பரிணாமங்களுக்கூடாக பார்க்கப்படுகிறது: பார்க்கக்கூடியாதாகவும் இருக்கிறது.

ஆக, தனது இருப்பின் அர்த்தம் என்ன என்பதை அலசுவதே தனது வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தரும் என்பதே வாழ்வின் அர்த்தமாகிவிட்டது.

மாக்ஸ் கூறியது போல் ''இந்த உலகு பற்றி வியாக்கியனம் அல்ல நம் முன் உள்ள கேள்வி இந்த உலகை எப்படி நாம் மாற்றி அமைக்க போகின்றோம் என்பதுதான்'' மனிதவாழ்வின் அர்த்தம் என்பது இன்னும் பேசாப் பொருள்.
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply


Messages In This Thread
[No subject] - by phozhil - 03-19-2004, 12:33 PM
Re: வாழ்வது எதற்காக..? - by thampu - 03-21-2004, 02:43 PM
[No subject] - by shanmuhi - 03-21-2004, 07:39 PM
[No subject] - by kaattu - 03-22-2004, 07:37 PM
[No subject] - by shanmuhi - 03-22-2004, 07:52 PM
[No subject] - by kaattu - 03-22-2004, 07:57 PM
[No subject] - by shanmuhi - 03-22-2004, 08:01 PM
[No subject] - by kaattu - 03-22-2004, 08:04 PM
[No subject] - by Aalavanthan - 03-22-2004, 08:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)