03-21-2004, 02:21 PM
<b>கருணா மீது மட்டு-அம்பாறை மாவட்ட மக்கள் அதிருப்தி</b>
( ஐ.பி.சி தமிழ் ஞாயிற்றுக்கிழமை, 21 மார்ச் 2004, 7:19 ஈழம் )
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள முன்னாள் தளபதி கருணா மீது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்கள் படிப்படியாக அதிருப்தியடைந்து வருதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை மீது பல பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதனை மக்கள் நம்புமாறு செய்வதற்கு முயன்று வந்த கருணாவும், அவரது ஆதரவாளர்களும் இப்போது மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழந்து வருவதையும் அறியமுடிகிறது.
தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளான வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசம், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் ஆகிய கோரிக்கைகளுக்கு எதிராக கருணாவின் ஆதரவாளர்கள் வெளியிட்டு வந்த கருத்துக்கள் காரணமாக, கருணாவின் உண்மைத் தோற்றத்தை மட்டக்களப்பு வாழ் மக்கள் அறிந்து கொண்டுவிட்டதாகவும் மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தனது தவறுகளை மறைப்பதற்காக கருணா ஆதரவாளர்களால் கிளப்பிவிடப்பட்ட பிரதேச வாதமும் தற்போது மழுங்கிவிட்டதாகவும் அறியக் கிடைத்துள்ளது.தியாக தீபம் அன்னை புூபதியின் நினைவாக நடாத்தப்பட்ட எழுச்சிப் பேரணியை, திடிரென கருணா ஆதரவுப் பேரணியாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான கரிகாலன், ரமேஷ், பொட்டம்மான் ஆகியோருக்கு எதிரான போராட்டமாகவும் மாற்றுவதற்கு கருணாவின் ஆதரவாளர்கள் முயற்சிகள் எடுத்தமையாலும், பேரணியில் கலந்துகொண்ட மக்கள் விசனம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்னை புூபதியின் நினைவாக ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் பேரணியை, கருணா ஆதரவுப் பேரணியாக லண்டன் பி.பி.சி. உட்பட பல உள்ளுர், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : புதினம்.கொம்